சோழ தேசத்துப் பூர்விக மன்னர்கள்
வரலாறை மறைப்பது என்பது பெற்ற பிள்ளையை தாயிடம் இருந்து மறைப்பதற்க்கு சமமானது.
சோழ தேசத்துப் பூர்விக மன்னர்களின் பெயர் அட்டவணை என்று 2011ஆம் ஆண்டு திரு.மணிகண்டன் என்பவரால் எழுதப்பட்டு தமிழ் இலக்கியதுறை சார்பில் இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில்
1)கி.பி ஆறாம் நூற்றாண்டு முதல் எட்டாம் நூற்றாண்டு காலத்தில் முத்தரையர் மன்னர்களின் நேரடி கட்டுப்பாடிலே இருந்தது சோழ மண்டலம்.அப்படி இருக்க இந்த நூலில் அது பற்றி ஒரு குறிப்புகூட இல்லை.
2)ஏழாம் நூற்றாண்டில் யார் ஆண்டார்கள் என்று குறிப்பிடாமல் அப்பர்,சம்பந்தர் உள்ளீட்டோரை பற்றி கூறி முத்தரையர்களை மறைத்துள்ளார் நூல் ஆசிரியர்.
3)எட்டாம் நூற்றாண்டில் ஆழ்வார்களை பற்றி எழுதி முத்தரையர்களை மறைத்துள்ளார்.
4)கி.பி ஆறு,ஏழு,எட்டாம் நூற்றாண்டுகளில் இந்த அட்டவணையில் முத்தரையர்கள் என்ற மன்னர்களே இல்லாத போது எப்படி ஒன்பதாம் நூற்றாண்டில் விஜயாலயசோழன் முத்தரையர்களிடம் இருந்து சோழ தேசத்தை மீட்டார்??????
5)தமிழ் குடி மன்னர் முத்தரையர் வரலாற்றை மறைத்த உங்களுக்கு வந்தேரி மன்னர்களின் வரலாற்றை கூறுவதில் எவ்வளவு ஆர்வம்.நாயக்க மன்னர்கள்,இஸ்லாம் மன்னர்கள்,மராத்திய மன்னர்கள்,ஆங்கிலேயர்கள் என அனைவரையும் சரியாக குறிப்பிட்டுள்ளார்.இந்த புத்தக ஆசிரியர்.
முத்தரையர் வரலாறுகள் திட்டமிட்டே மறைக்கப்பட்டுள்ளது.
மீள்வோம்! முத்தரையர் வரலாற்றை உலகறிய செய்வோம்.
இவண்
ஏ.எஸ்.கலையரசன் அம்பலகாரர்
முத்தரையர் வரலாறு ஆய்வுக்கூடம்
ليست هناك تعليقات:
إرسال تعليق