Breaking

الاثنين، 27 مايو 2019

#தமிழக முன்னாள் அமைச்சர் பேராவூரணி மாண்புமிகு M.R.கோவேந்தன் அவர்களின் நினைவு நாள்.(26.05.2019)


#தமிழக முன்னாள் அமைச்சர் பேராவூரணி மாண்புமிகு M.R.கோவேந்தன் அவர்களின் நினைவு நாள்.(26.05.2019)




பேராவூரணிக்கு அருகில் உள்ள முடச்சிக்காடு என்னும் கிராமத்தில் மிகச் சாதாரன குடுப்பத்தில் பிறந்தவர்.

சிறுவயதில் வாட்டிய வருமையை போக்க பேராவூரணி பகுதியில் நாளிதழ் விநியோகம் செய்வதில் வாழ்வை தொடங்கி அமைச்சர் என்ற இடம் வரை உயர்ந்தவர்.

சிறுவயதில் தன்னுடைய அரசியல் செயல்பாட்டினால் பேரறிஞர் அண்ணா அவர்களின் பாராட்டைப் பெற்றவர்.

ஊராட்சி மன்ற உறுப்பினர்
ஊராட்சி மன்ற தலைவர்
ஒன்றிய பெருந்தலைவர்
சட்ட மன்ற உறுப்பினர்
அமைச்சர் 
என்று தனது விடா முயர்ச்சியாலும், கடின உழைப்பாலும் வெற்றிகளை குவித்தவர்.

பேராவூரணியில் மூன்று முறை தொடர்ந்து வென்று புரட்சித் தலைவர் M.G.R.அவர்களின் அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாற்றும் மீன் வளத்துறை என்று இரு துறைகளுக்கு அமைச்சராக இருந்து திறம்பட பணியாற்றியவர்.

தாத்தாதான் பேராவூரணியை கட்டமைத்த பிதாமகன்.
வாடகை கட்டிடத்தில் இயங்கிய பேராவூரணி தாலுகா அலுவலகத்திற்கு புதிய பிரமான்ட கட்டிடம் கட்டி திறந்து வைத்தார். 

அரசு மருத்துவமணையை நவீனப்படுத்தி மகப்பேறு பிரிவையும்,எக்ஸ்ரே கருவிகளையும் கொண்டு வந்தார்.

பேராவூரணியில் புதிய போக்குவரத்து பணிமணையை கொண்டுவந்தார்.பல்வேறு எதிர்ப்புகளுக்கு முகம்கொடுத்து பல ஊர்களுக்கு புதிய வழித்தடங்களை ஏற்படுத்தி புதிய பேருந்துகளை இயக்க வழிவகை செய்தார்.

பேராவூரணியில் புதிதாக தியனைப்பு நிலையத்தை நிறுவினார்.

கால்நடை மருத்துவமனைகளை கொண்டுவந்தார்.

பேராவூரணி தொகுதியில் பல கிராமங்களை இணைக்கின்ற வாட்டாத்திக்கொள்ளைக்காடு காட்டாற்றுபாலம் கட்டினார்.கட்டயங்கங்காடு பாலம்  கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.

பேராவூரணியில் பல துவக்கப்பள்ளிகளை நடுநிலை பள்ளிகளாகவும்,
பெருமகளூர் உள்ளிட்ட பல உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி பல புதிய பள்ளி கட்டிடங்களை 
கட்டினார்.

மாணவர்கர்களுக்கு தங்கும் விடுதியையும் காட்டினார் அவைகள் இன்றும் உள்ளன.

பேராவூரணி தொகுதியில் எழுபதுபேருக்கு கிராம நிர்வாக அலுவலர் வேலை.
நூற்றி ஐம்பது பேருக்கு தலையாரி வேலை.
இருநூருக்கு மேற்பட்டோருக்கு சத்துணவு அமைப்பாளர் பணி.பலருக்கு சமையலர் பணி என்று எவரிடத்திலும் ஒருரூயாய் பெறாமல் வேலை கிடைக்க வழிவகை செய்தார்.

