Breaking

الأربعاء، 19 ديسمبر 2018

வலையர் வளரி பற்றிய தொகுப்பு

வளரி அறிமுகப்படுத்திய முதல்குடி நாம்தான்.கொல்லிமலையில் உள்ள நமது முப்பாட்டனார் சிலைகள் சொல்லும் வரலாறு...







          வளரி என்னும் ஆயுதமானது மரத்தாலும்,இரும்பினாலும் ஆன எரிதடியாகும்.இதை ஆரம்பகாலத்தில்  வேட்டை தொழிலிலுக்கு தமிழ் தொல்குடியான வலையர் சமுகத்தினர் பயன்படுத்திவந்தனர்.வேட்டையின் போது மான்,புலி,கரடி போன்ற கொடிய மிருங்களை காலில் தாக்கி ஓடவிடாமல் தடுக்க பயன்படுத்தினர்.அதன் பின்னர் ஈட்டி,அம்பு போன்றவற்றை பயன்படுத்தி மிருகங்களை வேட்டையாடிவந்தனர்.குறிப்பாக ஊருக்குள் நுளைந்து மக்களை வேட்டையாடும் மிருங்களை வளரியால் வீழ்த்தினர்.பின் வளரியை போருக்கும்,காவலுக்கும் பயன்படுத்தினர்.
பூமராங்
    இது ஆஸ்திரேலிய ஆதிவாசிகளால் பயன்படுத்தியுள்ளனர்.இதை பூமராங் என்று அழைக்கின்றனர்.இது மரத்தால் ஆனவை..
வளரியின் பெயர்கள்:         
                   திகிரி,வளரி,  வளையம்,வளிதடி
,எரிதடி,வளைதடி,பாறைவளை,சுழல்படை,எரிகோல்,குறுங்கோல்,தடி என பல பெயர்களில் வளரி குறிக்கப்படுகிறது.
வளரி வகை:
                 வளரி மரத்தாலும்,இரும்பினாலும் ஆனவை.மரத்தில் ஆன வளரி மிகவும் பழமையாகும் ஆகையால் காண்பது அறிதாக உள்ளது.காரணம் மரவளரி ஆதியில் பயன்படுத்தப்பட்டவை.இரும்பு வளரி வலையர் சமுகத்தினர் கோவில்களிலும்,
அருங்காட்சியங்களிலும் காணமுடிகிறது.
மரவளரி
           புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கிராமத்தில் வலையர் சமுகத்தினர் வீட்டில் மரத்தில் ஆன வளரியை வைத்துள்ளார்.இது வலையர் சமுகத்திற்க்கும் வளரிக்கும் உரிய தொடர்பை அறியமுடிகிறது...
வலையர்கள் ஆதியிலிருந்தே வளரியை உருவாக்கி பயன்படுத்தி வந்துள்ளனர் என்பது யாராலும் மறுக்கமுடியாத உண்மையாக உள்ளது...
சங்க இலக்கியத்தில் வளரி:
     கலிங்கத்துப்பரணி
“களித்த வீரர் விரட்ட நேமி
கண்டு வீசு தண்டிடைக்
குளித்த போழ்து கைப்பிடித்த
கூர்மழுக்கள் ஒக்குமே” (கலிங்கத்துப்பரணி:418)
    புறநானூற்றில்
“எரிகோல் அஞ்சா அரவின் அன்ன “(புறம்.89-5) எனும் அடியில் உள்ள எரிகோல் என்பது இங்கே வளரியைச் சுட்டுகின்றது.
வளரி என்பது குறுங்கோல் வளைதடி என்பதைக் “குறுங்கோ லெறிந்த நெடுஞ்செவிக் குறுமுயல் (புறம்.339:4)” எனும் அடி குறிப்பிடுகின்றது.
   ஐங்குறுநூற்று
மாலை வெண்காழ் காவலர் வீச
நறும்பூம் புறவின் ஒடுங்குமுயல் இரியும் (ஐங்குறு.421:1-2)
வெண்காழென்றது மாலைக்காலத்து முயலெறியும் தடியை என்னும் வளரியாகிய வளைதடியாகும். இவ்வடியில் ‘காவலர்’ எனும் சொல்லினை ஆராய்ந்து நோக்குகையில் காவலர் என்பார் ஊர்க்காவலை மேற்கொண்டவராவார்.
காவல்காரர் வளரி:
         முத்தரையர் சமுகத்தில் ஒரு பட்டத்தினரே காவல்காரர்...
கிராமங்களை காவல் பணி புரிபவர்கள்.கோவில்,காடு,வயல்,ஊர் போன்றவற்றை திருடர்களிடம் இருந்து காப்பதற்க்கு காவல்காரர் நியமிக்கப்பட்டு காவல்பணி செய்வர்.முத்தரையர் மக்கள் வாழும் ஊர்களில் அம்பலம்,அம்பலகாரர் நாட்டு பிரிவுகளுக்கு உட்பட்ட கிராமங்களுக்கு காவல்புரிவோரை காவல்காரர் என பட்டம் சூட்டப்பட்டு பொருப்பை ஒப்படைப்பர்...
           காவல்காரர்கள் இறவு நேரங்களில் திருடர்களிடம் இருந்து நாட்டை காக்க குல தெய்வ வழிபாடு செய்து குல தெய்வ கோவிலிலிருந்து ஆயுதங்களை எடுத்துக்கொண்டு காவல்புரிவர்.ஆயுதங்களாக விளக்கு-வெளிச்சத்திற்க்கும்,கை கம்பு-திருடனை அடிப்பதற்க்கும்,வளரி-திருடனை ஓடவிடாமல் எரிந்து தடுப்பதற்க்கும்,வெகு தூரத்தில் இருக்கும் திருடனை தாக்கவும் வளரியை காவல்காரர்கள் பயன்படுத்தினர்.கயறு-திருடனை கட்டிவைக்கவும் என பலவாயுதங்களை காவல்காரர்கள் பயன்படுத்திவந்தனர்.
சோழர்களின் எரிபடை;
                     புதுக்கோட்டை பகுதியில் சமீபகாலம்வரை உபயோகத்தில் இருந்த ஈட்டி,வில்,அம்பு,வளரி,போர் வாட்கள்,பட்டாக்கத்திகள் சங்கிலி போர் உடைகள்,பீரங்கிகள் அவற்றில் உபயோகப்படுத்தப்பட்ட குண்டுகள் அருங்காட்சியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது...””வளரித்தடி என்னும் வளரி பழங்கால ஆயுதங்களில் ஒன்றாகும்”” “”இவ்வாயுதம் தாங்கிய படை எரிபடை என சோழர் காலக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.”” புதுக்கோட்டை பகுதியில் வளரி உள்ளது என்பதனையும் சோழர் காலத்தில் “எரிபடை”என்று இருந்ததாகவும் -டாக்டர் ஜெ.ராஜாமுகமது (புதுக்கோட்டை மாவட்ட வரலாற்று) புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்...
      
