Breaking

Saturday 5 January 2019

நார்த்தாமலை முத்தரையர் வரலாறு -Mutharaiyar Varalaru

நார்த்தாமலை முத்தரையர் வரலாறு

முத்தரையர் மன்னரால் உருவாக்கப்பட்ட
நார்த்தாமலை சிவன்கோயில்:

      முத்தரையர் மன்னரால் உருவாக்கப்பட்ட நார்த்தமலை சிவன்கோயில் தற்போது  கோயில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது நேற்று
#சிவன்லிங்கம் சிலை காட்சியளித்த 
 வீடியோ பதிவு.......

திருச்சிராப்பள்ளி - புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் திருச்சிராப்பள்ளியிலிருந்து 36 கிலோமீட்டர் தொலைவிலும் புதுக்கோட்டையிலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது

 இந்த நார்த்தாமலை.
நார்த்தாமலை கோவில் முத்தரைய மன்னரான #சாத்தன் என்பவரால் 9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். ஏறக்குறைய ஆயிரத்து முன்னூறு வருடங்களுக்கு முன்னால், (கி.பி ஏழாம் நூற்றாண்டு முதல் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டு வரை ), பல்லவ இராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்த நார்த்தாமலை, தஞ்சாவூர் #முத்தரையர் வம்சத்தின் நேரடி ஆதிக்கத்தில் இருந்திருக்கிறது.

இந்த நார்த்தாமலை கோவில் - #தஞ்சை பெறிய கோவிலுக்கு வழிகாட்டியான கோயில் இருந்திருக்கிறது.
.நார்த்தாமலைதஞ்சை பெரிய கோயிலில் இருந்து 69கி.மீ தொலைவில் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் அமைந்திருக்கும்நார்த்தாமலையில் இருந்து தான் #தஞ்சைபெரியகோவில் கட்டுமானத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்ட சிற்பங்கள் அனைத்தும் இப்பகுதியில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட கற்களே ஆகும்.மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தின் ஏனைய அம்மன் கோவில்களுக்கு கற்கள் இங்கிருந்தே எடுக்கப்பட்டவை.

 தமிழகத்தின் மிகப்பழமையான குடைவரைக்கோயில்பெரிய கோயிலுக்கான கற்கள் வெட்டியெடுக்கப்பட்ட மலை என்பதை தாண்டி தமிழகத்தில் இருக்கும் மிகவும் பழமையான குடைவரைக்கோயில்கள் நார்த்தமலையில் இருக்கின்றன மேல மலை மீது விஜயாலய சோழீஸ்வரம் என்ற கோவில் உள்ளது. இக்கோவிலின் வெளிப்புறச் சுவரில் காணப்படும் கல்வெட்டுமூலம் இக்கோவில் (கி.பி. 855-896)  இக்காலத்தில், நார்த்தாமலைப் பகுதியை ஆண்டுவந்த விடேல்விடுகு, முத்தரையன் மகன் சாத்தம்பழியிலி இக்கோயிலை குடைவித்தான்மழையினால் இது இடிந்துவிடவே, மல்லன் விடுமன் என்பவர் இதை விஜயாலய சோழன் காலத்தில் புதுப்பித்தார் என்றும் அறியப் படுகிறது. விஜயாலயன் காலம் முதல் இக்கோவில் விஜயாலய சோழீஸ்வரம் என்று வழங்கப்பட்டு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

#விஜயாலயசோழீஸ்வரம் கோயிலை முத்தரையர் தலைவர் #இளங்கோஅடிஅரையன் கட்டியுள்ளார். சோழர் காலத்தில் கட்டப்பட்ட முற்பட்ட சிவன் கோயில்களில் இதுவும் ஒன்று. பிரதான கோயிலின் வாயிலில் கலையழகு மிளிரும் இரு துவாரபாலகர் சிற்பங்கள் உள்ளன. கோபுரத்தில் நடன மங்கைகள் உள்பட பல அற்புதச் சிலைகள் உள்ளன. . இது தமிழகக் கோவில் அமைப்பிலே தனித்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பிரதானக் கோயிலின் கருவறை வட்ட வடிவில் உள்ளது தனிச்சிறப்பு. உள்ளே பெரிய சிவலிங்கம் உள்ளது. பிரதான கோயிலின் அர்த்த மண்டபத்தில் சாந்து பூசப்பட்டு வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.உட்பிரகாரச் சுவர்களில் பண்டைய ஓவியங்கள் அழிந்த நிலையில் காணப்படுகின்றன. இந்த ஓவியங்கள் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று கருதப்படுகிறது.
கருவறை மீது அழகிய விமானம் எழுப்பப்பட்டுள்ளது. இது அதிட்டானம் முதல் உச்சிவரை கல்லாலானது. இது கட்டுமான கற்கோவிலாகும். இது காஞ்சி கைலாசநாதர் கோவில் விமானத்தின் தோற்றத்தைக் கொண்டுள்ளது.சன்னதிகள்விஜயாலய சோழீஸ்வரர் கோயிலை சுற்றி உமா, தக்ஷிணாமூர்த்தி, சப்தகன்னிமார் என எட்டு கடவுளர்களுக்கு சிறிய சந்நிதிகள் கட்டப்பட்டிருக்கின்றன. அதில் ஆறு சன்னதிகள் மட்டுமே இன்று உள்ளன.300 ஆண்டுகள் கழித்துஇந்த கோயிலை கட்டியதற்கு பிறகான 300 ஆண்டுகளில்தான் தஞ்சை பெரிய கோயில், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில், கங்கை கொண்ட சோழபுரம் என சோழர்கள் சிற்பக்கலையில் உச்சம் தொட்டிருக்கின்றனர்.













Muthuraja Network -முத்துராஜா நெட்வொர்க்




No comments:

Post a Comment