சத்ரு பயங்கர முத்தரையர் வரலாறு
நாடாண்ட முத்தரைய மன்னர்கள்:
____________________________________
5.சத்ரு பயங்கர முத்தரையர்
சத்ரு பயங்கர முத்தரையர் நெல்லை மாவட்டத்தில் அரசனாக இருந்துள்ளார். இவனது மனைவியை கல்வெட்டுக்கள் அரசி என்றே குறிப்பிடுகின்றன.
இவன் பாண்டிய நாட்டில் ஸ்ரீ மாறன், ஸ்ரீ வல்லபனின் கி.பி.811-860 ஆட்சி காலத்தில் அரசியல் தலைவனாக விளங்கியவன். நெல்லை மாவட்டம் செவலப் பேரியிலும், விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், எருக்கன்குடியிலும் இவனைப்பற்றிய சான்றுகள் கிடைத்துள்ளன.
இந்த சத்ரு பயங்கர முத்தரையனுக்கு "இருப்பைக்குடி கிழவன்" "எட்டிச் சாத்தன்" என்ற சிறப்பு பெயர்களும் இருந்துள்ளன. இவன் இரண்டாம் வரகுண பாண்டியனின் தந்தையான ஸ்ரீ மாற ஸ்ரீ வல்லபன் காலத்தில் செல்வாக்குப் பெற்ற அரசியல் தலைவனாக இருந்துள்ளான். இவனே வரகுண பாண்டியனின் ஆட்சியாளனாக இருந்தவன்.
நெல்லை மாவட்டம் செவலப்பேரி அழகர் கோயிலின் தென் சுவற்றில் உள்ள கல்வெட்டு எண் 71 (ஏ.ஆர்.எண்421/1906)
👇👇👇👇
1)ஸ்ரீ கோச்சடையர் மாறர்க்கு இயாண்டு இரண்டு இதனெதிர் பத்தொன்பது இவ்வாண்டு (இரிஞ்) சோழ நாட்டு ஆலங்
2)குடி சத்துரு பயங்கர முத்தரையன் அரசியார் இந்நாட்டு இளவிருப்பை அணுக்கன் அப்பிநங்கை கீழ்கள கூற்ற
3)த்து தெவதானம் தென் திருமாலிஞ் சோலை நின்றருளின கருமாணிக்க தேவர்க்கு திருவிளக்குக்கு வைச்ச ஆடு இருபத்தஞ்
4)சு இவை சாவா மூவா பேராடு உ
இக்கல்வெட்டு மாறஞ்சடையனின் 21ஆம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டுள்ளது. இருஞ்சோழ நாட்டைச் சேர்ந்த ஆலங்குடியைச் சேர்ந்தவர் என்றும், சத்ரு பயங்கர முத்தரையன் என்றும், இவனது மனைவியை அரசி என்றும், இவள் இளவிருப்பையைச் சேர்ந்த அணுக்களின் (மெய்க்காவலன்) மகள் அப்பிநங்கை என்றும் கூறுகிறது. இங்குள்ள தென் திருமாலிஞ் சோலையில் உள்ள கருமாணிக்க தேவருக்கு இந்த அரசியார் விளக்கு எரிப்பதற்கு சாவாலும், மூப்பாலும், குறைந்துபடாதிருக்கும்படி 25 ஆடுகளை அளித்துள்ளாள்.
நெல்லை மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் பட்டியல் கல்லில் 16 A (ஏ.ஆர்.எண் 26/1912) தனது 13ஆவது ஆட்சியாண்டு கல்வெட்டில் வரகுண மகராஜா 1400 காசுகளை கோயில் காரியங்களை செவ்வனே செய்துவர வேண்டிக் கொடுத்துள்ளான்.
இந்தக் காசு 1400ம் தனது அரசியல் தலைவர்களான இருப்பைக்குடி கிழவன், சாத்தம் பெருமான், அளற்றூர் நாட்டுக்கோன் ஆகிய மூவரையும் பொறுப்பாக்கி 1காசுக்கு 2 களம் நெல் ஆண்டிற்கு கோவிலுக்கு அளக்க வேண்டும் என்றும், அவ்வாறு அளக்க தவறினால் அதற்கான தண்டனையையும் இக்கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளான்.
