Breaking

الثلاثاء، 23 يوليو 2019

பாரி வேட்டையும் வலையர் மக்களும் -Mutharaiyar History

பாரி வேட்டையும் வலையர் மக்களும் 



பாரி வேட்டை
(பாரி வேட்டையும் வலையர் மக்களும்)

வேட்டை
            ஆதி வரலாற்றில் வேட்டையின் பங்கு முக்கியமான ஒன்றாகும்.ஆதி காலத்தில்  வேட்டையாடியே உணவுண்டுவந்தார்கள் நம் மூதாதையர்கள்.இவர்கள் காடு,வயல்,மலை,கடல் போன்ற பகுதியில் விலங்குகள்,மீன்,பறவை போன்றவற்றை வேட்டையாடி உணவுண்டு வாழ்ந்து வந்தனர்.வேட்டையாடுவதை குல தொழிலாக முத்தரையர்களும்,வேடுவகவுண்டர்களும் கொண்டுள்ளனர். அவர்களின் உட்பிரிவாக வேடுவர்,வலையர்,வேட்டைக்காரர்,வேட்டுவவலையர்,வேட்டைக்கார நாயக்கர்,மூப்பனார்,வேடர்  என பல பட்டங்களில் வாழ்ந்து வருகின்றனர்.மேலும் இவர்கள் உலகை படைத்த சிவனுக்கே தன் கண்ணை தானமாக கொடுத்த கண்ணப்ப நாயனாரின் வழி வந்தவர்கள் என்ற பெருமையுடையவர்கள்.

பாரி மன்னர்:
                 சிவகங்கை மாவட்டம் சிங்கம்ணாரி அருகே உள்ள பறம்பு மலை என அழைக்கப்பட்ட பிரான்மலையை தலைமையிடமாக கொண்டு ஆட்சி நடத்திவந்தவரே பாரி மன்னர்.முல்லை செடிக்கு தன் தேரை கொடுத்த கொடை வள்ளல்  என்ற புகழுக்கு சொந்தகாரர்.தமிழ் வேந்தருள் தனித்தோர் புகழ் கொண்ட வேந்தர்.

பாரி நாடு;
                பறம்புமலை தலைமையாக கொண்டு
தென்னெல்லை - திருமோகூர் முதல் கீழ் மேலோடிய வையையாற்றங்கரை - பறம்புக்குடி
கிழக்கெல்லை - பறம்புக்குடி- காளையார் கோயில் - முத்து நாடு - அனுமந்தக் குடி- பறம்பு வயல்
வடவெல்லை - பறம்பு வயல் - கானாடுகாத்தான், சோனாபட்டு - திருக்கோளக்குடி - பூலாங்குறிச்சி - இடையாற்றூர் குடுமியான் மலைப்புறம் - பறம்பூர்
மேற்கெல்லை - பறம்பூர் - மருங்காபுரி - துவரங்குறிச்சி - நத்தம் மலைகளின் கிழக்குப் பகுதி - அழகர் மலைக் கிழக்குப் பகுதி - பறம்புக் கண்மாய் - திருமோகூர் போன்ற பகுதிவரை பறவி பாரி மன்னரின் ஆட்சி பாரி நாடாக இருந்ததை நம்மால் காணமுடிகிறது.
   இருப்பினும் பாரி நாட்டின் உரிமையானவர்களாகவும் பாரின் வம்சவழியினராகவும் ஒரு பிரிவினரே உள்ளார்கள்.பறம்பு மலையை சுற்றி முழுவதும் பாரியின் மக்களாக தமிழ் இன ஆதி குடியான வலையர் சமுகத்தினரே பறம்புமலை சுற்றியும் பாரி நாடு பகுதியெங்கும் நிறைந்து வாழ்கின்றனர்...
இவர்கள் பாரி நாட்டார்,பறம்பு நாட்டார்,பாரி வலையர் என்ற பட்டம் கொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடதக்கது.

