Breaking

السبت، 29 يناير 2022

يناير 29, 2022

சூரிய குல சத்திரிய சோழ முத்தரையர் மன்னர்கள்

 சூரிய குல சத்திரிய சோழ முத்தரையர் மன்னர்கள்


🙏சூரிய குல சத்திரிய சோழ #முத்தரையர் மன்னர்கள்

கிமு இரண்டாம் நூற்றாண்டு சோழன்

மனுநீதிச் சோழன் (எல்லாளன்)  மாட்டிற்க்கு நீதி கொடுத்த மன்னர் நீதி அரசன் தான் பெற்ற மகனையே தேரில் ஏற்றி கொண்று மாட்டிற்க்கு  நீதி வழங்கிய சோழன் #மனுநீதிச் சோழன் 🙏🙏


முத்தரையர் வரலாறு தேடல் வாட்சாப் குழுமம் 🙏

يناير 29, 2022

சூரிய குல சத்திரிய சோழ வழியோன் முத்தரையர் வரலாறு

 சூரிய குல சத்திரிய சோழ வழியோன் முத்தரையர் வரலாறு


#சோழ_முத்தரையர் வரலாற்றின் தொடக்கபுள்ளி💛❤️


சூரியகுல சத்திரிய சோழ முத்தரையர் மன்னர்கள் 


கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்க்கு முற்பட்ட சோழ மன்னர் #சிபி_சோழன் பருந்திற்க்கு பயந்து தன்னிடம் தஞ்சம் புகுந்த புறாக்களின் பசியை போக்க தனது தொடையை அறுத்து புறாக்களின் எடைக்கு சமமாக உனவளித்த வள்ளல் #சிபி_சோழ_முத்தரையர் 💛❤️


முத்தரையர் வரலாறு தேடல்

يناير 29, 2022

சோழ தேசத்துப் பூர்விக மன்னர்கள்

 சோழ தேசத்துப் பூர்விக மன்னர்கள்


வரலாறை மறைப்பது என்பது பெற்ற பிள்ளையை தாயிடம் இருந்து மறைப்பதற்க்கு சமமானது.

சோழ தேசத்துப் பூர்விக மன்னர்களின் பெயர் அட்டவணை என்று 2011ஆம் ஆண்டு திரு.மணிகண்டன் என்பவரால் எழுதப்பட்டு தமிழ் இலக்கியதுறை சார்பில் இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில்
    1)கி.பி ஆறாம் நூற்றாண்டு முதல் எட்டாம் நூற்றாண்டு காலத்தில் முத்தரையர் மன்னர்களின் நேரடி கட்டுப்பாடிலே இருந்தது சோழ மண்டலம்.அப்படி இருக்க இந்த நூலில் அது பற்றி  ஒரு குறிப்புகூட இல்லை.
    2)ஏழாம் நூற்றாண்டில் யார் ஆண்டார்கள் என்று குறிப்பிடாமல் அப்பர்,சம்பந்தர் உள்ளீட்டோரை பற்றி கூறி முத்தரையர்களை மறைத்துள்ளார் நூல் ஆசிரியர்.
    3)எட்டாம் நூற்றாண்டில் ஆழ்வார்களை பற்றி எழுதி முத்தரையர்களை மறைத்துள்ளார்.
   4)கி.பி ஆறு,ஏழு,எட்டாம் நூற்றாண்டுகளில் இந்த அட்டவணையில் முத்தரையர்கள் என்ற மன்னர்களே  இல்லாத போது எப்படி ஒன்பதாம் நூற்றாண்டில் விஜயாலயசோழன் முத்தரையர்களிடம் இருந்து சோழ தேசத்தை மீட்டார்??????
   5)தமிழ் குடி மன்னர் முத்தரையர் வரலாற்றை மறைத்த உங்களுக்கு வந்தேரி மன்னர்களின் வரலாற்றை கூறுவதில் எவ்வளவு ஆர்வம்.நாயக்க மன்னர்கள்,இஸ்லாம் மன்னர்கள்,மராத்திய மன்னர்கள்,ஆங்கிலேயர்கள் என அனைவரையும் சரியாக குறிப்பிட்டுள்ளார்.இந்த புத்தக ஆசிரியர்.

முத்தரையர் வரலாறுகள் திட்டமிட்டே மறைக்கப்பட்டுள்ளது.

மீள்வோம்! முத்தரையர் வரலாற்றை உலகறிய செய்வோம்.