தான் பதவியில் இருந்த காலத்தில் பேராவூரணி பகுதியில் பலருக்கு அரசுவேலை பெற்றுத்தந்தார்.

M.G.R.அவர்கள் தாத்தா மீது மிகுந்த அன்பு கொண்டவர். ஏனன்றால் தாத்தா நேர்மையானர் உறுதியானவர் என்பதால்.

அதனால்தான் சென்னையிலிருந்து சாதாரன குக்கிராமமான முடச்சிக்காட்டிற்கு தனது இல்ல திருமணத்திற்க்கு பத்து அமைச்சர்கள் பல சட்டமன்ற உறுப்பினர்கள் புடைசூழ வந்திருந்து  பெருமை சேர்த்தார் M.G.R.

அந்த மணவிழா மேடையில் M.G.R.பேசும்போது கோவேந்தன் உறுதியான கொள்கையாளன் என்று புகழாரம் சூட்டினார்.

விடாப் பிடியான செயல்பாடு.சமரசமற்ற அரசியல் சண்டைகள்.உறுதியான பேச்சு.சொன்ன சொல் மாறாத குணம்,எவருக்கும் அஞ்சாமல் மணதில் பட்டதை பேசும் துணிவு இவை அனைத்தையும்
தாத்தாவின் அரசியல் எதிரிகளும் வியந்து பார்த்தார்கள்.அதனால்தான் தாத்தாவை கொள்கை வேந்தன் கோவேந்தான் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

பேராவூரணி பகுதியில் அரசியல் அதிகாரமற்று கிடந்தவர்களை ஊராட்சி மன்ற தலைவர்,ஒன்றிய பெருந்தலைவர்,தனது கட்சியில் ஒன்றியச் செயலாளர், நகரச்செயலாளர் என்று வெல்லவைத்து அழகு பார்த்தவர்.

சாதிகடந்து அணைத்து சமூக மக்களையும் நேசித்த சமூகநீதி போராளி என் தாத்தா.

இப்படி எத்தனையோ உண்டு அவரின் சரித்திரத்தில்.
இன்றும் பேராவூரணி மக்கள் M.R.G.இருந்தால் இப்படி நடக்குமா என்று ஆதங்கப்படுவதை கானமுடிகிறது.

தனக்கென்று வாழாமல் மக்களுக்காக வாழ்ந்த மாபெரும் தலைவர் எங்கள் அய்யா.

அய்யா கக்கன் வரிசையில் வைத்து வணங்கப்பட வேண்டிய தலைவர் என் தாத்தா.

அவர் மடியில் தூக்கிவைத்து கொஞ்சி வளர்த்த பேரப்பிள்ளைகளில் நானும் ஒருவன் என்பதில் பெருமைப் படுகிறேன்.

நீங்கள் மறைந்த இன்னாளில் பேராவூரணியில் நீங்கள் விட்டுச்சென்ற பணிகளை தொடரவும்,கொள்ளைக் கூட்டத்திடம் சிக்கிக் கொண்ட பேராவூரணி தொகுதியை மீட்கவும் உங்கள் பிள்ளைகள் சபதம் ஏற்கிறோம்.
பேராவூரணி வீதிகளில் சைக்கிளில் பேப்பர் போடும் சிறுவனாக வாழ்க்கையை தொடங்கிய சிறுவன், தன் கடின உழைப்பாலும்,தன்னம்பிக்கையாலும்,மக்களின் அன்பாலும் சைரன் வைத்த காரில் அமைச்சராக வந்திருங்கிய வரலாறு உங்களின் வரலாறு.

அந்த வரலாறு தொடர்வதற்க்கும் உங்கள் என்னங்களை ஈடேற்றுவதற்க்கும் நாட்கள் தூரமில்லை அய்யா.

Muthuraja Network -முத்துராஜா நெட்வொர்க்


ليست هناك تعليقات:

إرسال تعليق