புதுக்கோட்டை மாவட்டத்தில் வளரி:
        புதுக்கோட்டை மாவட்டத்தில் வளரி அதிகமாக காணப்படுகிறது.ஆலங்குடி,திருமயம்,பொன்னமராவதி,வலையப்பட்டி,தொட்டியம்பட்டி,தேனிமலை,ரெகுநாதப்பட்டி,வீரணாம்பட்டி ,தெம்மாவூர், போன்ற பல ஊர்களில் வளரியின் அடையாள சின்னங்களும்,வளரிகளும் உள்ளது.இவை அனைத்தும் வலையர் சமுகத்தினரே வைத்துள்ளனர் என்பது குறிப்பிதக்கது...
பொன்னமராவதி அருகே வலையப்பட்டி என்னும் ஊரில் அமைந்துள்ள வலையப்பட்டி சுவாமி அடைக்கலம் காத்த ஐய்யனார் கோவில் வாயிலில் அமைந்துள்ள குதிரை சிலையினுள் பல வலையர் வீரர்கள் சிலை உள்ளது.அவற்றுள் ஒரு வலையர் ஒரு கையில் துப்பாக்கியும்,மறு கையில் வளரியும் வைத்துள்ளார்.இவ்வலையரின் சிலை வேட்டையை குறிக்கும் வகையாகவும்,காவலை குறிக்கும் வகையாகவும் அமைந்துள்ளது என்பது தமிழர் வரலாற்றில் போற்றுதலுக்குறிய வரலாற்றுல் ஒன்றாக உள்ளது...
அச்சிலையினை “வளரி வலையர் சாமி”என்று வழிபடுகின்றனர்.
இன்றளவும் வளரியை புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும்   முத்தரையர் மக்கள் கிராமத்தில் வைத்திருப்பதை நம்மால் காணமுடிகிறது...
தற்போது வளரி வைத்திருக்கும் ஒரே பிரிவினராக வலையர் மக்களே திகழ்கின்றனர்.டாக்டர் ராஜா முகமது அவர்கள் குறிப்பிடும் சோழர்கால எரிபடையினராக வலையர்களே குறிக்கும் வகையாக உள்ளது...
வளரி பற்றி அடுத்த பதிவு தொடரும்...
வரலாற்று தொகுப்பு;
              ஏ.எஸ்.கலையரசன் அம்பலகாரர்
               பொன்னமராவதி

هناك تعليق واحد:

  1. அது மன்னர் மகன் கள்ளன் வீட்டில் காணாமல் போன வளரியல்லவா? அதைத்திருடியவன் யார்?

    ردحذف