Breaking

الأربعاء، 13 نوفمبر 2019

முத்தரையர் குடைவரை கோவில்கள்

முத்தரையர் குடைவரை திருமயம் கோவில்













  

     ""திருமெய்யம் குடைவரை""
திருமயம்:
            திருமயம் இயற்கையின் அடையாளத்தை கொண்ட ஒரு அழகிய நகரம்.புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டியிலிருந்து 20கிலோமீட்டர் தொலைவில் மதுரை செல்லும் வழியில் அமைந்துள்ளது.திருமயம் என்றாலே முதலில் நாபகம் வருவது கோட்டையும்,சிவபெருமாள்,
விஷ்னு பெருமாள் குடைவரை கோவில்கள்தான்...சைவ,வைணவ திருகோயில் ஒரே இடத்தில் குடிகொண்ட அற்புதக்காட்யிடமாக விளங்குகிறது...மக்கள் அதிகம் வாழும் ஊராகும்.இங்கு முத்தரையர்,செட்டியார்,மறவர்,பள்ளர் இதற பல இனமக்கள் வாழுகின்றனர்.திருமயத்தை ஆரம்ப காலத்தில் "திருமெய்யம்" என்று அழைக்கப்பட்டு அதுவே மருவி "திருமயம்" என்றாயிற்று...திருமெய்யத்தை முத்தரையர்,பாண்டியர்,நாயக்கர்,சேதுபதி,தொண்டைமான் உள்ளிட்ட பட மன்னர்கள் ஆட்சி நடத்தியுள்ளனர்...
              கற்பாரை மலைகளாக கிடந்தவற்றை 
கலை நயத்துடன்  குடைவித்து ஆலயமாகவும்,கோட்டையாகவும்,
நகரமாகவும் முதலில் உருவாக்கிய பெருமைக்குறியர் முத்தரையர் மன்னவர்களே...

திருமெய்யம் முத்தரையர் அரசர்; 
                  தமிழகத்தில் முத்தரையர் மன்னர்கள் கி.பி ஆறு மற்றும் ஒன்பதாம் நூற்றாண்டு காலகட்டங்களில் நேரடி ஆட்சியில் இருந்த காலம்.
         அக்காலகட்டங்களில் வல்லம்,செந்தலை பகுதிகளை மையமாக கொண்டு ஆட்சி புரிந்து கொண்டே தென் பகுதிகளை கவணிக்க திருமெய்யம் என்ற நகரை  உருவாக்கி முத்தரையர் மன்னர்கள் ஆட்சி நடத்தினர்.அதில் சாத்தன் என்ற பெயர் கொண்ட மன்னவர்களே இப்பகுதிகளை அதிகமாக ஆட்சி செய்தற்க்கான கல்வெட்டுகளும்,சான்றுகளும் ஏராலமாக கூறுகிறது.
        இதில் திருமெய்யத்தை முத்தரையர்
மன்னரே முதலில் திருமயத்தில் கோவில் எடுப்பித்துள்ளார்.பின்னாலில் அக்கோவிலை சீர்செய்து குடைவரை கோவிலுக்கு கொடைகளை முத்தரையர் குல அரசி பெரும்பிடுகு பெருந்தேவி வழங்கியுள்ளார்...இச்செய்தி திருமெய்யம் குடைவரையில் உள்ள கல்வெட்டு மூலம் அறியமுடிகிறது...

அக்கல்வெட்டு,
                ஸ்ரீ விடேல் விடுகு 
                     விழுப் பேரதி அ
                     ரைசனாயின சாத்
                     தன் மாறன் றாய்
                    பெரும்பிடுகு பெ
                    ருந்தேவி புதுக்கு
                    இதற்க்கு ண்ணாழி
                    புறமாக அண்
                    டகுடி குடுத்து காரா
                   ண்மை மீயாட்சி உள்
                    ளடங்க...
விடேல் விடுகு விழுப்பேரதி முத்தரையர் என்ற சாத்தன் மாறனின் தாயான பெரும்பிடுகு பெருந்தேவியார் கோவிலை புதுப்பித்து, எந்தநாளும் வழிபாடு நடைபெற வேண்டும் என்பற்க்காக அண்டகுடி என்ற ஊரையும் தானாமளித்தார் அரசி பெரும்பிடுகு பெருந்தேவி என இக்கல்வெட்டு கூறுகிறது.
இதுமட்டுமல்லாது இவ்வரசி பல ஊர்களை தானம் கொடுத்துள்ளார்.அவ்வூர்களை அரசி பெயரிலே பெருந்தேவி மங்கலம்,தேவி மங்கலம் என்று அழைக்கப்படுகிறது.

