தேவேந்திர குல மக்களுக்கு ஊரை காணியாட்சியாக கொடுத்த முத்தரையர்கள்
தேவேந்திர குல மக்களுக்கு ஊரை காணியாட்சியாக கொடுத்த முத்தரையர்கள்!
புதுக்கோட்டை மாவட்டம்,பொன்னமராவதி ஒன்றியம்,வலையப்பட்டி அருகே உள்ள மணப்பட்டி என்ற ஊரை காணியாட்சியாக கொடுத்த பட்டயம்.
கி.பி 18ம் நூற்றாண்டு காலத்தில் கானாட்டார்,கோனாட்டார் எல்லை சண்டையில் 22பேர் தலைப்பலி கொடுத்தனர்.அவ்வீரத்தையும்,தியாகத்தையும் போற்றி நல்லமெய்யான்,நாட்டாபிள்ளை உள்ளீட்டாருக்கு "நாட்டான் முத்திரியன் வில்லூனி நத்தம் மணமங்கலம் நல்லூரை"
பிடார முத்திரியர்,சக்கர முத்திரியன்,
செம்ம முத்திரியர்,
காடமுத்திரியன்,குப்பிடார முத்திரியன் இவர்கள் இவ்வூரை காணியாட்சியாக கொடுத்துள்ளனர்.மேலும் இன்றவும் சுவாமி வலையப்பட்டி அடைக்கலம் காத்த ஐய்யனார் கோவில் வழிபாடு மற்றும் வலையப்பட்டி நாட்டார்களில் உள்ள கிராம நாட்டில் இன்றளவும் நாட்டாப்பிள்ளையாக உள்ளனர்.
நன்றி.
இங்ஙனம்
ஏ.எஸ்.கலையரசன் அம்பலகாரர்
முத்தரையர் வரலாறு ஆய்வுக்கூடம்
ليست هناك تعليقات:
إرسال تعليق