இவண்
  ஏ.எஸ்.கலையரசன் அம்பலகாரர் 
  முத்தரையர் வரலாறு ஆய்வுக்கூடம்


يناير 29, 2022

முத்தரையர் சமூக குடிப்பெயர்கள்

  முத்தரையர் சமூக குடிப்பெயர்கள்


முத்தரையர் சமுக குடிப்பெயர்கள் பதிவு-1

அடைக்கலம்,அடைக்கப்பன்,அடைக்கன்

                  தமிழ் பெயர்களில் முக்கியமான ஒரு பெயராக இந்த அடைக்கன், அடைக்கப்பன், அடைக்கலம் என்ற பெயர்கள் உள்ளது. இந்த பெயர் எதனால் இவ்வளவு சிறப்பு வாய்ந்தது என நாம் பார்கவேண்டும்.

அதிலும் இந்த பெயரை 100க்கு 99% பெயர் கொண்ட  சமுகம் முத்தரையர் சமுகமே.


பொருள்:

    அடைக்கலம்,அடைக்கப்பன்,

அடைக்கன் என்ற பெயர்களில் அடை என்ற சொல் அடிப்படையாக கொண்டுள்ளது.அடை என்பது சேர்தல்,தஞ்சமைடைதல் என குறிக்கிறது.மேலும் அடை என்ற ஒரு வகை உணவும் உள்ளது.பெயர்களில் அடை வருவது பெரும்பாலும் அடைக்கலம் என்ற பெயரை மையமாக கொண்டே அடைக்கன்,அடைக்கப்பன் என்ற பெயர்கள் உள்ளது.


அடைகலம் என்பது ஆபத்தான நிலையில் இருக்கும் நபர்,யாரிடம் சென்றால் பாதுகாப்பாக இருப்போம் என்று அவர்களை சேர்வது,பாதிக்கப்பட்டவர்களை பாதுகாத்து ஆதரவு கொடுப்பதே அடைக்கலம்.


சிவன் அடைக்கலம்:

         உலகாலும் எம்பெருமான் சிவபெருமானை போற்றும் விதகமாக மாணிக்கவாசகர் திருவாசகத்தில் அடைக்கலப்பத்து என்று பத்து பாடல்களாக பாடியுள்ளார். பரம்பொருளை நாடி வருவோரை தம்மில் அடைக்கலம் கொடுத்து காப்பவராக கூறியுள்ளார். 

ஒரு பாடல்: 

(எ.கா)

    பெரும் பெருமான் என் பிறவியை

         வேர் அறுத்துப் பெரும் பிச்சித்

    தரும் பெருமான் சதுரப் பெருமான்

         என் மனத்தின் உள்ளே

     வரும் பெருமான் மலரோன்

        நெடுமால் அறியாமல் நின்ற 

    அரும் பெருமான் உடையாய் 

           அடியேன் உன் அடைக்கலமே.

                         நீ பிறவியைப் போக்குபவன்,

பக்திப் பித்தைப் பெருக்கு பவன்,

எதையும் சாதிப்பவன்,சித்தமிசை குடிகொள்பவன்,ஜுவபோதம் படைத்த அயனுக்கும் அரிக்கும் எட்டாதவன்,ஜீவர்களை உடையவன்,ஆதலால் நீமதாதேவன்,

உன்னிடம் அடைக்கலம் புகுகிறேன்.

இவ்வாறு அடைக்கலம் என்ற சொல் சிவபெருமான் பெயர்களில் ஒன்றாகவும் உள்ளது. திக்கிட்டவனுக்கு தெய்வமே துணை என்பதற்கேற்ப பரம்பொருளான சிவபெருமானை நாடி செல்வோரை எவ்வாறு அடைக்கலம் கொடுத்து காக்கின்றாறோ அதை போல முத்தரையர் சமூக மக்கள் தங்களை நம்பி வருபவர்களை அடைக்கலம் கொடுத்து காப்பவர்களே. ஆகையால், அடைக்கலம் என்ற பெயரை முத்தரையர் சமூகம் மிகுதியாக கொண்டுள்ளது.

மேலும் முத்தரையர் சமூக குல தெய்வ வழிபாட்டில் சுவாமி அடைக்கலம் காத்த அய்யனார் சாமி மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாகவும், முக்கிய வழிபாட்டு தெய்வமாகவும் கருதப்படுகிறது.