சாத்தன் மாறனின் தந்தை அல்லது அவரது முன்னோர் எடுப்பித்த குடைவரை கோவிலை பின்நாளில் அதன் வம்சவழிந்தவர் சாத்தன் மாறனின் தாய் பெரும்பிடுகு பெருந்தேவியார் புதுப்பித்துள்ளார்...
முத்தரையர் அமைத்த குடைவரையிலே இதுதான் பழமையானவை என பல வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
திருமெய்யத்திலும் மேற்கூறியுள்ளே கல்வெட்டே பழமையாவையாகும்.(திருமெய்யம் ஆண்ட முத்தரையர்கள் பற்றிய வரலாறு ஆய்வு மூலம் தனி தொகுப்பு  பதிவிறக்கம் செய்யப்படும்)

திருமெய்யம் திருமால் சத்தியமூர்த்தி:
                 திருமெய்யத்து திருமாள் தற்போது சத்தியமூர்த்தி என்று அழைக்கப்படுகிறது. திருமயத்தில் குடிகொண்டிருக்கும் சத்தியமூர்த்தி வைணவ சமயப் பிரிவினரின் முக்கியானதொரு கோவிலாகும்.
இக்கோவில் ஆதிரங்கம் என வழங்கப்படுகிறது.ஸ்ரீ ரங்கம் வைணவ கோயிலைவிட காலத்தில் பழமையானது. தென்பாண்டி மண்டலத்து 18பதிகளுல் ஒன்றாகும்.
குகைக்கோயிலிலுல் விஷ்னு பெருமாள் அனந்தயன மூர்த்தியாக காட்சியளிக்கிறார்.புதுக்கோட்டை மாவட்டத்திலே குடைவரையில் பெரிய அளவில் ஆதிசேஷன் என்ற சத்தியமூர்த்தி மலையோடு சேர்ந்து பாறையிலே வடிவமைக்கப்பட்டுள்ளார்...
ஆதிசேஷன் ஐந்து தலை அவதாரமாக உள்ளார்..அனந்தசமய மூர்த்தி பின்னால் உள்ள சுவற்றில் ஒரு கதையே கல்லிலே உருவாக்கப்பட்டுள்ளது.சுவற்றில் பல சிற்பங்களை பொறித்துள்ளனர்.
இடமிருந்து வலமாக கருடன்,சித்திரகுப்தன், மார்க்கண்டேயன்,பிரம்மா (விஷ் நாபிவிருந்து) தேவர்கள்,ரிஷிகள், கின்னராகள் உருவங்களும். இரண்டு அசுரர்கள் கொடுரமான பார்வையுடனும் சித்தகரிக்கப்பட்டுள்ளது.
விஷ்னு காலடியில் பூதேவி வடிவகைப்பட்டுள்ளது.
பெருமாள் மார்பில் ஸ்ரீதேவி அவரது இடகையில் அணைக்க,வலது ஆதிசேஷனைதட்டி கொடுக்கும் பாவனையில் உள்ளது.
              
திருமெய்யம் சத்தியகிரீஸ்வரம்:
                  திருமெயத்தில் சிவபெருமாளை இன்று சத்தியகிரீஸ்வரர் என்று இந்நாளில் அழைக்கப்படடுகிறது. திருமெய்யம் மகாதேவர் கோயில் திருமயம் குன்றின் தென்புறச் சுவரில் அமைந்துள்ள இரண்டு குடைவரைகளில் ஒன்றாகும். குடைவரைக்கு முன்பாக அம்மன் சன்னதியும் பிற தெய்வங்களுக்கு சிறு சன்னதிகளும் மண்டபங்களும்  பிற்காலத்தில் எடுக்கப்பட்டுள்ளன.  கிழக்குப் பார்த்த கருவறையும் தெற்கு பார்த்த அர்த்த மண்டபமும் கொண்ட குடைவரையின் கருவறையிலே லிங்கமுள்ளது. கருவறையின் இருபுறமுள்ள வாயிற்காவலர்களின்  சிற்பங்களும், கருவறையின் எதிர்ப்புறமுள்ள லிங்கோத்பவர் சிற்பமும் மிக அழகானவை.  தமிழகத்தின் பழமை வாய்ந்த லிங்கோத்பவர் சிற்பங்களில் இதுவும் ஒன்று. அர்த்த மண்டபத்தின் நடுவே கருவறையைப் பார்த்தவாறு நந்தி உள்ளது. குடைவரையின் வடசுவர் பாறையில் "பரிவாதினி" என்ற கிரந்தக் கல்வெட்டு செவ்வகக் கட்டம் கட்டி வெட்டப்பட்டுள்ளது.

