ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் கலமல்லாவில் கிபி 5-ஆம் நூற்றாண்டை சேர்ந்த தெலுங்கு நாட்டையாண்ட சோழர்களான "ரேனாட்டு சோழர்" பற்றிய கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இக்கல்வெட்டே தெலுங்கு மொழியின் மிகப்பழமை வாய்ந்த முதல் கல்வெட்டாகும்.
இந்த கல்வெட்டிற்க்கு விளக்கம் அளித்துள்ள மத்திய அரசின் மத்திய தொல்லியல் துறையினர்கள் 1947-1948 ஆம் ஆண்டு தொல்லியல் துறையினரால் வெளியிடப்பட்ட "Epigraphica indica vol 27" ல் இக்கல்வெட்டு சம்பந்தமாக விளக்கம் அளித்துள்ளனர்.
அதில் ரேனாட்டு சோழ வம்சத்தினரே முதன் முதலில் முத்துராஜா என்ற பட்டம் தாங்கியவர்கள் என்றும். முத்துராஜா என்றால் ரேனாட்டு சோழ வம்சத்தின் இளைய மரபினர் என்றும் இதற்க்கு ஆதாரமாக மத்திய அரசின் Epigraphica indica vol 27 நூலில் கலமெல்லா சோழர் கல்வெட்டில் சோழர்கள் முத்துராஜா பட்டம் தாங்கியவர்கள் என்றும் இந்த முத்துராஜா பட்டமே பின்னாட்களில் முத்தரையர் என்று மருவியதாகவும் மத்தியதொல்லியல் துறை கூறுகின்றது.
முத்தரைய மன்னர்கள் சோழர் மரபினர் என அரசாங்கமே அறிவித்துள்ளது.
முத்தரையர்கள் சோழர் மரபினர்கள்
முத்து(ராஜா) என்னும் சோழ இளவரசருக்கான பட்டமே பின்னாட்களில் முத்து(அரையர்) என்று உருப்பெற்றது. ராஜா என்ற தெலுங்குச்சொல்லின் தமிழ் வடிவம் அரையர் ஆகும். முத்துராஜா முத்தரையராக ஆகியது இதன் மூலம் தான் என்று தெளிவாகுகின்றது இதையே தொல்லியல் துறையும் கூறுகின்றது.
முத்துராஜா என்ற சொல்லாடளின் மற்றோரு வடிவமே முத்தரையர்
முத்து+ராஜா - முத்து+அரையர்
ராஜா என்றாலும் அரையர் என்றாலும் ஒரே பொருள் தான்
தெலுங்கில் ராஜா தூய தமிழில் அரையர்.
ராஜா - அரையர்
அரையர் என்றால் அரசர் என்று பொருள்.
இதை கலமெல்லா கல்வெட்டு தெளிவுபடுத்துகின்றது.
* முதி,முது என்பதற்க்கு பொருள் மூத்த என்று அர்த்தம்
* முத்துராஜா என்ற தெலுங்கு சொல்லாடலின் தமிழ் வடிவம் முத்தரையர் மற்றும் கன்னட வடிவம் முத்துராசா ஆகும்.
மேலே மத்திய தொல்லியல் துறையினர் கூறியதுபடி பார்த்தால் இன்றும் ஆந்திராவில் முதிராஜ்,முடிராஜ் என்றும் கர்நாடகாவில் முத்தராசா என்றும் தமிழ்நாட்டில் முத்தரையர்,முத்துராஜா,முத்திரையர் என்று முத்தரையர்கள் வாழுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முத்துராஜா என்ற சமூகம் யார் என்று தமிழக அரசின் கெசட் மற்றும் ஆங்கிலேயர் கால குறிப்புகளில் பார்த்து தெளிவுபடுத்திக் கொள்ளவும்
கட்டுரைகள்
செம்மொழி தெலுங்கின் கலமல்லா கல்வெட்டு
- சேசாத்திரி - கட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு 28 அக்டோபர் 2015
செம்மொழி தெலுங்கின் கலமல்லா கல்வெட்டு! சேசாத்திரி ஶ்ரீதரன-நடுவண் பண்பாட்டு அமைச்சகம் தெலுங்கிற்கான செம்மொழி வல்லுநர் குழு ஒன்றை அமைத்து அதன் பரிந்துரையின்படி 2008 நவம்பரில் இல் தெலுங்கைச் செம்மொழியாக அறிவித்தது.