இதை மையமாக கொண்டே முத்தரையர் சமுகத்தில் அடைக்கலம்,அடைக்கன்,அடைக்கப்பன் என்ற பெயர் நிலைபெற்றுள்ளது.

இதே போல பெண்கள் பெயராக அடைக்கி,அடைக்கம்மாள் போன்ற பெயர்கள் உள்ளது.


குறிப்பாக: பொன்னமராவதி,தில்லைக்காடு,நத்தம்,

திருமயம் போன்ற பகுதிகள் சுவாமி அடைக்கலம் காத்த அயயனார் கோவில் அமைந்துள்ளது.

#அடைக்கன் #அடைக்கலம் #அடைக்கப்பன்

இங்ஙனம்

   ஏ.எஸ்.கலையரசன் அம்பலகாரர்

   முத்தரையர் வரலாறு ஆய்வுக்கூடம்

يناير 29, 2022

தேவேந்திர குல மக்களுக்கு ஊரை காணியாட்சியாக கொடுத்த முத்தரையர்கள்

தேவேந்திர குல மக்களுக்கு ஊரை காணியாட்சியாக கொடுத்த முத்தரையர்கள்



தேவேந்திர குல மக்களுக்கு ஊரை காணியாட்சியாக கொடுத்த முத்தரையர்கள்!

புதுக்கோட்டை மாவட்டம்,பொன்னமராவதி ஒன்றியம்,வலையப்பட்டி அருகே உள்ள மணப்பட்டி என்ற ஊரை காணியாட்சியாக கொடுத்த பட்டயம்.

கி.பி 18ம் நூற்றாண்டு காலத்தில் கானாட்டார்,கோனாட்டார் எல்லை சண்டையில் 22பேர் தலைப்பலி கொடுத்தனர்.அவ்வீரத்தையும்,தியாகத்தையும் போற்றி நல்லமெய்யான்,நாட்டாபிள்ளை உள்ளீட்டாருக்கு  "நாட்டான் முத்திரியன் வில்லூனி நத்தம் மணமங்கலம் நல்லூரை"
பிடார முத்திரியர்,சக்கர முத்திரியன்,
செம்ம முத்திரியர்,
காடமுத்திரியன்,குப்பிடார முத்திரியன் இவர்கள் இவ்வூரை காணியாட்சியாக கொடுத்துள்ளனர்.மேலும் இன்றவும் சுவாமி வலையப்பட்டி அடைக்கலம் காத்த ஐய்யனார் கோவில் வழிபாடு மற்றும் வலையப்பட்டி நாட்டார்களில் உள்ள கிராம நாட்டில்  இன்றளவும் நாட்டாப்பிள்ளையாக உள்ளனர்.

நன்றி.

இங்ஙனம்
  ஏ.எஸ்.கலையரசன் அம்பலகாரர்
  முத்தரையர் வரலாறு ஆய்வுக்கூடம்



يناير 29, 2022

வலையர்தடி வளரி ஆவணம்

 வலையர்தடி வளரி ஆவணம்

வலையர்தடி வளரி ஆவணம் பதிவு-16

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டம்,எடுத்தனூர் கிராமத்தில் உள்ள இரண்டு இரும்பு வலையர்தடிகள்.

வளரி  என்றாலே அது வலையர்களின் ஆயுதம்தான்.அதற்கு சான்றாக இன்றளவும் முத்தரையர் சமுகத்தில் மட்டும் வலையர்தடிகள் உள்ளது.
தம் குல தெய்வத்திற்க்கு நிகராக வளரியும் உள்ளது என்பது வளரியின் முக்கியத்துவத்தை உணரமுடியும்.

தமிழகத்தில் அதிக வளரி உள்ள மாவட்டம் என்றால் தற்போதைய எமது கணிப்புபடி அது சிவகங்கை மாவட்டம்தான்.அதற்க்கு அடுத்தபடியாக புதுக்கோட்டை மாவட்டம் உள்ளது.

