சிவகங்கை சீமை வரலாறு பகுதி-04
ஆங்கிலேயர் சிவகங்கை சீமையில் கைபற்றிய ஆயுதங்கள்...
சிவகங்கை சீமையை மருது சகோதர்கள் காத்துவந்துள்ளனர்.மேலும் புதுக்கோட்டை தொண்டைமான் செய்த துரோகத்தால் அவர்கள் வீர மரணம் அடைந்தனர்...அதை நம் முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டுள்ளோம்....அதை போல இப்பதிவில் மருது சகோதரர்கள் போருக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் பற்றியும் ஆங்கிலேயர் மருது பாண்டியர்களிடம் இருந்து கைபற்றிய ஆயுத அறிக்கைகளை பற்றி பார்ப்போம்.....
சிவகங்கை சீமையில் வீரர்களுக்கும் ஆயுதங்களும் பஞ்சிமில்லை....
இதில்
16-1-1802ம் ஆண்டு தேசிய கணக்கிட்டின்படி
சிவகங்கை சீமையில்,
மஸ்கட்-1050 ஆயுதங்கள் மட்டும் கைபற்றியுள்ளனர்....
ஆனால் நெல்லை மற்றும் இராமநாதபுரம் சிமையில்,
மஸ்கட்,மஸ்ஸில்லோடிங் துப்பாகி,கைத்துப்பாக்கிகள்,வால்பீஸ்,பீரங்கி,
நீண்ட ஈட்டிகள் என நெல்லையில் மொத்தமாக
5558ஆயுங்களும்,இராமநாதபுர சீமையில் 2992ஆயுங்களும் கைபற்றியுள்ளனர்....
(21-2-1802ஆம் ஆண்டு தேசிய அறிக்கை)
சிவகங்கை சீமை
மஸ்கட்-------------------1639
பிரங்கி-------------------0
மாட்சிலாக்-------------944
கைத்துப்பாக்கி------19
மஸ்கட்(மாட்சிலாக்லோட்)-8
சருகார்--------------------78
ஜிஞ்சாலி-----------------14
ஈட்டிகள்--------------------3275
ஈட்டி முனைகள்--------108
ஈட்டி தடி---------------------0
துப்பாக்கி சனியன்--91
கைத்துப்பாக்கி(குழாய்)-1
இவ்வாயுங்களை கைப்பற்றியுள்ளனர்...
அதை போல நெல்லை மற்றும் இராமநாதபுரம் சீமையில் கைப்பற்றியுள்ளனர்.....
31-3-1802தேசிய அறிக்கை(4-1-1801முதல் 31-3-1802)வரை
சிவகங்கை சீமை
துப்பாகியும்,குழாய்கள்-----2096
மாட்சிலாக் -----1229
வேல்,ஈட்டி -------3640
கைத்துப்பாகிகள்--------------42
வாள்----------------------------------652
குத்துவாள்------------------------441
ஜிஞ்கால்---------------------------17
ஸரோசர்-----------------------------90
துப்பாக்கி சனியன்------------91
சிவகங்கை சீமையில் இவ்வாயுதங்களையும்,நெல்லை மற்றும் இராமநாதபுர சிமையிலும் கைப்பற்றியுள்ளனர்........
மேலும் இச்செய்தி
Madurai district records vol.1178(A)(17-5-1802)p.354
Madurai district records vol.1139(16-1-1802)p.27
Madurai district records vol.1140(31-3-1802)p199
Ipai 1141(31-3-1802)p 25-53 குறிப்பிடப்பட்டுள்ளது.
அதை ,
நூல்-- மாவீரர் மருதுபாண்டியர்
ஆசிரியர் டாக்டர் S.M.கமால் அவர்களின் நூலில் ப.எண்186 மற்றும் 187ல் குறிப்பிட்டுள்ளார்....
இதில் வளரி எங்கே?????
சிவகங்கை சீமை என்றாலும் மருது பாண்டியர் என்றாலும் முதலில் குறிப்பிடும் ஆயுதமாக வளரியை கூறுகின்றனர்...வளரி பற்றி பலரும் கூறுவது அது ஒரு கொடிய ஆயுதம்,தலையை சீவி விடும்,அதன் சத்தம் கேட்டால் ஆங்கிலேயர்கள் பயந்து ஓடினர்..மருது பாண்டியர்கள் வளரி வீசுவதில் வல்லவர்கள் என்று பலரும் க வளரியை கூறுகின்றனர்..
அவ்வாறு ஆங்கிலேயரை அச்சுருத்திய வளரியை கண்டு ஆங்கிலேயன் பயந்திருந்தால் இப்பட்டியலில் வளரி இடம் பெற்றிறுக்க வேண்டும்தானே????
ஆனால் இடம் பெறவில்லை....இதை வைத்து பார்க்கும் போது வளரி என்ற ஆயுதம் ஆங்கிலேயரை அச்சுருத்தவில்லையா?????? அல்லது மருது பாண்டியர்கள் வளரியை பயன்படுத்தவில்லையா??????என்ற கேல்வி எழுகிறது.....
ஆனால் மருது பாண்டியர்கள் பயன்படுத்திய வளரி என்று கண்காட்சி பொருளாக வளரி இடம் பெற்றுள்ளது இது எப்படி என்பது ஒரு பக்கம்!!!!
வளரி பயன்படுத்தியவர்களிடம் மிஞ்சிபோய் ஒருசில வளரி இருக்கவேண்டும்????
சிவகங்கை சீமை மற்றும் புதுக்கோட்டை சீமைகளில் வளரி இருக்கிறது...ஆனால் ஆதி குடியான வலையர் சமுகத்தினர் மக்களிடமே உள்ளது.வளரியின் தொன்மை இன்றும் வலையர்களிடமே காணமுடிகிறது...
வளரயின் நெருக்கதை வலையர் குடி மக்களிடமே காணலாம் குறிப்பாக மர வளரி மற்றும் இரும்பு வளரி இரு வகையிலும் வளரியை வலையர் மக்கள் மட்டும் வைத்துள்ளனர் என்பதில் மாற்றுகருத்தில்லை.....
ஆங்கிலேயர் கைப்பற்றிய ஆயுதங்கள் போக மீதம் இருந்த ஆயுதங்களை மீஸ்சியம் போன்ற இடங்களில் கண்காட்சி பொருளாக மாறிபோனது வீரர்களின் ஆயுதங்கள்...அவற்றில் ஒன்றாக வளரியும் உள்ளது அது இடத்திற்க்கு தகுந்தவாறு அப்பகுதியில் உள்ளவர்களின் பெயரினை குறிப்பிட்டு வைத்துள்ளனர் என்பதுதான் வேடிக்கையான ஒன்றாக உள்ளது.....
குறிப்பு மருது பாண்டியர் இருந்த பகுதியிலும் வலையர் குடிமக்களே வளரி இன்று வைத்துள்ளனர்....
நன்றி..
தொகுப்பு;
ஏ.எஸ்.கலையரசன் சேர்வை
பொன்னமராவதி
முத்துராஜா நெட்வொர்க் - Muthuraja Network
ليست هناك تعليقات:
إرسال تعليق