இதற்கு 1,500 முதல் 2,000 ஆண்டுகள் பழைமை உடைய இலக்கியங்கள் அல்லது பதியப்பட்ட வரலாறு இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில்1904 இல் சென்னையில் இருந்து செயற்பட்ட இந்தியத் தொல்லியல் துறையினர் மேற்கொண்ட கள ஆய்வில் கடப்பை மாவட்டம் கமலாபுரம் வட்டம் ஏற்ரகுடிபாலேம் கலமல்லா ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் கோவிலில் கண்டு அறியப்பட்ட ரேனாட்டு சோழன் எரிகல் முத்துராசு தனஞ்செயன் பற்றிய கல்வெட்டு எழுத்தமைதியால் பழமையானது இதாவது, கி.பி. 575 ஆம் நூற்றாண்டினது என்று முடிவு செய்யப்பட்டு அதை நடுவண் பண்பாடு அமைச்சகத்திற்கு சான்று ஆவணமாகக் காட்டியுள்ளனர்.
ரேநாடு என்பது இற்றைய இராயல்சீமையின் கடப்பை மாவட்டத்தைச் சுற்றி அமைந்த நாட்டுப் பகுதியாகும். இதை ஆண்ட சோழர்கள் ரேநாட்டுச் சோழர்கள் எனப்பட்டனர். யுவான் சுவாங்கின் பயணக் குறிப்பில் உள்ள "சுளியர்" என்பதை மேற்கோளாகக் கொண்டு சிலர் சோழர்களை கி.பி 7 ஆம் நூற்றாண்டு முதல்13 ஆம் நூற்றாண்டுவரை ஆண்டவர்கள் என்று கூறுவது உண்டு.
இக்கல்வெட்டு கோவில் வளாகத்தில் கிடத்தப்பட்டிருந்த உடைந்த தூணின் இரண்டு பக்கங்களில்17 வரிகளில் வெட்டப்பட்டுள்ளது. இதில் நான்கு வரிகள் (12 - 15) சிதைந்து உள்ளன. அதை சென்னைக்கு கொண்டுவந்து தொல்பொருள் சேமிப்பில் வைத்திருந்துள்ளனர். ஆனால் இப்போது அக்கல்வெட்டு காணாமல் தொலைக்கப் பட்ட நிகழ்வு தொல்லியல் ஆர்வலர்களை பெரிதும் வருத்தமுறச் செய்துள்ளது. இனி, இக் கல்வெட்டு பாடமும் விளக்கமும்.
1. ...................
2. కల్ముతురా kalmutura கல்முத்துரா
3. జు ధనంజ ja dananja ஜ தனன்ஜ
4. య ఱు రేనా ya ru raina ய ரு ரைனா
5. ణ్డు ఏళన్ ndu elen ண்டு ஏலன்
6. చిఱుంబూరి chirumburi சிறும்பூரி
7. రేవణకాలు (పం) raivanakalu (pam) ரைவணகாலு(பம்)
8. పు చెనూరు కాజు pu chenuru kaju பு செனூரு காஜு
9. ఆఱికాశా ఊరి arikasa ori அரிகாசா ஊரி
10. ణ్డవారు ఊరి ndavaru ori ண்டவாரு ஊரி
11. న వారు ఊరిస... na vaaru orisa னவாரு ஊரிச
12.
13.
14.
15.
16. హాపాతకస hapatakasa ஹபாதகச
17. కు. ku கு
கல்வெட்டு பாடம்:
......../ కల్ముతురా / జు ధనంజ / య ఱు రేనా / ణ్డు ఏళన్ / చిఱుంబూరి / రేవణకాలు / (పం) పు చెనూరు కాజు / ఆఱికాశా ఊరి / ణ్డవారు ఊరి / న వారు ఊరిస.../ హాపాతకస / కు
... / கல்முத்துரா / ஜு தனஞ்ஜ / ய ரு ரைனா / ண்டு ஏலன் / சிறும்பூரி /ரைவணகாலு (பம்) / பு செனூரு காஜு / அரிகாசா ஊரி / ண்டவாரு ஊரி / னவாரு ஊரிச .... / ஹபாத கச / கு
..... / kalmutura / ju dananja / ya ru raina / ndu elen / chirumburi / raivanakalu (pam) / pu chenuru kaju / arikasa ori / ndavaru ori / na vaaru orisa.... / hapatakasa / ku
Dhananjaya - செல்வத்தை வென்றவன், அருச்சுனனின் மற்றொரு பெயர்: இலக்கிய பதிவு: Srimad Bhagavatam 1.9.3; ரேவண்த - இந்த கல்பத்தின் 5 ஆவது மனுவின் பெயர் , சூரியனின் ஒரு மகனுக்கு பெயர்; ஏலன் - to oppose, battle ; காலு (கால்) - மகன், கால்வழி, காலாட்படை; ஆரிகாசா - கொக்கரித்து ஆரவாரித்து போருக்கு எழுந்து வெளியேவந்தான்; இண்டு + அர் = இண்டர் - இடையர், இழிகுலத்தோர் "இண்டக்குலத்தை" திவ். திருப்பல் 5; pata kasaku - (கசகுதல்) - பின்வாங்குதல்.
ليست هناك تعليقات:
إرسال تعليق