எடுத்தனூரில் காவல்தெய்வமான 
சுவாமி தர்ம சாத்தார்,ஸ்ரீ பாலையடி காளி தெய்வ வழிபாட்டில் வளரி முக்கியம் வாய்ந்த ஆயுதமாக உள்ளது.
சுவாமி தர்ம சாத்தார் தெய்வம் முத்தரையர் மன்னர்களில் சாத்தன் மரபை தொடர்புப்படுத்துகினது.
புதுக்கோட்டை மாவட்ட பகுதியில் சாத்தன் மாறன்,சாத்தன் பூதி,சாத்தன் பூதிகளரி,சாத்தன் மாறன் போன்ற மன்னர்கள் ஆண்ட பூமியாகும்.அதன் தொடர்பு வம்சாவளிகள் இன்றளவும் பொன்னமராவதி வட்டார பகுதிகளில் சாத்தன் என்ற குல பட்டம் கொண்டு முத்தரையர் சமுகம் வாழ்ந்துவருகிறனர்.அதே போல சாத்தன் முத்தரையர் மரபில் வந்தவரே இந்த தர்ம சாத்தனாராக இருக்க வேண்டும்.(மேலும் விரிவான ஆய்வு செய்து முழுமையாக பதிவிடுவோம்).

நன்றி.

படஉதவி-தம்பி எடுத்தனூர் மணிகண்டன்(மு.வ.ஆ.எடிட்டர்)

இவண்
   ஏ.எஸ்.கலையரசன் அம்பலகாரர்
   முத்தரையர் வரலாறு ஆய்வுக்கூடம்



يناير 29, 2022

கண்ணப்ப நாயனார் திருமேனி

 கண்ணப்ப நாயனார் திருமேனி


கண்ணப்ப நாயனார் திருமேனி!


சிற்பத்தின் பெயர் - கண்ணப்ப நாயனார்


சிற்பத்தின் அமைவிடம் - செப்புத் 

திருமேனிகள் காட்சிக்கூடம்


ஊர் - எழும்பூர்


வட்டம் - அமைந்தகரை


மாவட்டம் - சென்னை


அமைவிடத்தின் பெயர் - அரசு மைய 

அருங்காட்சியகம், சென்னை


சிற்பத்தின் வகை - சைவம்


அளவுகள் / எடை - உயரம் 66 செ.மீ.


விளக்கம் - 

         கண்ணப்ப நாயனார் சிவபெருமானுக்காக தன் இடது கண்ணை தோண்டிய பின்பு, கையில் உள்ள கருவியால் வலது கண்ணையும் தோண்டுதல் பொருட்டு நிற்கும் காட்சி. அன்பினுக்கோர் வடிவம் தந்தாற் போன்று அடியோன் கண்ணப்பர் மரவுரியாடை தரித்தவராக, மார்பில் குறுக்காக சன்னவீரம் செல்கிறது. செவிகளில் வளையங்களும், கைகளில் வளைகளும், கால்களில் பாதணிகளும் அணிந்தபடி, தலையணி சடைமகுடமாய் திகழ, தலையை இடப்பக்கம் சாய்த்தவாறு நிற்கிறார்.


ஆக்கப் பொருள் - உலோகம்


காலம் / ஆட்சியாளர் - கி.பி.975 / முற்காலச் சோழர்


ஒளிப்படம் எடுத்தவர் - தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை


ஒளிப்படம் வழங்கிய நிறுவனம்/ நபர் - தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை

சுருக்கம் - 

         63 நாயன்மார்களுள் ஒருவரான கண்ணப்ப நாயனார் வேடுவர் ஆவார். சிவபெருமானுக்காக தன் கண்களை தந்தவர்.


நன்றி தகவலாற்றுப்படை.


இவண்

    ஏ.எஸ்.கலையரசன் அம்பலகாரர்

     முத்தரையர் வரலாறு ஆய்வுக்கூடம்

يناير 29, 2022

வேட்டுவரும் வலையரும்

 வேட்டுவரும் வலையரும்


"வேட்டுவரும் வலையரும்"

இன்று தமிழகத்தில் பல குடி மக்கள் வாழ்கிறார்கள். அனால் இவர்களில் சிலர் மட்டுமே சங்க இலக்கியத்தில் இடம் பெற்றார்கள். சங்க இலக்கியத்தில் இடம் பெற்றவர்கள் தான் மிகவும் பழமையான தமிழ் மக்கள். இவர்களில் சிலர் வேட்டுவர், வலையர், குறும்பர், குறவர், பறையர் போன்றவை. 
வலையர்கள் பண்டைய காலத்தில் வலைஞர் மற்றும் வலைவர் என்று அழைக்கப்பட்டார்கள்.

