Breaking

السبت، 25 أبريل 2020

தமிழரின் வரலாறில் தொன்மையான வளரி ஆயுதம்

*தமிழரின் வரலாறில் தொன்மையான  வளரி ஆயுதம்.*🤺





வீரமிக்க தமிழினத்தில் பெருமைக்குறிய ஓர் ஆயுதம்.. எட்டுத்திசையும் அளந்து வீசிய கைகளுக்கே திரும்ப வரும் வியப்பை,
இன்றும் நம்மனதில் நிலையாக ஏற்படுத்தும் பெருமைமிக்க தமிழரின் நுன்ஆறிவு திறமை போற்றும் பண்டைய ஆயுதம்.

இந்த வளரி முதன்முதலில் கொடிய மிருகங்களை தாக்கி மக்கள் நலன்காப்பதற்காக காவல்காரர்களாக- மீனவர்களாக- அரசர்களாக வாழ்ந்த மூத்தகுடி வலையர் மக்களால் 12 நூற்றாண்டுகளுக்கு முன்னரே உருவாக்கப்பட்டது.

வளரி ஆயுதத்தின் பழமை காலம் நாம் அறிந்த சில சான்றுகளின் படி *1200 வருடம் தொன்மையானது தமிழனின் வளரி*. அதற்கும் முந்தயதாகவும் இருக்கலாம். வரலாறு அழிந்துள்ளதால் அறிவுறுத்தி கூற இயலவில்லை வரலாற்று அறிஞர்களால்.

வளரி 12 நூற்றாண்டுகளுக்கு மேல் பழமையானது என்பதே தமிழரின் தனிச்சிறப்பை எடுத்துரைக்கிறது.

முத்தரையர் பேரரசு காலத்திலும், மாமன்னர் இராஜராஜ சோழன் காலத்தில் போர் கருவியாகவும் இந்த வளரி சிறந்ததாக கூறப்பட்டுள்ளது.

*வளரி பழமையை உணர்த்தும் ஒரே சான்று கி.பி. 11 நூற்றாண்டில் வாழ்ந்த வளரி வீசும் முத்தரையன் (எ) வீரமல்ல முத்தரையர் வரலாறு என்பதே ஆகும்.*

வீரமல்ல முத்தரையர் தமது முன்னோர்களின் வளரி கையாளும் திறமையை திறம்பட உலகிற்கு எடுத்துரைத்து வளரி வீரனாகவே வரலாற்றில் அழிய இடம்பிடித்துள்ளார்.🤺

*(சான்று : வேங்கையின் மைந்தன்.)*- வரலாற்று சரித்திர நாவல்.

அதன்பிறகு தொன்றுதொட்டு வந்த தமிழின வீரமிக்க ஆயுதங்கள் பல ஆங்கிலேயர் காலத்தில் திட்டமிட்டு அழிக்கப்பட்டன. 

*வளரி, வேல்கம்பு மற்றும் போர் ஆயுதங்களை கொண்ட காவல்காரர், ஊர்தலைமை சிற்றாட்சியர் முத்தரையர்களில் பெருமளவு மக்கள் அம்பலகாரர், சேர்வை, வலையர், வலையமார் மூப்பர் உட்பட பலர் உள்நாட்டிலே நிலங்கள் பறிக்கப்பட்டு அகதிகளாக மாற்றப்பட்டனர். சில கள்ளர் மறவர் மற்றும் சில இனங்களும் இதில் அடங்குவர்.*

வீரமிக்க தமிழ்மறவர்களாக  அனைவரும் ஆங்கிலேயனை எதிர்க்க எஞ்சியுள்ள சில வளரியை பாதுகாத்து பயன்படுத்தி தமிழர் இனமானம் காத்தனர்.

300 ஆண்டுகளுக்கு முன்பு வளரியை பயன்படுத்தி இன்றைய காலத்தில் நாம் அறிய வழிவகுத்தவர்கள் மருது சகோதரர்கள் என்ற வீரமிக்க படைத்தளபதிகள் ஆவர்.

வரலாற்று சிறப்புமிக்க வளரி எனும் வலையர்களின் வலைஎறி- வலைதடியை பாதுகாப்பது தமிழர்களின் கடமை. பாரம்பரிய வழிபாட்டில் சில வளரியை கண்டு நாம் கையிலேந்தி நிற்கும் தருணம் செருக்குடன் மகிழ்ச்சியை தருவதாகும்.

*வளரியின் மகத்துவம் அறிவோம்...!*
*12 நூற்றாண்டு தொன்மமிக்க வளரியை பாதுகாப்போம்...!*

*🔥மறைக்கப்பட்ட வரலாற்றை தமிழர்கள் வெளிக்காட்டுவோம்..*.🙏🙏

முத்துராஜா நெட்வொர்க் -Muthuraja Network

هناك تعليق واحد: