முத்தரையர் வழிப்பட்ட பிள்ளையார்
பிள்ளையார்;
உலகை ஆளும் ஈசனின் மூத்த மைந்தன்.தம்மை பெற்ற தந்தை,தாயை உலகமாக கருதுபவர். இந்து மதத்தின் முதன்மையானவராக போற்றப்படுபவர். இவரை பிள்ளையார்,விநாயகர்,
கணபதி,ஐந்து கரத்தான்,ஆனை முகத்தான் போன்ற பல பெயர்களில் போற்றப்படுகிறார்.
இந்துகள் அதிகம் உள்ள நாடான இந்தியா மட்டுமல்லாது நேபாள்,மலேசியா,சிங்கப்பூர், இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் ஆதி மூத்தவன் சிவபெருமாளை காட்டிலும் பிள்ளையாரையே அதிகமானோர் வழிபடுகின்றனர்...
இந்தோனேசியாவின் பணம் நோட்டில் பிள்ளையார் படம் உள்ளது என்பது குறிப்பிடதக்கது...
சனீஸ்வரர் பிடியில் உள்ளவர்கள் ஆனை முகத்தானை வழிபட்டு வர அவர்களின் குறைகள் நலமாகும்...
அருகம்புல் சூடியவர்.மூன்சூர் வாகணம் கொண்டவர்.முருகபெருமாளின் அண்ணன். இது போன்று
பிள்ளையாரின் மகிமைகளை சொல்ல இந்த பதிவு போதாது! இப்பதிவில் சுருக்கமாக கூறியுள்ளோம்...
வடநாட்டவர்கள்:
இந்தியாவின் வட மாநில பகுதிளில் உள்ளவர்கள் விநாயகரை முதன்மை கடவுளாக வழிபடுகின்றனர்.விநாயகா என்ற வார்த்தை இல்லாத இடமில்லை என்று சொல்லும் அளவிற்க்கு அங்கு முதன்மை வழிபாட்டு கடவுளாக உள்ளார் பிள்ளையார்...
தமிழ் மன்னர்களின் வழிபாடு;
தமிழ் நில மன்னர்களான சேர,சோழ,பாண்டிய,பல்லவர்,முத்தரையர் போன்ற பெருநில மன்னவர்கள் தமிழையும்,கலைகளையும்,
கோவில்களையும் வளர்த்தவர்கள்...
சிவன்,பார்வதி,பெருமாள்,
தச்சனாமூர்த்தி,பைரவர்,தவ்வை தாய்,பிடாரி,காளி,துர்கை,விஷ்னு துர்கை,நவகிரகனம்
விநாயகர்,போன்ற ஏராலமான தெய்வ சிற்பங்களை செதுக்கி வழிபாடு செய்து வந்தவர்கள் தமிழ் மன்னர்கள்.
தமிழ் மண்ணில் பிள்ளையார்:
கி.பி ஆறாம் நூற்றாண்டு கால கட்டத்தில் தொடங்கி பத்தாம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில்தான் பிள்ளையாரின் சிற்பங்களும்,வழிபாடும் நிறைந்து காணப்பட்டுள்ளது...
தமிழகத்தில் உள்ள கோவில்களில் மிக முக்கியமான பங்கு குடைவரை கோவில்களே!!!
குடைவரை கோவில்களில் பிள்ளையாரை சிற்பமாக்கிய பெருமை பாண்டியர்,முத்தரையர்,பல்லவர் இவ்வேந்தர்களே தமிழகத்தில் பிள்ளையார் சிற்பங்களை தங்களின் குடைவரைகளில் தோற்றுவித்து வழிபாடு செய்து வந்துள்ளனர்... தமிழ்நில வேந்தர்களால் பிள்ளையார் வழிபாடு உள்ளது என்பது தெளிவுபெறும்!அல்லவா!
முத்தரையர் வழிபட்ட பிள்ளையார்:
தமிழ் நில வேந்தர்களில் முக்கியமானவர்கள் முத்தரையர்கள்.
முத்தரையர்கள் கலை,இலக்கியம்,கோவில்
,குடைவரை,ஏரி,கிணறு,போன்ற ஏராலமானவற்றில் தங்களின் பெயரை தமிழ் வரலாற்றில் பதித்துள்ளனர்.அதேபோல முத்தரையர்கள் சிவன்,பெருமாள் மற்றும் பெண் தெய்வ வழிபாட்டில் சிறந்து விளங்கியவர்கள்..அதுமட்டுமல்லாது
முத்தரையர்கள் பிள்ளையார் வழிபாட்டையையும் கொண்டுள்ளனர்.தங்களின் கலை நியமிக்க கோவில்களில் சிவபெருமாளுக்கு அடுத்த நிலையில் பிள்ளையாரை கொண்டுள்ளனர்.
அதை முத்தரையர் கால குடைவரை கோவில்களே ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்...அதிலும் முத்தரையர்களின் தனி கலை நுனிகத்திலே அமைப்பர்.முத்தரையர்கள் எடுப்பித்த விநாயகர் 'வலம்புரி விநாயகர்' ஆவார்...
