Breaking

السبت، 26 يناير 2019

விடுதலை போராட்ட தியாகி முத்தையா முத்தரையர் வரலாறு

விடுதலை போராட்ட தியாகி முத்தையா முத்தரையர் வரலாறு


தியாகி
#முத்தையா_முத்தரையர்
விடுதலை போராட்ட வரலாறு
பதிவு தேதி : 26.01.2019
தியாகி
வி.ஏ.முத்தையா முத்தரையர்
அவர்கள்
#சிலோனில்
08.04.1914 ல் பிறந்தார்.
அவருடைய தந்தை சிறுவயதிலேயே சிலோனில் காலமாகிவிட்டார்.
தாயார் தனது மகனையும், மகளையும் அழைத்துக் கொண்டு திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள
#பாதாரபேட்டைக்கு
வந்தார்.
எட்டாம் வகுப்பு படித்து கொண்டு இருக்கும் போதே
தேசப்பற்று காரணமாக
#காங்கிரஸ்_மகாசபையில்
தன்னை இணைத்து கொண்டு நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டார்.
பலமுறை தேசத்துக்காக சிறை சென்ற இவர் #பெல்லாரி_சிறையில் ஒரு ஆண்டு காலம் இருந்த போது ஆங்கிலேயர்களின்
ஆட்சியின் கொடுமைகளை மிகவும் அனுபவித்தார்.
சிறையில் இருந்த காலத்தில் ஆங்கிலேயர்கள்,
சிறைகைதிகளை பிரம்பால் அடித்து மலம் கழிக்க செல்லுங்கள் என்று எழுப்புவார்கள்.
மலக்குவியலிலேயே மலம் கழித்ததன் காரணமாக இவர் மிகவும் கடுமையான நோய்வாய்ப்பட்டார்.
இவர் நோயின் கொடுமையை உணர்ந்த அரசு இவரை விடுதலை செய்ய #சிபாரிசு செய்தது.
ஆனால் இவர் தண்டனை காலம் முழுவதும் முடிந்து தான் வெளியே வருவேன் என்றும்,
சிறையிலேயே என் உயிர் பிரிந்தாலும் பரவாயில்லை
என்று கூறி தண்டனைகாலம் முடிந்த பிறகே வெளியில் வந்தார்.
இவர் 1954ல் ஜில்லாபோர்டு மெம்பராகவும்,
1957ல் ஜில்லாபோர்டு துணைத்தலைவராகவும்
தேர்வு பெற்று
திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்கள்
ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த போது பணியாற்றினார்.
அவரது பணியை மக்கள் பலரால் பாராட்டும் வகையில் செய்து முடித்தார்.
1954ல் பெருந்தலைவர் #காமராசர் முதலமைச்சராக தேர்வு பெற்றவுடன்
500 மக்கள் தொகை கொண்ட அனைத்து கிராமங்களிலும் ஓராசிரியர் பள்ளியை நியமிக்கும் அதிகாரம் இவரிடம் இருந்தது.
அப்பணியை எவ்வித விருப்பு, வெறுப்புக்கும் இடம் தராமல் செம்மையாக செய்து #முதல்வரிடம்_பாராட்டு பெற்றார்.
மானவர்களுக்கு தன் அதிகாரத்தில் எங்கெங்கு, எப்படியெல்லாம் உதவ முடியுமோ அப்படியெல்லாம் ஏழை மக்களுக்கு உதவிய,
தியாக செல்வர்
முத்தையா முத்தரையர்
1968ல் இயற்கை எய்தினார்.

முத்துராஜா நெட்வொர்க் -Muthuraja Network


ليست هناك تعليقات:

إرسال تعليق