கண்ணப்ப நாயனார் திருமேனி
கண்ணப்ப நாயனார் திருமேனி!
சிற்பத்தின் பெயர் - கண்ணப்ப நாயனார்
சிற்பத்தின் அமைவிடம் - செப்புத்
திருமேனிகள் காட்சிக்கூடம்
ஊர் - எழும்பூர்
வட்டம் - அமைந்தகரை
மாவட்டம் - சென்னை
அமைவிடத்தின் பெயர் - அரசு மைய
அருங்காட்சியகம், சென்னை
சிற்பத்தின் வகை - சைவம்
அளவுகள் / எடை - உயரம் 66 செ.மீ.
விளக்கம் -
கண்ணப்ப நாயனார் சிவபெருமானுக்காக தன் இடது கண்ணை தோண்டிய பின்பு, கையில் உள்ள கருவியால் வலது கண்ணையும் தோண்டுதல் பொருட்டு நிற்கும் காட்சி. அன்பினுக்கோர் வடிவம் தந்தாற் போன்று அடியோன் கண்ணப்பர் மரவுரியாடை தரித்தவராக, மார்பில் குறுக்காக சன்னவீரம் செல்கிறது. செவிகளில் வளையங்களும், கைகளில் வளைகளும், கால்களில் பாதணிகளும் அணிந்தபடி, தலையணி சடைமகுடமாய் திகழ, தலையை இடப்பக்கம் சாய்த்தவாறு நிற்கிறார்.
ஆக்கப் பொருள் - உலோகம்
காலம் / ஆட்சியாளர் - கி.பி.975 / முற்காலச் சோழர்
ஒளிப்படம் எடுத்தவர் - தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம்/ நபர் - தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
சுருக்கம் -
63 நாயன்மார்களுள் ஒருவரான கண்ணப்ப நாயனார் வேடுவர் ஆவார். சிவபெருமானுக்காக தன் கண்களை தந்தவர்.
நன்றி தகவலாற்றுப்படை.
இவண்
ஏ.எஸ்.கலையரசன் அம்பலகாரர்
முத்தரையர் வரலாறு ஆய்வுக்கூடம்
No comments:
Post a Comment