Breaking

الخميس، 22 أغسطس 2019

*முத்தரையர் யார்....??* வரலாற்று பெயர் காரணமும், விளக்கமும் :

*முத்தரையர் யார்....??* 
வரலாற்று பெயர் காரணமும், விளக்கமும் :

*அன்புடையீர் ராஜகுலத்தோரே.....!*

தெரிந்துகொள்வோம் இன்று ஓர் வரலாறு.

*முத்தரையர் யார்....??* 
வரலாற்று பெயர் காரணமும், விளக்கமும் :👇👇

தமிழகத்தில்  3 கோடி மக்களாக பெரும்பாண்மையாக வாழ்ந்து வரும் இவர்கள் மூத்தகுடி அரச பரம்பரை சமூகத்தவர். இவர்கள் இந்தியாவில் தமிழகம்,கேரளா,ஆந்திரா,கர்நாடகா மற்றும் வட மாநிலம் என 7 மாநிலங்களிலும், இந்தியா - இலங்கை - மலேசியா என மூன்று நாடுகளிலும் பரவலாக வாழும் ஓர் முதுகுடி அரச தலைமுறை மக்கள் ஆவர்.


இவர்கள் குமரிகண்டத்தில் தோன்றி ஆதிகுடி தமிழனாய் சிந்து சமவெளிகளை சீர்படுத்தி, தமிழனின் முதல் தொழிலாக வலை வீசி முத்துகுளித்து மீன்பிடித்து, தமது வீரத்தின் வெளிப்பாடாய் வேட்டையாடி தமிழ் கலாச்சாராத்தை தோற்று வித்து வாழ்ந்துவந்தனர். வீரத்தை உலகிற்கு கற்றுத்தந்தனர்.

பின்னர், நாடாள தலைபட்டு " அரையர் " என்ற தூய தமிழ்சொல்லால் 'அரசர்கள்' என அழைக்கப்பட்டனர். ஒரே இனமாக நிலபரப்பை பல எல்லைகளாக பிரித்து நாடாண்டு, கலை வளர்த்து, தமிழ் வளர்த்து, மக்களை நல்வழிபடுத்தி சிறப்புற ஆண்ட இம்மக்கள் மூத்த அரசகுடி தலைமுறை என்பதால்,

மூத்த +அரையர் - முத்தரையர்.
முதி +அரையர் - முத்திரியர்.
முது +அரையர் - முத்திரையர்.
மூன்றுதரை + அரசர் = முத்தரையர்.


(அரசாட்சியில் முதுகுடி அரசர்களாக முத்திரை பதித்து சிறந்த பொற்கால ஆட்சியமைத்ததால் இவ்வாறு பெயருடன் புகழ்ந்து போற்றப்பட்டார்கள்).

(சேர,சோழ, பாண்டிய எல்லையான மூன்றுதரைகளையும் ஆட்சிபுரிந்த  அரையர்கள் என்றும் பொருள்கொண்டு முத்தரையர்கள் போற்றப்பட்டனர்).


 முத்திரியர் =  முத்திரை +அரையர் - முத்திரையர்.


முத்திரியர்கள் = முதி +அரையர் - முதிராயர், முத்திராயர்.


முத்திரி - முதன்மை அரசாளும் மக்கள் எனவும் பொருள்கொண்டு அழைக்கப்பட்டனர்.


               இவ்வாறு சங்ககால இலக்கியங்களும், புலவர் பெருமக்களாலும் போற்றப்பட்டு " முத்தரையர் " என்ற புகழ்ப்பெயர் கொண்டு ஆட்சிப்புரிந்தனர். மூத்த அரசகுடி அரையர் மக்களாக அழைக்கப்பட்டாலும் 'முத்தரையர்' என்பது பிற மக்களுக்கும் உரிய பட்டம் ஆகாது. ஓர் இனத்தின் வம்சவழி அடையாளப்பெயரே என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பண்டைய காலத்தில் முப்பெரும் நிலப்பகுதியான,

கடல் - நிலம் - மலை பகுதிகளில் மீனவ அரையராகவும், வேட்டுவ அரையர்களாகவும் முத்தரையர் மரபினரே சிறந்த ஆட்சிபுரிந்துள்ளனர்.  இதன் அடிப்படையிலும் 'மூன்றுநிலப்பகுதி ஆண்ட அரையர்களாக முத்தரையர்கள் தனிச்சிறப்புடன் போற்றப்படுகின்றனர்'.

பேரரசுகளாக சீறும் சிறப்புமாக பல தேசங்களை தம் நாடுகளாக கொண்டு பல நூற்றாண்டுகளாக ஆண்டுவந்த மூத்த அரசகுடி மரபு (அரையர்) மக்களே "முத்தரையர்கள்"  ஆவர்.  இவர்கள் இன்றும் நாடாண்ட மன்னர்களின் வாரிசுகள் நாம் என்ற கர்வம் இல்லாமல் தமிழகத்தில் பிற மக்களோடும் எளிமையாக வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். 

*தமிழகத்தில் இம்மக்கள் மட்டுமே  "முத்தரையர்" என்ற தம் சாதிய, இன பெயரிலே இன்றும் அரசகுடி மக்கள் என்று தெளிவுபடுத்தும் ஓரே மன்னர் வம்சம்* என்ற பெருமைக்கு உரியவர்கள் என்பது மறுக்க முடியா உண்மை.

இதுவே " முத்தரையர் ( MUTHARAIYAR ) " வம்சத்தின் பெயர்காரணம்.
⚔🇪🇸🦁🇪🇸⚔

முத்துராஜா நெட்வொர்க் -Muthuraja Network



ليست هناك تعليقات:

إرسال تعليق