கரிகால்சோழன் முத்தரையர் வரலாறு
கரிகால் சோழன் கீர்த்தி பெற்ற முத்தரையர் சோழ மன்னன் ஆவான். உறையூரை தலைநகராக கொண்டு சோழ நாட்டை ஆட்சி செய்தவன். இவன் செயற்கரிய செயல்களை மக்களுக்கு செய்து அழியாப் புகழ் பெற்றவன். இக் கரிகாலன் முத்தரையர் குலத்து, சூரிய வம்சத்தை சேர்ந்தவனாவான்.
கரிகாலன் முத்தரையர் குலத்தவன் என்று பல்வேறு சான்றுகள் கிடைத்துள்ளன. அவையாவன;
பழனி மடம் பற்றிய செப்பு பட்டயத்தில் (கி.பி.1674)ல் வெட்டியதில், பின்பக்கம் வரி எண் 3லுள்ள வரியில் முத்தரையர் சூரிய வம்சத்தினர் என்று கூறுகிறது. இம் முத்தரையர்கள் கோப்புலிங்க ராஜாவின் வம்சத்திலே பெண் எடுத்தவர்கள் என்றும், சோழருடனிருந்தவர்கள் என்றும், சோழர் சார்பாக பாண்டியரை வென்றவர்கள் என்றும் வரிகள் 62முதல் 64வரை கூறுகின்றது.
ஆலங்குடி நாட்டு அம்பலம் திரு.மயிலப்பன் முத்தரையரிடமுள்ள செப்பேடு சகாத்தம் 1400க்கு கி.பி 1478ல் உள்ள செப்பேட்டில் கரிகால் சோழனும், உக்கிர வீரபாண்டியன் ராஜாவும் முத்தரையர்க்கு கரை பிரியல் செய்ததாகக் கூறுகிறது.
திருவரங்குளத்தை அடுத்துள்ள "இம் மண் ஆண்டான்பட்டி" யிலிருக்கும் அருணாசலம் அம்பலக்காரரிடம் உள்ள முத்தரையர் செப்பேட்டில் (கி.பி.1430) "சூரிய முத்திரியர் எட்டுக்கரைப் பேர்" என்றும் எட்டுப்பட்டங்களையும் கூறுகிறது.
திருவரங்குளத்தை அடுத்துள்ள கோயில்பட்டி ஆதிதிராவிடர் திரு.பிச்சன் மானாங்காத்தான் என்பவரிடமுள்ள செப்பேடு கி.பி.1478ல் "கரிகால் சோழன் குழுவினர்" என்றும் சூரிய முத்திரியர் என்றும் கூறுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் செம்பூதி கிராமத்திலுள்ள கிருஷ்ணசாமி நாயுடு அவர்களிடமுள்ள கி.பி.1378ம் வருட செப்பேட்டில் கரிகால் சோழனை முத்தரையர் என்று குறிப்பிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கரிகால் சோழனை முத்தரையர் என்று குறிப்பிடும் செப்பேடுகள் இருக்க மைசூர் நாட்டில் தலைக்காடு பகுதியை ஆண்ட கங்கர்கள் தங்களை "விருத்த ராஜா முத்தரையர்" என்று அழைத்துக்கொண்டனர். இவர்கள் "தமிழ் முதுகுடி மக்கள்" எனக் குறிப்பிடுவதற்காக தம்மை "முது அரசர்", முத்தரசர்" என்று கூறிக்கொண்டனர்.(தினமணி)28-10-88)
கங்க அரசர்கள் கி.பி.550லிருந்து 600க்குள் ஆண்ட "துர்விநீதன்" என்ற சிறந்த மன்னனின் தேவி ஒரு சோழ இளவரசியாவாள். அவள் "உரகபுரத்தை ஆண்ட, கரிகால் சோழனின் வழிவந்தவனும், பரம ஷத்திரியனுமான சோழ அரசனின் பெண்" என்று குறிக்கப்பெறுகிறாள். அதை குறிக்கும் செப்பேடு "உரகபுராதிப பரம ஷத்திரிய சோழ, குல திலக ஸ்ரீ சாக்த சரண சந்தான பிர சூதா" என்று கூறுகிறது. "சந்தானம்" வழித்தோன்றிய என்று பொருள். கரிகாலன் சிறுவனாக இருந்த போது தீயிலிருந்து தப்பினான். அப்போது அவனது காலை தீ சுட்டதால் "கரிகாலன்" எனப்பெயர் பெற்றான் என்பது பண்டைய தமிழ் வரலாறு கூறும் உண்மையாகும்.
இத்தமிழ் மரபைக் கங்கர்களது செப்பேடுகள் உறுதி செய்கின்றன. கங்க அரசன் துர்விநீதனுக்கு மகன் வயிற்று மகன் (பேரன்) ஸ்ரீ விக்கிரமன் என்று ஒருவன் இருந்தான். அவன் பின்னர் கங்க அரியணை ஏறினான். அவனும் சோழ இளவரசியை மணந்தான் அவனை கூறும்போது கங்கர் செப்பேடு "காவிரிக்கு கரை கட்டிய கரிகால் சோழனின் குலத்து உதித்தவள்" என்று "காரித காவேரி தீர கரிகால் சோழ குல வம்ச சோழ நிரூபதிபுத்ரி" எனப் புகழ்கிறது. கங்கர்கள் தம்மை காரிகாலச் சோழ குலப்பெண் வழிவந்தவர்கள் என்று கூறி பெருமைப்படுகிறார்கள்.
இப்பொழுது பாருங்கள் எங்கையோ மைசூர் பகுதியை 1300 ஆண்டுகளுக்கு முன் ஆண்ட கங்க அரசர்கள் தம்மை "முத்தரையர்" என்றும், "கரிகால் சோழ குலத் தொடர்புடையவர்" என்றும் தமது செப்பேடுகளில் கூறிக்கொள்வதும், தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில், உள்ள பல செப்பேடுகளில் கரிகால் சோழன் குழுவிர் என்று கூறுவதும் வரலாற்றின் சான்றாக உள்ளது. இவர்கள் 10வது நூற்றாண்டு முதல் 14-15ஆம் நூற்றாண்டு வரை புதுக்கோட்டைப் பகுதிகளில் தானைத் தலைவர்களாகவும், வளநாட்டை ஆளும் தலைவர்களாகவும் கல்வெட்டுக்களில் காணப்படுகிறது.
உறையூரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த சோழர் கரிகால் பெருவளத்தான். புகாரையும் தலைநகராக கொண்டனர். உறையூர் பண்டை காலத்தில் "உறந்தை" என்றும் அழைக்கப்பட்டது. இந்தச் சோழர்கள் கிள்ளிவளவன், சென்னி, செம்பியன், என்றெல்லாம் அழைக்கப்பட்டனர். இந்த நாட்டை ஆண்ட முத்தரையன் இளஞ்சேட் சென்னி இவனே கரிகாலனின் தந்தை ஆவான்.
ரேநாடு என்பது கடப்பை, கர்நூல், அனந்தப்பூர் மாவட்டங்களடங்கிய பகுதிகளாகும். இதன் தலைநகர் "சீட்புலி" ஆகும். இந்நாட்டை கரிகாலன் வெற்றி கொண்டான். அங்கே காட்டை அழித்து நாடாக்கினான், நகரங்களாக்கினான். ஏரி, குளம் வெட்டி நீரைப் பெருக்கி, நிலவளம் காத்தான். இந்த தெலுங்கு சோழர்கள் சூரிய குலத்தவர் ஆவார்கள். இவர்கள் புலிக்கொடியை கொண்டிருந்தனர். இவர்கள் தங்கள் செப்பேடுகளில்
"தினகரன் குலத்தினராகிய மந்தார மரத்திற்குறிய
காவிரி தேசத்திலிருந்து வந்த திரை ராஜ்யர்களாகிய
கரிகாலன் வழி வந்த காஸ்யப கோத்திரர்"/என்று கூறுகின்றனர்.
வாராங்கல்லைத் தலைநகராக கொண்டு ஆட்சிபுரிந்த காகதீயர்கள் தங்களை கரிகால் சோழனின் மரபினர் என்கின்றனர். காகதீயர், பொத்தப்பி சோழர், ரே நாட்டுச் சோழர் ஆகியோர் தங்களை சூரிய குலத்தவர் என்றும், கரிகாலன் மரபினர் என்றும் அழைத்துக் கொள்கின்றனர்
ليست هناك تعليقات:
إرسال تعليق