Breaking

السبت، 29 يناير 2022

வலையர்தடி வளரி ஆவணம்

 வலையர்தடி வளரி ஆவணம்

வலையர்தடி வளரி ஆவணம் பதிவு-16

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டம்,எடுத்தனூர் கிராமத்தில் உள்ள இரண்டு இரும்பு வலையர்தடிகள்.

வளரி  என்றாலே அது வலையர்களின் ஆயுதம்தான்.அதற்கு சான்றாக இன்றளவும் முத்தரையர் சமுகத்தில் மட்டும் வலையர்தடிகள் உள்ளது.
தம் குல தெய்வத்திற்க்கு நிகராக வளரியும் உள்ளது என்பது வளரியின் முக்கியத்துவத்தை உணரமுடியும்.

தமிழகத்தில் அதிக வளரி உள்ள மாவட்டம் என்றால் தற்போதைய எமது கணிப்புபடி அது சிவகங்கை மாவட்டம்தான்.அதற்க்கு அடுத்தபடியாக புதுக்கோட்டை மாவட்டம் உள்ளது.

எடுத்தனூரில் காவல்தெய்வமான 
சுவாமி தர்ம சாத்தார்,ஸ்ரீ பாலையடி காளி தெய்வ வழிபாட்டில் வளரி முக்கியம் வாய்ந்த ஆயுதமாக உள்ளது.
சுவாமி தர்ம சாத்தார் தெய்வம் முத்தரையர் மன்னர்களில் சாத்தன் மரபை தொடர்புப்படுத்துகினது.
புதுக்கோட்டை மாவட்ட பகுதியில் சாத்தன் மாறன்,சாத்தன் பூதி,சாத்தன் பூதிகளரி,சாத்தன் மாறன் போன்ற மன்னர்கள் ஆண்ட பூமியாகும்.அதன் தொடர்பு வம்சாவளிகள் இன்றளவும் பொன்னமராவதி வட்டார பகுதிகளில் சாத்தன் என்ற குல பட்டம் கொண்டு முத்தரையர் சமுகம் வாழ்ந்துவருகிறனர்.அதே போல சாத்தன் முத்தரையர் மரபில் வந்தவரே இந்த தர்ம சாத்தனாராக இருக்க வேண்டும்.(மேலும் விரிவான ஆய்வு செய்து முழுமையாக பதிவிடுவோம்).

நன்றி.

படஉதவி-தம்பி எடுத்தனூர் மணிகண்டன்(மு.வ.ஆ.எடிட்டர்)

இவண்
   ஏ.எஸ்.கலையரசன் அம்பலகாரர்
   முத்தரையர் வரலாறு ஆய்வுக்கூடம்



ليست هناك تعليقات:

إرسال تعليق