இப்படி கோயில் காரியங்களை கவனிக்க மூன்று அரசியல் தலைவர்களையும் நியமித்து "இருப்பைக்குடி கிழவனை" முன்னவனாகவும் குறிப்பிட்டுள்ளான். இந்த இருப்பைக்குடி கிழவன் தான் சத்ரு பயங்கர முத்தரையன். இக்கல்வெட்டு 210 வரிகளை கொண்ட நீண்ட கல்வெட்டாக உள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம் சாத்தூர் வட்டத்திலுள்ள எருக்கன்குடியில் கண்மாய்க்கரையில் வட்டெழுத்துடன் காணப்படும் கல்வெட்டு எண் 43 (ஏ.ஆர்.எண் 335/1929-30) இக் கல்வெட்டு சடையன்மாறன் பாண்டியனின் 16ஆவது ஆட்சியாண்டில் வெட்டப்பட்டுள்ளது.👇👇
1)ஸ்ரீ கோச்சடைய மாறற்கு யாண்டு பதினா
2)று இவ்வாண்டு பழங்கரை இழித்து அத
3)னடி இற் கல்லு நாட்டி மணணு மடைக்கு மே
4)க்கு கருங்குளத்துக்குக் கிழக்கு நில
5)த் தட்டு கரை செய்து மடை வைய்ப்பி
6)த்து இருப்பைக்குடி கிழவன் தன்
7)பெரிட்டு ஏறு வித்து இவ்வெல்லை இ
8)ற் கிடந்த கரை கிழவனெரி என்பது (பின்வரும் பாடல்)
9)கொங்கார் மலர்க் கடம்பு சூட்டாதிக் கொல்
10)வளையை எங்கோனிருப்பைக் குடிக் கிழவ
11)ன் பொங்கார்ந்த தொட்டார் கரும்பிரைக்கு
12)ந் தொன்னிர் வயலருஞ் சோழ நாட்டா (சோணாட்டார்)
13)ன் றார் சூட்டு தி ரெ னென்று
இவ்வாறு பழங்கரையை இடித்து அதனடியில் கல் நாட்டி மண் கரை அமைத்தார். அங்கே மடை கட்டியதுக்கு மேற்கு கருங்குளத்துக்கு கிழக்கு இடையில் மடை கட்டினார். இந்த இருப்பைக்குடி கிழவன் "கிழவன் ஏரி" என்றும் புதிய ஏரிக்கு பெயர் வைத்தான். இவனது புகழையும், ஏரியின் சிறப்பையும் பாடலாக கல்வெட்டியுள்ளனர்.
வரகுண மகாராஜரின் 13ஆவது ஆட்சியாண்டில் க.எ.44 ஆக (ஏ.ஆர். 334/1929-30) சாத்தூர் வட்டம் எருக்கன்குடியில் கண்மாய் கரையில் உள்ள கற்பலகையில் பாண்டிய்ன் சடையன் மாறனின் 18ஆவது ஆட்சியாண்டில் (ஸ்ரீ வல்லபன்) காலத்தில் எட்டிச் சாத்தன் என்னும் இருப்பைக்குடி கிழவன் கல்வெட்டியுள்ளான்.
எட்டிச்சாத்தன் என்னும் இருப்பைகுடி கிழவன் தெங்கும் (தென்னையும்) கமுகு (பாக்கு) கரும்பு, கழனிக் கதிர், செந்நெல்லும், இருஞ்சோழ நாட்டவர் தலைவன், பெருஞ்சாந்தி குல மன்னவன், கூடற்குடி நகர், தின்னோடு குளத்தூரவர் குலக்குரிச்சி, உழாயூரவர் இருப்பைக்கு தனக்கு அதிபதி, வெளியன்குடி, சிறாலங்குடியில் திருக்கோயில் எடுப்பித்தான் என்கிறது.
தென் வெளியங்குடி நகரில் கற்றூண் நாட்டு அம்பலத்தோடு, கரை, கோயிலும், கரும்பு விளையும் அழகமைந்த கிழவனேரியும், மாறனூர் பெருங்குளத்தில், கிழவனேரியும், பொருப்பனைய நெடும் பாடமும் யிருப்பைக்குடி வளநகரு எடுப்பித்த பெரும்பள்ளியும் வடிவமைத்தான்.
எடுப்பித்த மண்டபத்தோடு, அம்பலமும், வெள்ளைப்புனல், கிழவனேரியும், கண்மடை, தன்னோடு வாங்கமைந்த பக்தன் மடையும் கற்பிழந்த குளவாயில் அடைப்பித்தான் அரசன் குளமும், கொழுவனூரும், கிழவனேரியும், செங்குளமும், மாறனேரியும், நென் மலிமாநகர் கொன்மலி சிதம்பலமும், பெருங்குளக்கரை இழித்தெரிய ஞெருங்குடினல்.
கிழவனேரியும், கண்மடையும், மணிமாடச் சிறுபுத்தூர் பாழிக் குளத்திற்றெறிய நெருங்குபுனல் கிழவனேரியும், கண்மடையும், பெருங்குளத்து வெப்பமடை கற்படுத்தியும், பொன்னான் மடை தன்னோடு பூங்குறி மடை அமைத்து ஆலங்குடி பெருங்குளத்து மடை வைத்து, வாரி பிழந்து. புனல் வர செய்து, அம்பலத்தோடு திருத்தி, வளப்படுத்தி, சீர்செய்து திருநாராயண ஏரி என்று தன் குளவாய் அமைத்து. மிகத் திறத்தாளால் இருஞ்சோழ நாட்டு அத்தனையும் திருத்துவித்தது இருப்பைக்குடி கிழவனென என்கிறது.
இது போன்ற எண்ணற்ற பணிகளை மன்னர் எட்டிச் சாத்தன் என்ற இருப்பைக்குடி கிழவன் செய்துள்ளான்...
பேஸ்புக் பதிவு : சிவமாரி....
Muthuraja Network - முத்துராஜா நெட்வொர்க்
ليست هناك تعليقات:
إرسال تعليق