பாரி வேட்டை:
     பாரி வள்ளலின் வம்சவழியினர் பாரி மன்னரின் புகழ் நிலைபெற்றிக்கவும்,பாரியின் பெருமையை வரும் சண்ணதியருக்கு எடுத்துறைக்கும் வகையில் வலையர் இனத்தின் குல தொழிலான வேட்டையாடுதலை "பாரி வேட்டை"என அழைத்து தங்கள் குல தொழிலையும்,வலையர் குல வேந்தரின் புகழ் நிலைபெறவும் பாரி வேட்டை என்ற பெயரில் வேட்டையை நடத்திவருகின்றனர்...
     ஆண்டுக்கு ஒருமுறையாவது பாரிவேட்டை செய்யவேண்டும் என்பது இவர்களின் கட்டாயமாண நடைமுறையாக உள்ளது.
       பாரிவேட்டையானது பறம்புமலை சுற்றியுள்ள வலையர் நாட்டுகள் ஏலூர்பத்து நாடு,மூங்கில்ககுறிச்சி நாடு,பொன்னமராவதிவலையப்பட்டி நாடு,ஆலவயல் நாடு போன்ற நாட்டு பிரிவுகளில் உள்ள வலையர் குடிமக்களே பாரி வேட்டை திருவிழாவை நடத்துகின்றர்.
மேலும் மதுரை திண்டுக்கல் போன்ற பகுதிகளிலும் பாரி வேட்டை நடத்துகின்றனர்.இப்பாரிவேட்டையை வலையர் சமுகத்தினர் மட்டுமே கொண்டாடுகின்றனர் என்பது பாரியின் வலைய குடியின் பெருமையை தாங்கிநிற்க்கிறது.
பாரி வேட்டைக்கு செல்லும் முன் வலைய அம்பலநாட்டு கூட்டம் நடத்தி நல்ல நாள் பார்த்து பாரிவேட்டையின் தேதி அறிவிக்கப்படும்.பின்னர் பாரிவேட்டை அன்று குல தெய்வ வழிப்பாட்டை தொடங்கி சாமி அழைத்து மேளம்,ஆட்டம் பாட்டமாக பாரிவேட்டையை தொடங்கப்படும்.பாரி வேட்டையின் போது தலையில் உருமா கட்டயும்,,கை கடியல்,துப்பாக்கி,வளரி,கூரான ஈட்டி போன்ற ஆயுதங்ளுடன் பாரிவேட்டையாடப்படும்,ஒவ்வொரு ஆயுதமும் வலையர் இன தெய்வங்களின் ஆயுதங்களை குறிக்கும் வகையாக கொண்டுள்ளனர்.பாரி வேட்டை தொடங்கும் முன் வேட்டையாடப்படும் இடத்தில் சிறப்பு பூஜை செய்து ஆன்மிக முறையை முதல்படியாக கொண்டு தொடங்குகின்றர்.பின்னர் வேட்டையாடி மிருங்களை வைத்து தெய்வங்களை வணங்கி அப்பகுதியை விட்டு வீடு திரும்புகின்றனர்.பின்னர்
பாரி வேட்டையாடி வந்தபின் பறம்புமலைக்கு தெற்கே கூத்துப் பாரிப் பொட்டல் என்று ஓர் இடம் இருக்கிறது. இப்பெயர் கூத்தையும் பாரியையும் தொடர்புபடுத்தி உணர்த்துவதாய் உள்ளது. பாரிவேட்டைக்குச் சென்று திரும்பும் போதில் இங்கு கூத்து நடக்கும்.ஆட்டம் பாட்டத்துன் வேட்டை நிறைவடைந்து பறம்புமலையை பார்த்து வணங்கி வேட்டையாடி மிருங்களை பங்கு பிரிக்கின்றனர்.பின் அவற்றை ஒவ்வொருவர் வீட்டிலும் தெய்வங்களுக்கு படையல் வைத்து வணங்கி பின்னரே சாப்பிடுகின்றர்.
            பாரி வேட்டை என்பது நீண்ட வரலாற்றையும்,வலையர் வேந்தர் பாரியின் புகழ்பாடவும்,பண்டைய தொழில் முறை தெரிந்துகொள்ளவும்,தெய்வ வழிப்பாட்டை கடைபிடிக்கவும் என பல கருத்துக்களின் அடிப்படையில் புனிதமாக பாரிவேட்டையை வலையர் சமுகத்தினர் நடத்துகின்றனர்...
பாரி மன்னரின் நேரடி வம்சவழியாக வலையர் இனமக்களே விளங்குகின்றனர்.பாரி மண் முழுவதும் வலையர் மக்களே நிறைந்து வாழ்கின்றனர்.அவர்களின் பட்ட பெயர்களிலும் பாரி,பறம்பன்,பறம்பு,பிடாரன்,
மலையான்,கபிலன்,பறம்பு நாட்டான்,பாரி வலையன், முல்லைக்கொடி, நல்லமங்கை, அங்கவை, சங்கவை என பறம்புமலையையும்,பாரியின் வம்சத்தை உணர்த்தும் வகையாகவும் கொண்டுள்ளார்கள்.

வரலாற்று தொகுப்பு;
      ஏ.எஸ்.கலையரசன் அம்பலகாரர்
       பொன்னமராவதி
Facebook page:முத்தரையர் வரலாறு ஆய்வுகூடம்

Muthuraja Network -முத்துராஜா நெட்வொர்க்


ليست هناك تعليقات:

إرسال تعليق