Breaking

Saturday, 27 July 2019

தலையாரி முத்தரையர் வரலாறு

தலையாரி முத்தரையர் வரலாறு



தலையாரி வரலாறு:
(முத்தரையர் சமுகமும் தலையாரி பட்டமும்)

தலையாரி என்பது முத்தரையர் சமுகத்தில் ஒரு பட்டப்பெயர் பிரிவாக மக்கள் வாழ்ந்துவருகின்றனர்...
முத்தரையர் சமுகத்தில் ஏராலமான பட்டப்பெயர்கள் உண்டு,அவற்றுள் ஒன்றுதான் தலையாரி பட்டம்....

தலை+யாரி(ஆரி)=தலையா(ஆ)ரி

தலை=தலை என்பது முத்தரையர் மக்கள் வாழும் ஊரில் உள்ள தலைவன் எனவும்
ஆரி=ஆசிரியம் என கொள்ளவேண்டும். ஆசிரியம் என்பது [காவல்] என பொருளை கொண்டது...
             அதாவது முத்தரையர் கிராம நாட்டு மக்களுக்குள்,மக்களையும்,கிராமத்தையும்,
வயல்,கோவில் போன்றவற்றை தலைமையாக இருந்து காவல்காப்பவரே தலையாரியாவார்கள்.....

குறிப்பாக,
             புதுக்கோட்டை மாவட்டம்,  பொன்னமராவதி வட்டம் பிடாரம்பட்டி என்ற ஊரில் முத்தரையர் மக்களே நிறைந்து வாழுகின்றனர்.இங்கு வலையர்,அம்பலம்,சேர்வை என்ற பட்டமும் "தலையாரி"என்ற பட்டமும் கொண்டுள்ளனர்...தலையாரி பட்டமானது ஊர் நாட்டாண்மை அதாவது ஊர் அம்பத்தால் பட்டம் கட்டப்பட்டு...அதன் மூலம் தலையாரி பட்டக்காரர்கள் ஊர்,கோவில்,வயல் போன்றவற்றை தலைமையாக காவல்புரிவார்...
அவற்றின்  தொடர்ச்சியாக தலையாரி பட்டக்காரர்கள் பரம்பரை பரம்பரையாக தலையாரி பட்டத்துடன் காவல்புரிவார்கள்...
ஊர் முக்கிய பட்டகாரர்களில் அம்பலம்,சேர்வை,பூசாரி,தலையாரி என மரியாதை பெருவார்கள்...ஒரு முத்தரையர் நாட்டு பிரிவில் தலையாரி பட்டக்காரர்களும் முக்கியமானவர்களாக உள்ளார்கள்...

தெ.கு.குலங்களும் நூலில் தலையாரி என்போர் முதன்மையான கிராம காவலர் என்றும்,முத்திராசர்(முத்தரையர்) கிராம காவல் என்றும் தெளிவாக கூறுகிறது....
மேலும் தலையாரி பட்டம் அரசனால் நியமிக்கப்படுபவர்கள்,அவர்களின் பரம்பரை பரம்பரையாக காவல்புரிபவர்கள் என ந.சி.கந்தையா குறிப்பிட்டுள்ளார்....

இதன் மூலம் தலையாரி பட்டம்  முத்தரையர்களுக்கு உரியது என்பது தெளிவுபடுகிறது.மேலும்
தலையாரி என்ற பட்டம் கொண்ட முத்தரையர்கள் ஏரலமாக பரவி வாழ்கின்றனர்.ஜாதி ரிதியாக தலையாரி பட்டம் முத்தரையர்களே கொண்டுள்ளர்.
மேலும் தமிழக அரசு வெளியிட்ட முத்தரையர் ஜாதியின் உட்பிரிவில் தலையாரியும் ஒன்று என்பது குறிப்பிடதக்கது......

தற்போதைய காலத்தில் கணக்குபிள்ளை,பத்தர அலுவலகம் கிராம சபை போன்ற இடங்கள் தலையாரி என்ற பெயரையும் பயன்படுத்துகின்றனர்....


  • வரலாற்று தொகுப்பு:
  •               As.கலையரசன் அம்பலகாரர்
  •                பொன்னமராவதி

  • Fb-முத்தரையர் கலை அம்பலகாரர்

Muthuraja Network -முத்துராஜா நெட்வொர்க்

No comments:

Post a Comment