"வீரபாண்டியனை எறிஞ்சு தலைகொண்ட கரிகால சோழன் " காலத்து சேலம் அருங்காட்சியக வீரக்கல்
இரண்டாம் பராந்தகர் தம் மக்களில் மூத்தவனான "இரண்டாம் ஆதித்யனுக்கு" இளவரசு பட்டம் கட்டினார்.
ஆற்றலும் வலிமையும் கொண்ட மாவீரனாய் திகழ்ந்த ஆதித்ய கரிகாலன் முன்பு தம் தந்தையால் சுரம் இறக்கப்பட்ட வீரபாண்டியனை சேவூர் என்னுமிடத்தில் எதிர்கொண்டான் !
இந்த வீரபாண்டியன் சோழர்க்கு அடிபணியாமல் சுதந்திர ஆட்சி செய்து வந்தான், ஏதேனும் ஒரு சோழனை கொன்றமையால் தம்மை "சோழன் தலை கொண்ட வீரபாண்டியன்" என்று அழைத்துக் கொண்டான்.
ஆதித்யன் இவனை சேவூரில் கொன்று பாண்டிய நாட்டை சோழர் ஆட்சிக்கு கீழ் கொண்டுவந்து தாம் பூண்ட பெயரே, மறந்தாலும் மறையாத பட்டமான " வீரபாண்டியன் தலை கொண்ட கொபரகேசரி".
வடக்கே காஞ்சியில் தங்கியிருந்து சோழரின் வடவெல்லையை விரிவுறச் செய்தான், ஆதித்யன் சூழ்ச்சியால் இளவயதிலேயே கொல்லப்பட்டான், அதில் இன்றும் மர்மம் நிலவுகிறது.
இவனின் கல்வெட்டுகள் அதே கம்பீரமான பட்டபெயருடன் காணக்கிடைகின்றன, அவற்றுள் சேலம் அருகே பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயிலில் காணக்கிடைக்கும் கல்வெட்டு மேற்கு தமிழகத்தில் கிடைக்கும் முக்கிய கல்வெட்டு ! அதேபோல் நாமக்கல் மாவட்டம் ரெட்டிபட்டியில் கிடைத்த வீரக்கல்லில் ஆதித்த கரிகாலன் குறிப்பு கிடைக்கிறது ! அந்தக் கல் தற்போது சேலம் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகிறது !
கொடுக்கமங்கலத்தின் ஆரையன் ஆயிரவன் இளஞ்சிங்க முத்தரையன் என்பான் பகைவர்கள் கவர்ந்து சென்ற ஆநிரைகளை மீட்க அவர்களோடு சண்டையிட்டு வீரமரணம் எய்துகிறான் ! அவனுக்காக ஆயிரவன் ஏகவீர முத்தரையன் என்பவர் எடுத்த வீரக்கல் !
வீரபாண்
டி கனை எறிஞ்
சு தலை கொ
ண்ட கலி(ரி)
கால சோழ
ற்குச் செல்லா
நின்ற யா
ண்டு நாலா
வது கொ
டுக்க
மங்
கல
த்தி
லிருக்கும் ஆரைய
ன் ஆயிர
வனான
இளஞ்
சி
ங்க மு
ததரை
யன்த
ன்னு
ர்க்காலி
இது வீரபாண்டியனை எறிஞ்சு தலைகொண்ட கரிகால சோழனின் நாலாவது ஆட்சியாண்டில் எடுக்கப்பட்டுள்ளது
இந்த மன்னன் சுந்தர சோழரின் மூத்த மகனான இரண்டாம் ஆதித்தன் எனும் ஆதித்த கரிகாலன் ! முதலாம் இராஜராஜனின் அண்ணண்
பொதுவாக வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி அல்லது பாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி என்று காணப்படும் ஆதித்தன் கல்வெட்டு இங்கு வீரபாண்டியனை எறிஞ்சு தலைகொண்ட கரிகால சோழன் என்று குறிக்கப்பட்டுள்ளது சிறப்பு
ليست هناك تعليقات:
إرسال تعليق