முத்தரையர் ஜாதி உட்பிரிவில் பூசாரி
பூசாரி:
பூசாரி என்பவர்கள் கோவில்களில் பூசை செய்பவர்களே பூசாரி என அழைக்கப்படுகின்றனர்.தமிழ் ஜாதிக்குரிய பட்டமாகும்.முத்தரையர் சமுகத்தில் ஒரு பிரிவினரே பூசாரி...
கோவில்:
தமிழகத்தில் கோவில் வழிப்பாட்டில் காலம் காலமாக நீண்ட நம்பிக்கையுடன் வழிப்பட்டு வாழ்பவர்கள் தமிழர்கள்.தமிழத்தில் லட்சத்திற்க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளது.
மன்னர்கள் காலம் தொட்டு இன்று வரை எக்குதிசையிலும் பார்க்கும் இடமெல்லாம் கோபுரம் உயர்ந்து நிற்க்கிறது.
அதில்சிவன்,பெருமாள்,முருகன்,
விநாயகர்,பெண் தெய்வங்கள்,கிராம தெய்வங்கள் போன்ற பல தெய்வ வழிபாடுகளை கொண்டவர்கள் தமிழர்கள்...
கோவில் பூசாரி;
கோவில்களில் பூசை செய்யும் தமிழ்குடியினரை பூசாரி என அழைக்கப்படுவர்.தமிழகத்தில் உள்ள கோவில்கள் ஒருகாலத்தில் தமிழ் ஜாதியினரே பூஜை செய்தனர்.பிராமணன்கள் தமிழகத்துக்குள் நுலையும் முன் தமிழர்கள் ஒற்றுமையாகவும் தமிழர் புகலோடும் வாழ்ந்து வந்தனர்.ஜாதி பேதமின்றி அண்ணன் தம்பியாக ஒருதாய் தமிழ்பிள்ளையாக இருந்துவந்தனர்.அப்போதைய காலத்தில் அனைத்து கோவிலுகளும் பூசாரிகளாக தமிழ் ஜாதியினரே உள்ளனர்.
கோவில் பூசாரிகள் சமுகம்;
கோவில் பூசாரிகளாக ஒரு சில சமுகத்தினரே உள்ளனர்.
பொதுநிலை கோவில்கள்;
வலையர்(முத்தரையர்),பண்டாரம், வேளார் போன்றவர்களும்
குறிப்பிட்ட சமுகத்தின் உட்பட்ட கோவில்கள்;
ஒரு சமுகத்தின் மக்கள் மட்டும் கோவில்கட்டி வழிபடுவர்.அவற்றில் அவ்வினத்தினைரையோ அல்லது ஐயர்,பண்டாரம்,முத்தரையர் போன்றவர்கள் பூசை செய்வார்கள்...
பூசை செய்பவர்கள்:
பண்டாரம்-அர்ச்சகர்
ஐயர்-அர்ச்சகர்
வலையர்-பூசாரி
கள்ளர்,மறவர்,அகமுடையார்,கோனார்,பள்ளர் போன்ற சமுகத்தினர் பல இடங்களில் முத்தரையர் சமுகத்தினரையே பூசாரியாக நிமயத்துரனர்.
தனிப்பட்ட சமுகத்தின் மூலம் எடுப்பிக்கும் கோவில்களுக்கு அவ்இனத்தவர்களையே ஒருவரை பூசாரியாக நியமனம் செய்கின்றனர்.
ஜாதி உட்பிரிவில் பூசாரி;
தமிகத்தில்ல உள்ள ஜாதிகளில் முத்தரையர் சமுகத்தில் உட்பட்ட ஒரு பிரிவினராக பூசாரி என்ற ஜாதிய அடையாளத்துடன் வாழ்கின்றர்.
பூசாரி என்பது தற்போது பல சமுகத்தினர் கொண்டிருந்தாலும் ஜாதிய அடையாளமாக முத்தரையர் சமுகத்தினரே விளங்குகின்றனர்.
முத்தரையர் சமுக உட்பிரிவு:
முத்தரையர் சமுகமான தமிழ் இன தொல்குடியாகும்.ஏராலமான வரலாற்று பெருமை கொண்ட ஜாதிக உள்ளது.முத்தரையர் ஜாதியில் பல பட்டங்களில் அம்மக்கள் பறவி வாழ்கின்றனர்.அதில் தமிழக அரசு நடத்திய ஆய்வில் முத்தரையர் மக்கள் மட்டும் 29 பிரிவுகளில் ஜாதிய சான்றுதல் பெற்று வாழ்ந்துவருவதை 1996ல் அரசு ஆணை வழங்கியது.
அவரில் ஒரு உட்பிரிவாக பூசாரி என்ற பிரிவில் முத்தரையர் மக்கள் வாழ்ந்துவருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.
பூசாரி மக்கள் வாழும் ஊர்கள்;
பூசாரி மக்கள் வாழும் ஊராக அதாவது வலையர் சமுகத்தினர்கள் வாழும் பகுதியில் பல ஊர்கள் “பூசாரி” என்ற பெயரில் பல ஊர்கள் அமைந்துள்ளது...இது தமிழ் பூர்விகத்தையும்,பூசாரியின் பெயரிமையையும் குறிக்கும் வைகையாக உள்ளது...
திருச்சி,மதுரை,திண்டுக்கல்,தஞ்சாவூர்,புதுக்கோட்டை,இராமநாதபுரம் ,சிவகங்கை போன்ற பல மாவட்டத்தில் பல ஊர்கள் பூசாரிபட்டி,பூசாரிவளவு,பூசாரிகுளம்,பூசாரி வலசை,பூசாரி வீதி,பூசாரிபுரம் போன்ற பெயர்களில் பூசாரி முத்தரையர் மக்கள் வாழ்கின்றனர் என்பது பூசாரிக்கும் முத்தரையர் சமுகத்திற்க்கும் உரிய தொடர்பை அறியமுடிகிறது....
பூசாரி பற்றிய பதிவு தொடரும்.....
தொகுப்பு:
ஏ.எஸ்.கலையரசன் அம்பலகாரர்
பொன்னமராவதி
#Mutharaiyar History #Muthraiyar Varalaru #முத்தரையர் வரலாறு
முத்துராஜா நெட்வொர்க் -Muthuraja Network
ஐய்யனார் கோவில் ஆகமங்கள் விதிகள் படி வேளார் சமூகத்தினர் மட்டுமே பூசை செய்ய முடியும் மற்றவர்கள் உள்ளே செல்ல முடியாது.
ردحذف