திருமெய்யம் மேற்குடைவரை சிவபெருமாள்:
                   திருமெய்யம் சத்தியகிரீஸ்வர்,சத்தியமூர்த்தி குடைவரைக்கு  வடக்கு திசையில் தரையிலிருந்து மூன்று ஆள் உயரத்தில் அமைந்துள்ள முத்தரையர் எடுப்பித்த சிவபெருமாள் குடைவரை...
சீறான குடைவரை உள்ளே சிவலிங்கத்தை குடைவித்துள்ளர்.குடைவரையின் நுளைவு வாயிலானது செவ்வக வடிவில் வெட்டப்பட்டு அதன் வெளிப்புரம் பூ போன்ற தோரணங்களாக செதுக்கப்பட்டுள்ளது.
மேலும் திருமெயத்து தெற்க்கு குடைவரையில் பொறித்துள்ளது போலவே வடக்கு குடைவரையின் வெளிபக்கத்தில் "பரிவாதிரி" என்றும் யாழ் இசை கருவியினை கல்வெட்டினை பொறித்துள்ளனர்...ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே குடைவரை,கோவில் கட்டுவதில் முத்தரையர்கள் சிறந்து விளங்கியுள்ளனர் என்பதற்க்கு இக்குடைவரை ஒரு எடுத்துக்காட்டாகும்...

திருமாள் போற்றிய திருமங்கையாழ்வார்;
                     ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட (பாடப்பட்ட) 108 திவ்ய தேசங்களில் 18 திவ்ய தேசங்கள் தெண் நாட்டில் அமைந்துள்ளன.
திருமங்கையாழ்வார்  மங்களாசாசனம்  செய்த கோவிலில் திருமெய்யம் திருமாள் கோவிலும் ஒன்றாகும்.
மேல  
திருமங்கையாழ்வாரும் முத்துராச குலத்தவர் என்பது குறிப்பிடதக்கது...

தற்காலத்தில் முத்தரையர்கள் திருமயம் வட்டாரம்:
                    முத்தரையர்களுக்கும், திருமெய்யத்திற்க்கும் ஆயிரம் கால பந்தம் உள்ளது.அதற்க்கு எடுத்துக்காட்டாக சைவ,வைணவ திருமெய்யர்களும்,தற்காலத்தில் திருமயம் முழுவதும்,திருமயம் சுற்றுவட்டாரம் கிராமங்கள் முழுவதும் அடத்தியாகவும் பரவலாகவும் முத்தரையர் சமுக மக்கள் வாழ்ந்துவருகின்றனர்.திருமயம் சுற்றுபகுதிகளில் வாழும் முத்தரையர்கள் பெரும் நிலமுடயவர்களாக உள்ளனர்.இன்றளவும் விவசாயம்,வேட்டை,ஜல்லிகட்டு,மாட்டு வண்டி,கபாடி போன்ற தமிழ் வீரம் கலந்தவைகளோடு வாழ்ந்துவருகின்றனர்.
இப்பகுதி முத்தரையர்கள் திருமணம், தொழில்,குழந்தை பிறப்பு,போன்ற அனைத்து நற்காரிங்களையும் திருமெய்யர்களை முதன்மைபடுத்தியே இதற தெய்வங்களை வழிபாடு செய்கின்றனர்.மேலும்  கிராம நாடு பிரிவாக கானாடு கோனாடு 108 கிராம முத்தரையர்கள் என வாழ்ந்துவருகிறனர். தற்சயமம் 125க்கு மேற் கிராமங்கள் உள்ளதாக ஆய்வில் தெரிகிறது.
இப்பகுதி முத்தரையர்கள்,முத்துராச, வலையர்,காவல்காரர்,அம்பலம்,அம்பலகாரர் போன்ற பட்டங்களையும் சாத்தன்,மெய்யன்,அடைக்கன்,நாச்சி,தேவி,பிடாரி போன்ற பெயர்களையும் அதிகமாக கொண்டுள்ளனர்.திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் நடைபெரும் வைகுண்ட ஏகாதசி அன்று திருமயம் முத்தரையர்கள் ஒன்று கூடி
தண்ணீர்,அண்ணதானம்,மரகன்று போன்றவற்றை வழங்கி வெகுசிறப்பாக கொண்டாடுகின்றனர்.திருமயம் சுற்றபகுதி முத்தரையர் மக்கள் கோட்டை முனிஸ்வரர்,அடைக்கலம் காத்த அய்யனார்,கன்னிமார்கள்,கருப்பர்,
இளஞ்சாவூர் மாரியம்மன்,சங்கிலி கருப்பர்,காளியம்மமன் போன்ற பல கிராம தெயவங்களையும் வழிபட்டு வருகின்றனர்...

நன்றி..

வரலாற்று தொகுப்பு:
  ஏ.எஸ்.கலையரசன் அம்பலகாரர்,
  சூர்யா,திருமயம் மதி(மு.வ.ஆ உதவி)
  முத்தரையர் வரலாறு ஆய்வுகூடம்


ليست هناك تعليقات:

إرسال تعليق