சங்க இலக்கிய நூலில் ஒன்று பட்டினப்பாலை. பட்டினப்பாலையில் ஒரு பாடல் வருகிறது. அந்த பாடலில் காவேரி பூம்பட்டினத்தில் வாழும் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும்  சந்தோசமாகவும் வாழ்ந்தார்கள் என்று வருகிறது. 

அந்த பாடல் "நீர் நாப்பண்ணும் நிலத்தின் மேலும்
ஏமாப்ப இனிது துஞ்சி 
கிளை கலித்து பகை பேணாது
வலைஞர் முன்றில் மீன் பிறழவும்
விலைஞர் குரம்பை மா ஈண்டவும்
கொலை கடிந்தும் களவு நீக்கியும்".

இந்த பாடல் நம் வலையர் குடி முன்னோர்களை பற்றி குறிப்பிட்டு பேசுகிறது. அதாவது காவேரி பூம்பட்டினத்தில் வலையர்களின் வீடு குளத்தில் மீன் துள்ளி கொண்டு இருக்கிறது என்று இப்பாடல் சொல்கிறது. சங்க காலத்தில் இருந்து இன்று வரைக்கும் வலையர்கள் காவேரி பூம்பட்டினத்தில், அதாவது நாகப்பட்டினம் மாவட்டத்தில் வாழ்ந்து கொண்டு தான் வருகிறார்கள். 

சங்க இலக்கிய பாடல்களில்  வலையர் மதுரையில் வாழ்ந்த பாடலும், தொண்டைமண்டலத்தில் வாழ்ந்த பாடலும் கூட காணலாம். ஆக வலையர்கள் அணைத்து பகுதியிலும் வாழ்ந்த பூர்வ குடி மக்கள். 

என்னதான் வலையர் என்ற பெயர் சங்க இலக்கியத்தில் தனியாக இருந்தாலும் வலையர்கள் வேட்டுவரே!
ஆம் வலையர் வேட்டுவர் தான். சொல்ல வேண்டும் என்றால் வலையரும் வேட்டுவரும் ஒரே மக்கள் தான். இதுக்கு பல ஆதாரங்கள் உண்டு. 
வாங்க பாப்போம். 

1950 வருடம் வெளிவந்த "AGRICULTURAL WAGES AND EARNINGS OF PRIMARY PRODUCERS IN CEYLON" என்கிற புத்தகத்தில் "வேடர், வலையர், வேட்டுவர்" ஒன்றாக போட்டு இவர்கள் சேலம், கோவை மாவட்டத்தில் வேட்டை குடியினர் என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள். இவர்கள் போல பலர் வலையருக்கும், வேட்டுவருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கு என்று குறிப்பிட்டு உள்ளார்கள். 

உதாரணமாக எட்கர் தர்ஸ்டன் 1909 வருடம் வெளிவந்த " CASTE AND TRIBES OF SOUTHERN INDIA" என்கிற புத்தகத்தில் வலையர்க்கும் வேட்டுவருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கு என்றும் வலையர்களின் முன்னோர் கண்ணப்ப நாயனார் என்று குறிப்பிட்டு உள்ளார். 
கண்ணப்பர் நாயனார் வேட்டுவர் குடியை சேர்ந்தவர். வலையர் மக்கள் தங்களை கண்ணப்பர் நாயனார் வழிவந்தவர்கள் என்றும் கூறி கொள்வார்கள் மற்றும் தமிழகத்தில் கண்ணப்பர் நாயனாருக்கு மிக பெரிய விழா எடுப்பது கூட வலையர்களே ஆவார்கள். ஆக இதுவும் வலையர்களும் வேட்டுவர்களும் ஒருவர் என்று நிரூபிக்கிறது. 

அது மட்டும் அல்லாமல் 1921 வருடம் வெளிவந்த "அகத்தியமகாமுனிவர் திரட்டியருளிய தேவாரத்திரட்டு" என்கிற புத்தகத்தில் வலையர்களை "கேவேடர்" என்று குறிப்பிட்டு உள்ளது. 

