வலையன் குட்டை ரதங்கள்
சென்னையிலிருந்து போரூர் வழியாக மாமல்லபுரம் போகும் போதும்.., செங்கல்பட்டிலிருந்து மகாபலிபுரம் போகும்போதும், மாமல்லபுரம் பக்கிம்காம் கால்வாய்க்குக் கிழக்குப் பக்கத்தில் இந்த வலையன் குட்டை இரதங்கள் இருக்கின்றது.
நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? இது முத்தரையர்களின் கலைச்சின்னம் என்பது.!
#வரலாறு:-
இந்த வலையன் குட்டை ரதங்களை கட்டியவன் சோழன் சிம்மவிஷ்ணு என்கிற கோச்செங்கணன் எனும் ஓர் முத்தரைய மன்னன்.
சுருக்கமாக சொல்லப்போனால் இந்த கோச்செங்கணன் தனஞ்சய முத்தரையனின் மூத்த சகோதரன் ஆவான்.
கோச்செங்கணனின் ஆட்சிகாலம் கிபி.530-573ஆகும்.
இந்த கோச்செங்கணன் சோழநாடெங்கும் திருவானைக்கா உட்பட சிவன் மற்றும் விஷ்ணுவுக்கு 70 மாடக்கோவில்களை கட்டியுள்ளான்
மாமல்லபுரத்திற்கு அருகில் பல்வர்களுக்கு முன்பாகவே கற்க்கோயில்களை எழுப்பும் முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளான்.
இவனால் அங்கு கட்டப்பட்ட இரதங்கள் "வளவன் கட்டிய (குட்டிய)ரதங்கள் என்று அழைக்கப்பட்டு காலப்போகில் வலையன் குட்டை இரதங்கள் என்று அழைக்கப்படுகிறது.
நம் உறவுகள் இனி மாமல்லபுரம் சென்றால்,
இந்த வலையன் குட்டை ரதங்களான முத்தரையர்களின் கலைச்சின்னத்தையும் கண்டு ரசித்துவிட்டு வாருங்கள்.
-தொகுப்பு-
ராஜமுத்தரையன்
வீரமுத்தரையர் சங்கம்
புதுக்கோட்டை
முத்துராஜா நெட்வொர்க் -muthuraja Network
No comments:
Post a Comment