Breaking

السبت، 25 أبريل 2020

சிவகங்கை சீமை பகுதி-01 வரலாறு

சிவகங்கை சீமை பகுதி-01


சிவகங்கை சீமையானது இராமநாதபுரம் சீமைக்கு உட்பட்டு பின் “சிவகங்கை சீமை”யாக உருவானதாகும்.
சிவகங்கை சீமையை
பல ஜமின்கள் ஆண்டுவந்தனர்...
வேலுநாச்சியாரின் நம்பிக்கை பெற்றவர்களாக மாவீரர் மருது சகோதரர்கள் இருந்துவந்தனர்...
ராணி வேலுநாச்சியாரின்  மறைவுக்கு பிறகு சிவகங்கை சீமை மக்களின் மனதை வெற்றவர்களாகவும்,மக்களுக்கு போராடியவர்களாகவும் மருது பாண்டியர்களே விளங்கினர்...

        சிவகங்கை சீமையானது மையமாகவும் அதை சுற்றி இராமநாதபுரம் சீமை,புதுக்கோட்டை சீமை,நெல்லை சீமை,திண்டுக்கல் சீமை,மதுரை சீமை என்ற முறையில் சிவகங்கை சீமை அமைந்திருந்தது.
              சிவகங்கை  சீமையில் அரசு பரம்பரையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுவந்தது.
  சிவகங்கை சீமையில் போர் படை மிக வழுவானதாக கொண்டவையாகும்.
இதில் வேலுநாச்சியாரின் நம்பிக்கை பெற்ற வீரர்களாக மருது பாண்டியர்களும்,துப்பாக்கி கவுண்டர்(காத்தான் வலையர்),மற்றும் இருளப்பதேவன்,முத்துராக்கு,சின்னவேடன் என பலரும் இருந்துவந்தனர்.அதைபோல நாட்டுக்காகவும்,நாட்டுமக்களுக்காகவும்  வீரமாக வாழ்ந்தவர்கள் ஆவார்கள்...
  போர்படை வீரர்களும்,மக்களும் வீரமிக்கவர்களாகவே திகழ்ந்திருந்தனர்.
         இதில் துப்பாகி படை,வாள் வீச்சுபடை,குத்துஈட்டி படை என பலவகையாக போர் திறன் பெற்றவர்களாக வீரர்களை போர்படையில் வைத்திருந்தனர்.
                     போர் ஆயுதங்களாக:மஸ்கட்,
மாட்ச்லார்,துப்பாக்கி,சருகார்,ஜிஸ்சாலி,ஈட்டி,வேல்,வாள்,குத்துவாள்,ஸரோசர்,துப்பாகிச்சினியன் இதுபோன்ற ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், பின் ஆங்கிலேயர்களால் கையக்கப்படுத்தப்பட்டு அவ்வாயுதங்களை  அறிக்கையின் மூலம் குறிப்பிட்டுள்ளனர்...

               ஆங்கிலேயர்கள் சிவகங்கை சீமையை குறி வைத்தனர். ஆங்கிலேயர்களை கண்டவுடன் தம் நாட்டை ஒப்படைத்த பல ஜமீன்கள் இருப்பின்,சிவகங்கை சீமையிலே எதிர்ப்புதான் நீடித்துவந்தது.சிவகங்கை சீமையின் முழுமையான எதிர்பாகவே இருந்தனர்.சிவகங்கை மக்களை பொருத்தமட்டில் வாழ்ந்தால் வீர மைந்தனாக வாழவேண்டும்,வீழ்ந்தாலும் வீரனாக வீழவேண்டும் என்ற நிலைபாட்டிலேயே இருந்துவந்தனர்.
  
                என்னதான் நாட்டு பற்று இருந்தாலும்,அதில் சில குள்ள நரிகள் இருக்கதானே செய்யும்..ஆம் வீரம் நிரைந்த சிவகங்கை சீமையிலும் சுயநலம் பிடித்த,சுயநலவாதிகளும் இருந்தனர்....
            அது ஒரு புறம் இருக்க சிவகங்கை சீமையை ஒட்டியுள்ள பெரும்சீமையான  புதுக்கோட்டை சீமை விளங்கியது..அப்போதைய புதுக்கோட்டை ஜமினாக புதுக்கோட்டை  தொண்டைமான் கள்ளர்களே இருந்துவந்தனர்.

             ஆங்கிலேயரின் ஒப்பற்ற நண்பனாக விளங்கியவர் புதுக்கோட்டை கள்ளர் தொண்டைமான்...
தொண்டைமான் பற்றி சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் ““துரோகி”” என்ற பட்டத்தின் முழு பொருளாகவே விளங்கினர்...
        ஆங்கிலேயர்களை பல ஜமீன்கள் எதிர்த்தாலும் தொண்டைமான்,எட்டப்பன் இது போல பல துரோகிகள் அடிமைகளாகவே இருந்து வந்தனர் என்று குறிப்பிடதக்க ஒன்றாகவே உள்ளது....

தொடரும்.....

சிவகங்கை சீமை பாகம்-2 
(சிவகங்கை சீமைக்கு நேர்ந்த துரோகம்)பற்றி

தொகுப்பு;
            ஏ.எஸ்.கலையரசன் சேர்வை
            பொன்னமராவதி

முத்துராஜா நெட்வொர்க் - Muthuraja Network

ليست هناك تعليقات:

إرسال تعليق