திருமங்கை ஆழ்வார் முத்தரையரே என்பதற்கான ஆதாரம்
திருமங்கை ஆழ்வார்
முத்தரையரே என்பதற்கான ஆதாரம்..
1. ஸ்ரீரங்கத்தில் திருமங்கை ஆழ்வார் அவர்கள் ஆயிரங்கால் மண்டபத்தை கட்டி அதற்கு அவர் பிறந்த முத்தரையர் இனத்தின் பெயரால் #முத்தரசன்குரடு என்றே பெயர் வைத்தாரே தவிர கள்ளர்குரடு என்று பெயர் வைக்கவில்லை.
2. மேலும் ஸ்ரீரங்கம் வேடுபரி திருவிழாவில் திருமங்கை ஆழ்வார் முத்தரையர் வழிவந்த திரு.பெரியண்ணன் முத்தரையர் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் அறங்காவல்துறையால் ஆண்டுதோறும் சிறப்பு மரியாதை செய்யப்படுகிறதே தவிர, எந்த கள்ளருக்கும் செய்யப்படவில்லை.
3. இதேபோல் திருமங்கையாழ்வார் பிறந்த ஊரான திருவாலி நாட்டில், தற்போதைய நாகை மாவட்டம் வேதராஜபுரத்தில் கருடசேவை நிகழ்ச்சியின் போது திருநகரிலிருந்து அவர் பிறந்த திருநாங்கூருக்கு கொண்டுவந்து தங்க வைத்து தீர்த்தவாரி நடைபெருகிறது.
இந்நிகழ்ச்சியின் போது நான்கு நாட்களில் 30 கி.மீ தூரம் வரை, திருமங்கை ஆழ்வாரைத் தூக்கி சென்று சேர்ப்பதை முத்தரையர்கள் மட்டுமே முழு உரிமையுடன் செய்கின்றனர்.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழாவில் ஏராளமான முத்தரையர்கள் கலந்து கொள்கின்றனர்.
4. பழங்காலம் தொட்டு இன்றுவரை திருமணங்கொல்லை எனும் கிராமத்தில் பங்குனி மாதம் வேடுபரி விழா நடத்தப்படுகிறது. இவ்விழாவில் முத்தரையர்களுக்கு பரிவட்டம் கட்டி கோவில் மரியாதை செய்யும் வழக்கம் உள்ளது. இந்த விழாவில் திருமங்கை ஆழ்வாரை தூக்கி செல்லும் உரிமை முத்தரையர்களுக்கு மட்டுமே ஆகும்.
5. இதேபோல காஞ்சி வரதராஜ பெருமாள்கோவிலில் வேடுபரி நிகழ்ச்சி நடைபெருகிறது. இவ்விழா தொன்று தொட்டு இன்றுவரை வைகாசி மாதம் நடைபெறுகிறது. இங்கேயும் முத்தரையர்களுக்கு பரிவட்டம் கட்டி கோவில் மரியாதை செய்யப்படுகிறது.
இங்கே முத்தரையர் மண்டகப்படி அன்று வேடுபரி நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.
6. இங்கு தங்களால் கட்டப்பட்ட மண்டபத்திற்க்கு "ஸ்ரீதிருமங்கை மன்னனவரித்த முத்துராஜ குல பாளையக்காரர் மண்டபம் " என கல்வெட்டி பெயர் பொறித்துள்ளனர்.
இந்நடைமுறைகளின் மூலம் திருமங்கை ஆழ்வார் "முத்தரையர்" என உறுதியாகிறது.
7. திருமங்கை ஆழ்வாருக்கு கள்ளர்கள் எங்கேயும் இதுவரை விழா எடுத்ததாக தெரியவில்லை.
அவர்கள் திருமங்கையாழ்வாரின் வழிவந்தவர்கள் என எங்கேயும் மரியாதை செய்யப்பட்டதாகவும் தெரியவில்லை.
பிறகு எப்படி அடுத்தவன் அப்பனை தன் அப்பன் என களவுகொள்ள துடிக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை.
ஆதாரம் :திரு.இரா.திருமலை நம்பி அவர்களின் "தமிழக வரலாற்றில் முத்தரையர்" நூலிலிருந்து.
நன்றி...ராஜமுத்தரையர்
முத்துராஜா நெட்வொர்க் -Muthuraja Network
ليست هناك تعليقات:
إرسال تعليق