வலம்புரி விநாயகர்:
முத்தரையர்கள் குடைவரைகளில் வலம்புரி பிள்ளையாரை எடுபித்துள்ளனர்.வலபக்கம் தும்பிக்கை சுழித்துள்ள விநாயகர் ‘வலம்புரி விநாயகர்’ என்றும், இடப்பக்கம் தும்பிக்கை சுழித்துள்ள விநாயகர் ‘இடம்புரி விநாயகர்’ என்றும் அழைக்கின்றனர். இரு விநாயகரும் கேட்கும் வரம் தந்து வினைகளை தீர்ப்பவர் என்றாலும் இவ்விரு விநாயகர்களுக்கும் உள்ள சிறப்புகளை அறிவதும் அவசியமாகிறது.
‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை குறிக்கும் வலம்புரி விநாயகர்
வலம்புரி விநாயகர் ஒரு சில குறிப்பிட்ட ஆலயங்களில் மட்டுமே வழிபட முடியும். வலம்புரி விநாயகருக்கு என்று ஓர் சிறப்பம்சம் உண்டு. இதில், தும்பிக்கையின் வளைவு ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தின் அமைப்பை ஒத்துள்ளது. வாய் பகுதியின் வலது ஓரம் ஆரம்பித்து கன்னம், மத்தாம் தொந்தி வழியாக சுழன்று தும்பிக்கை வளைந்து இருக்கும்.இதுவே வலம்புரி விநாயகர் சிறப்பு. வலம்புரி விநாயகரின் சிறப்பிற்கு மேலும் ஓர் காரணமாய், இரு முறை விஷ்ணுவின் வலம்புரி சங்கை சிவபெருமான் எடுத்து சென்றுவிட்டார். பின் அவர் வந்து கேட்க என்னிடம் இல்லை. என் மகன் விநாயகன் வைத்திருக்கிறான் என்றார். பின் பல முறை அலைந்து திரிந்து விநாயகரிடம் தனது வலம்புரி சங்கை திரும்ப பெற்றார் விஷ்ணு.
இப்படி பல நாள் வலம்புரி சங்கை தனது தும்பிக்கையில் வலது பக்கம் வைத்திருந்ததாலும் விநாயகரை வலம்புரி விநாயகர் என்று அழைக்கின்றனர். விஷ்ணுவின் சங்கை வைத்திருந்த காரணத்தால் வலம்புரி விநாயகரை வணங்கிட சகல காரியங்களும் சித்தியாகும் என்பதாம். வளமை, வல்லமை, செல்வம் வழங்கும் விநாயகராக வலம்புரி விநாயகர் திகழ்கிறார்..
முத்தரையர் குடைவரை கோவில்களில் பிள்ளையார்;
1)பூவாலைக்குடி புஸ்பனேஷ்வர் ஆலயம்
2)குன்றாண்டார் கோவில் சிவன் கோவில்
3)மலையப்பட்டி சிவன் கோவில்
4)குடுமியாண்மலை சிவன் கோவில்
5)மலையக்கோவில் சிவன் கோவில் போன்ற இடங்ளில் முத்தரையர்கள் பிள்ளையாரை தங்களின் குடைவரைகளில் சிற்ப்பித்து வழிபாடு செய்துள்ளனர். இன்றளவும் பிள்ளையார் சிற்பங்கள் முத்தரையர் பாணியில் அழகாய் எடுத்துரைக்கிறது...
முத்தரையர்கள் எடுப்பித்த குடைவரைகளில் உள்ள சிற்பங்கள் படங்கள் கீழே பதிவிடப்பட்டுள்ளது...
இதில் மலையக்கோவில் மற்றும் குடுமியாண்மலை குடைவரை சிறய முண்பாடுகளுடையவை சிலர் பாண்டியர் என்றும் சிலர் முத்தரையர் என்றும் கருத்துவேறுபாடுகளுக்குட்பட்டவை.....
மேலும் முத்தரையர்களின் வரலாற்றில் பிள்ளையார் வழிபாடு குறிப்பிதக்கது.இன்றளவும் முத்தரையர்களின் வழிதோன்றலான இன்றைய முத்தரையர்கள் வாழும் ஊர்களில் பிள்ளையார் முதன்மை கடவுளாக உள்ளார்.பிள்ளையாருக்கும் முத்தரையர் சமுகத்திற்க்கு ஆயிரம் ஆண்டு பந்தம் உண்டு என்பதினை நினைவுகூறிகிறேன்... தமிழர் அனைவரும் ஒன்றாய் இணைந்து விநாயகரை வழிபட்டு நல்வாழ்வு வாழ்ந்திடுவோம்...
குறிப்பு;
இதுவரை முத்தரையர்- பிள்ளையார்க்கு உடைய தொடர்பை யாறும் வரலாற்றில் தொகுத்ததில்லை...
முதல் முறையாக நீண்ட ஆய்வின் பலனாக நம் தளத்தின் வாயிலாக வரலாறை தொகுத்துள்ளோம்.என்பது குறிப்பிடதக்கது....
நன்றி...
விநாயகர் சதுர்த்தி இன்றைய நன்நாளில் விநாயகர் பற்றிய பதிவை பதிவிட்டதில் பெரும் மகிழ்ச்சி....
விநாயகர் அருள் பெருக வேண்டுடகிறோம்...
வரலாற்று ஆய்வு
ஏ.எஸ்.கலையரசன் அம்பலகாரர்
முத்தரையர் வரலாறு ஆய்வுகூடம்
முத்துராஜா நெட்வொர்க் -Muthuraja Network
ليست هناك تعليقات:
إرسال تعليق