முத்தரையர்கள் வளர்த்த நீர் மேலாண்மை வரலாறு பதிவு-2
முத்தரையர் மன்னர்கள் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கியவர்கள். பல ஆயிரம் ஆண்டுகளாக நீர் மேலாண்மையை உருவாக்கியும்,பராமரித்தும் வருகின்றனர்.ஏராலமான முறைகளில் முத்தரையர்கள் நீர் மேலாண்மையை வளர்த்துள்ளனர்.
அதில் ஒன்றுதான் ஏரி,பெரும்கம்மாய்களில் அமைத்துள்ள குமிழித்தூம்புகள்...
குமிழி:
இந்த குமிழித்தூம்புகள் மடை பகுதிக்கு முன்னதாகவும்,சில ஏரிகளில் மையப்பகுதியிலும் அமைக்கப்பட்டிருக்கும்.
இருபுறம் தூண்களும் நடுவில் கம்பி மூலம் மதகு அடைக்கப்பட்டு இருக்கும்.
நீர் விவசாயத்துக்கு தேவைப்படும் போது அந்த கம்பிகளை மேலே தூக்கி மதகு திறக்கப்பட்டு நீரானது விவசாய நிலத்துக்கு பாய்ச்சப்படும்.அந்த நேரத்தில் மதகுக்கு கீழ்புறம் உள்ள சேறோடித்துளைகள் வழியில் சேற்கள் தேக்கி வைக்கப்படும்.நீர் மட்டுமே விவசாய நிலத்துக்கு செல்லும் வகையாக இந்த குமிழித்தூம்புகள் அமைக்கப்படும்.இவ்வாறு முத்தரையர்கள் சிறந்த நீர் மேலாண்மையை உருவாக்கி மக்களுக்கு பயன்படும் வகையில் பல குமிழித்தூம்புகளை அமைத்து நாட்டை செலிப்பாக ஆட்சி செய்துள்ளனர்.
Keep Visit @ Emergency Shop Shutter Repair London
ردحذف