ஸ்ரீகண்ணப்ப நாயனார் வரலாறு
வேடன் கண்ணப்பரின் வரலாறு:
கண்ணப்பரின் இயற்பெயர் திண்ணன் என்பதாகும். இவர் பொத்தப்பி நாட்டை உடுப்பூரிலிருந்து அரசாண்ட நாகராஜன் எனும் மன்னனின் மகனாகப் பிறந்தவர். வில்வித்தை,குதிரையேற்றம்,யானையேற்றம் என்று இளமையிலேயே வீரத்தில் சிறந்தவராக இருந்த திண்ணப்பர் சிவ பக்தியிலும் சிறந்து விளங்கினார்.
திண்ணப்பர் ஒருநாள் நாணன், காடன் எனும் தமது நண்பர்களுடன் திருக்காளத்தி மலைச்சாரலில் வேட்டையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு இருந்த குடுமிநாதரின் சிலையைக் கண்ட திண்ணப்பர் பக்தி மேலீட்டால் தாம் வேட்டையாடிய இறைச்சிகளையெல்லாம் இறைவனிடத்தில் படைத்து பூசிக்கத் தொடங்கினார். அவ்வேளையில் சிலையாய் இருந்த சிவபெருமானின் திருக்கண்ணிலிருந்து இரத்தம் கசியத் தொடங்கியது. அதுகண்டு பதறிய திண்ணப்பர் தமது கரத்திலிருந்த அம்பினாலேயே தமது கண்ணைத் தோண்டி இறைவனின் கண்ணில் பொருத்தினார்.
அதன் பின்னர் அந்தக் கண்ணிலிருந்து இரத்தம் சொட்டுவது நின்றது. ஆனால் சிவபெருமானின் அடுத்த கண்ணிலிருந்து இரத்தம் சொட்டியது, கண நேரம் சிந்தித்த திண்ணப்பர் உடனே தமது கால்களில் ஒன்றனைத் தூக்கி இரத்தம் வழியும் கண்ணின் மீது வைத்து, தமது இரண்டாவது கண்ணையும் தோண்டத் துணிந்தார் !. அவ்வேளையில் “நில்லு கண்ணப்பா! நில்லு கண்ணப்பா !!” என்ற அசரீரி வாக்கோடு தின்னப்பருக்கு முன் சிவபெருமான் காட்சியளித்தார். அது முதல் திண்ணப்பர், கண்ணப்பரானார் !
முத்தரையர்களுள் இன்றும் ஒரு பிரிவினர் ‘கண்ணப்பர் குல வலையர்’ என்ற பட்டப்பெயருடன் வாழ்ந்து வருகின்றனர். கண்ணப்பரைத் தம் குல முன்னவனாகக் கருதும் இவர்கள் மாசிமாத அமாவாசைக்குப் மறுநாள் பாரிவேட்டைக்குச் சென்று வேட்டையாடிய பறவைகளையும், விலங்குகளையும் கொண்டுவந்து இறைவனுக்குப் படைப்பர். இன்றளவும் இச்சடங்கு முறைகள் நடைபெற்று வருகின்றன.
Muthuraja Network -முத்துராஜா நெட்வொர்க்
No comments:
Post a Comment