கி.பி 1157 வாழ்ந்த நிஷாதராஜன் என்ற ஒரு அரசன் திருமயத்தில் இருக்கும் ஒரு கோவிலுக்கு நன்கொடை செய்து உள்ளார் மற்றும் இவரின் இனத்தவர்கள் உள்வரும் வெளியேறும் வணிக பொருளுக்கும் வணிகர்களுக்கும் பாதுகாப்பு கொடுத்து உள்ளார்கள்.
இந்த நிஷாதராஜன் மன்னர் ராஜேந்திர சோழன் கேரளன் என்று அழைக்கப்பட்டார். இவர் வாழ்ந்த மற்றும் ஆட்சி புரிந்த இடம் பொன்னமராவதி. பொன்னமராவதில் வலையர்கள்  பெரும்பான்மையாக வாழும் பகுதி மற்றும் பொன்னமராவதி இன்று வலையர்களின் கோட்டையாக கருதப்படுகிறது. நிஷாதராஜன் பற்றி தகவல் 1988 வெளிவந்த "SOUTH ASIAN STUDIES" என்கிற புத்தகத்தில் குறிப்பிட்டு உள்ளது. மேலும் புத்தகத்தில் நிஷாதராஜன் அரசன் வலையர் என்று குறிப்பிட்டு உள்ளது. நிஷாதராஜன் அரசன் இயற்கையால் நிறைந்த காட்டில் வாழ்ந்த வேட்டைக்காரன். நிஷாதராஜன் என்கிற வார்த்தை சமஸ்க்ரிதம் வார்த்தை. இதுக்கு தமிழில் பொருள் "வேட்டுவராஜன் அல்லது வேட்டுவர் அரசர்". இதிலிருந்து வலையரும் வேட்டுவரும் ஒருவரே என்கிற முடிவுக்கு நாம் வரலாம். 

இது போல பல ஆதாரம் சொல்லலாம். வரும் காலத்தில் இன்றும் நிறைய பார்ப்போம். வலையர் வேட்டுவர் ஒரே மக்கள். 

💥நன்றி : வலைஞர் அரசன்

💥 மறுபதிப்பு : முத்தரையர் வரலாற்று பக்கம்

الثلاثاء، 30 نوفمبر 2021

نوفمبر 30, 2021

வீரபாண்டியனை எறிஞ்சு தலைகொண்ட கரிகால சோழன் " காலத்து சேலம் அருங்காட்சியக வீரக்கல்

 "வீரபாண்டியனை எறிஞ்சு தலைகொண்ட கரிகால சோழன் " காலத்து சேலம் அருங்காட்சியக வீரக்கல் 


இரண்டாம் பராந்தகர் தம் மக்களில் மூத்தவனான "இரண்டாம் ஆதித்யனுக்கு" இளவரசு பட்டம் கட்டினார்.


ஆற்றலும் வலிமையும் கொண்ட மாவீரனாய் திகழ்ந்த ஆதித்ய கரிகாலன் முன்பு தம் தந்தையால் சுரம் இறக்கப்பட்ட வீரபாண்டியனை சேவூர் என்னுமிடத்தில் எதிர்கொண்டான் !


இந்த வீரபாண்டியன் சோழர்க்கு அடிபணியாமல் சுதந்திர ஆட்சி செய்து வந்தான், ஏதேனும் ஒரு சோழனை கொன்றமையால் தம்மை "சோழன் தலை கொண்ட வீரபாண்டியன்" என்று அழைத்துக் கொண்டான்.


ஆதித்யன் இவனை சேவூரில் கொன்று பாண்டிய நாட்டை சோழர் ஆட்சிக்கு கீழ் கொண்டுவந்து தாம் பூண்ட பெயரே, மறந்தாலும் மறையாத பட்டமான " வீரபாண்டியன் தலை கொண்ட கொபரகேசரி".


வடக்கே காஞ்சியில் தங்கியிருந்து சோழரின் வடவெல்லையை விரிவுறச் செய்தான், ஆதித்யன் சூழ்ச்சியால் இளவயதிலேயே கொல்லப்பட்டான், அதில் இன்றும் மர்மம் நிலவுகிறது.


இவனின் கல்வெட்டுகள் அதே கம்பீரமான பட்டபெயருடன் காணக்கிடைகின்றன, அவற்றுள் சேலம் அருகே பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயிலில் காணக்கிடைக்கும் கல்வெட்டு மேற்கு தமிழகத்தில் கிடைக்கும் முக்கிய கல்வெட்டு ! அதேபோல் நாமக்கல் மாவட்டம் ரெட்டிபட்டியில் கிடைத்த வீரக்கல்லில் ஆதித்த கரிகாலன் குறிப்பு கிடைக்கிறது ! அந்தக் கல் தற்போது சேலம் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகிறது !


கொடுக்கமங்கலத்தின் ஆரையன் ஆயிரவன் இளஞ்சிங்க முத்தரையன் என்பான் பகைவர்கள் கவர்ந்து சென்ற ஆநிரைகளை மீட்க அவர்களோடு சண்டையிட்டு வீரமரணம் எய்துகிறான் ! அவனுக்காக ஆயிரவன் ஏகவீர முத்தரையன் என்பவர் எடுத்த வீரக்கல் !


வீரபாண்

டி கனை எறிஞ் 

சு தலை கொ

ண்ட கலி(ரி)

கால சோழ 

 ற்குச் செல்லா 

நின்ற யா 

ண்டு நாலா 

வது கொ 

டுக்க 

மங் 

கல 

த்தி 

லிருக்கும் ஆரைய 

ன் ஆயிர 

வனான 

இளஞ் 

சி 

ங்க மு 

ததரை 

யன்த 

ன்னு 

ர்க்காலி


இது வீரபாண்டியனை எறிஞ்சு தலைகொண்ட கரிகால சோழனின் நாலாவது ஆட்சியாண்டில் எடுக்கப்பட்டுள்ளது 


இந்த மன்னன் சுந்தர சோழரின் மூத்த  மகனான இரண்டாம் ஆதித்தன் எனும் ஆதித்த கரிகாலன் ! முதலாம் இராஜராஜனின் அண்ணண் 


பொதுவாக வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி அல்லது பாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி என்று காணப்படும்  ஆதித்தன் கல்வெட்டு இங்கு வீரபாண்டியனை எறிஞ்சு தலைகொண்ட கரிகால சோழன் என்று குறிக்கப்பட்டுள்ளது சிறப்பு

نوفمبر 30, 2021

தானமநாடு சேந்தன்குடி ஜமீன் வழுவாடிதேவர்

 தானமநாடு 

 ஜமீன் வழுவாடிதேவர்




முத்தரையர் ஜமீன் என்பதை சொல்லும் பழனி_கோவில் செப்பு பட்டயம்

முத்தரையர் செப்பேடு

இடம்:
காலம்: செய்தி:

கோவை மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், சுணியூர் கலியுகம் 4774:சகம 1596, கி.பி.1673,

முத்தரையர் தோற்றம், பெருகி வளர்ந்த வரலாறு, குடியேறிய இடங்கள், ஆட்சி செய்த இடங்கள், செய்த திருப்பணிகள் இவைகளை விரிவாகக் கூறி அவர்கள் அனைவரும் கூடி பழனியில் மடம் ஒன்று கட்டி அதற்குக் கொடுக்க வேண்டிய சமுதாய வரி முதலியவைகளை இச்செப்பேடு விளக்குகிறது. பழனியில் ஒன்று கூடிய வன்னிமுத்தரசர் முத்தரையர்கள் இனத்தைச் சேர்ந்தவர். கி.பி. 1674ஆம் திருவாவினன்குடிக்குக் கீழ்புறம், சரவணப் பொய்கைக்குத் ஆண்டு தென்மேல்புறம் மடம் ஒன்றைத் தங்கள் பெயரில் உருவாக்கினர். வேலாயுத உடையான் மகன் கொளந்தைவேலு உடையான் வசம் மடத்தை நிர்வாகத்துக்கு அளித்தனர். முத்தரையர்கள் அனைவரும் பெரிய ஊருக்கு 10 பணமும், சிறிய ஊருக்கு 5 பணமும் கொடுக்க வேண்டும் பண்ணையத்துக்கு 2 பணமும், பயலாள்கள் ஒரு பணமும் கொடுக்க வேண்டும். திருமணத்திற்கு மாப்பிள்ளை வீடும் பெண் வீடும் இரண்டிரண்டு பணம் கொடுக்க வேண்டும் தேருக்கு ஒரு பணம் கொடுக்க வேண்டும். குற்றத்திற்கு விதிக்கும் தண்டனைப் பொருளில் மூன்றில் ஒன்று மடத்திற்குக்கொடுக்க வேண்டும் மடத்தில் பரதேசிகட்கு உப்பு, ஊறுகாய், நீராகரம் கொடுக்க வேண்டும். அடியார்கட்கு அன்னமிட வேண்டும் என்று விரிவாகச் செப்பேடு எழுதி கொளந்தைவேலு உடையான் வசம் கொடுத்தனர். இச்செப்பேட்டு வாசகம் எழுதியவர் இராமசாமிக் கவிராயர்
என்பவர்.