முத்தரையர் சமூக குடிப்பெயர்கள்
முத்தரையர் சமுக குடிப்பெயர்கள் பதிவு-1
அடைக்கலம்,அடைக்கப்பன்,அடைக்கன்
தமிழ் பெயர்களில் முக்கியமான ஒரு பெயராக இந்த அடைக்கன், அடைக்கப்பன், அடைக்கலம் என்ற பெயர்கள் உள்ளது. இந்த பெயர் எதனால் இவ்வளவு சிறப்பு வாய்ந்தது என நாம் பார்கவேண்டும்.
அதிலும் இந்த பெயரை 100க்கு 99% பெயர் கொண்ட சமுகம் முத்தரையர் சமுகமே.
பொருள்:
அடைக்கலம்,அடைக்கப்பன்,
அடைக்கன் என்ற பெயர்களில் அடை என்ற சொல் அடிப்படையாக கொண்டுள்ளது.அடை என்பது சேர்தல்,தஞ்சமைடைதல் என குறிக்கிறது.மேலும் அடை என்ற ஒரு வகை உணவும் உள்ளது.பெயர்களில் அடை வருவது பெரும்பாலும் அடைக்கலம் என்ற பெயரை மையமாக கொண்டே அடைக்கன்,அடைக்கப்பன் என்ற பெயர்கள் உள்ளது.
அடைகலம் என்பது ஆபத்தான நிலையில் இருக்கும் நபர்,யாரிடம் சென்றால் பாதுகாப்பாக இருப்போம் என்று அவர்களை சேர்வது,பாதிக்கப்பட்டவர்களை பாதுகாத்து ஆதரவு கொடுப்பதே அடைக்கலம்.
சிவன் அடைக்கலம்:
உலகாலும் எம்பெருமான் சிவபெருமானை போற்றும் விதகமாக மாணிக்கவாசகர் திருவாசகத்தில் அடைக்கலப்பத்து என்று பத்து பாடல்களாக பாடியுள்ளார். பரம்பொருளை நாடி வருவோரை தம்மில் அடைக்கலம் கொடுத்து காப்பவராக கூறியுள்ளார்.
ஒரு பாடல்:
(எ.கா)
பெரும் பெருமான் என் பிறவியை
வேர் அறுத்துப் பெரும் பிச்சித்
தரும் பெருமான் சதுரப் பெருமான்
என் மனத்தின் உள்ளே
வரும் பெருமான் மலரோன்
நெடுமால் அறியாமல் நின்ற
அரும் பெருமான் உடையாய்
அடியேன் உன் அடைக்கலமே.
நீ பிறவியைப் போக்குபவன்,
பக்திப் பித்தைப் பெருக்கு பவன்,
எதையும் சாதிப்பவன்,சித்தமிசை குடிகொள்பவன்,ஜுவபோதம் படைத்த அயனுக்கும் அரிக்கும் எட்டாதவன்,ஜீவர்களை உடையவன்,ஆதலால் நீமதாதேவன்,
உன்னிடம் அடைக்கலம் புகுகிறேன்.
இவ்வாறு அடைக்கலம் என்ற சொல் சிவபெருமான் பெயர்களில் ஒன்றாகவும் உள்ளது. திக்கிட்டவனுக்கு தெய்வமே துணை என்பதற்கேற்ப பரம்பொருளான சிவபெருமானை நாடி செல்வோரை எவ்வாறு அடைக்கலம் கொடுத்து காக்கின்றாறோ அதை போல முத்தரையர் சமூக மக்கள் தங்களை நம்பி வருபவர்களை அடைக்கலம் கொடுத்து காப்பவர்களே. ஆகையால், அடைக்கலம் என்ற பெயரை முத்தரையர் சமூகம் மிகுதியாக கொண்டுள்ளது.
மேலும் முத்தரையர் சமூக குல தெய்வ வழிபாட்டில் சுவாமி அடைக்கலம் காத்த அய்யனார் சாமி மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாகவும், முக்கிய வழிபாட்டு தெய்வமாகவும் கருதப்படுகிறது.
இதை மையமாக கொண்டே முத்தரையர் சமுகத்தில் அடைக்கலம்,அடைக்கன்,அடைக்கப்பன் என்ற பெயர் நிலைபெற்றுள்ளது.
இதே போல பெண்கள் பெயராக அடைக்கி,அடைக்கம்மாள் போன்ற பெயர்கள் உள்ளது.
குறிப்பாக: பொன்னமராவதி,தில்லைக்காடு,நத்தம்,
திருமயம் போன்ற பகுதிகள் சுவாமி அடைக்கலம் காத்த அயயனார் கோவில் அமைந்துள்ளது.
#அடைக்கன் #அடைக்கலம் #அடைக்கப்பன்
இங்ஙனம்
ஏ.எஸ்.கலையரசன் அம்பலகாரர்
முத்தரையர் வரலாறு ஆய்வுக்கூடம்
No comments:
Post a Comment