Breaking

Monday, 19 August 2019

தமிழக வரலாற்றில் தனிதோர் இடத்தை கொண்டவர்கள் முத்தரையர்கள்

தமிழக வரலாற்றில் தனிதோர் இடத்தை கொண்டவர்கள் முத்தரையர்கள்


முத்தரையர்
                     தமிழக வரலாற்றில் தனிதோர் இடத்தை கொண்டவர்கள் முத்தரையர்கள்...    பேரரசருள் சேரர்,சோழர்,பாண்டியர்,
பல்லவர், என்ற வரிசையில்
'முத்தரையர்'களும் அடங்குவர்....
                கி.பி ஆறாம் நூற்றாண்டு தொடங்கி கி.பி ஒன்பதாம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்தவர்கள்...ஆட்சி காலத்தில் பல்லவர்களுக்கு நண்பராக விளங்கினர்.
       முத்தரையர் பேரரசின் தலைமையிடமாக தஞ்சை பகுதியான "நேமம்,வல்லம்" போன்ற பகுதியினை மையமாக கொண்டு
இன்றைய மாவட்டங்களான திருச்சி,
புதுக்கோட்டை,தஞ்சை,கரூர்,பெரம்பலூர்,
தர்மபுரி,நாகப்பட்டினம்,போன்ற பெரும் பகுதிகளை 'முத்தரையர் நாடு' என்ற பெயரோடு ஆட்சி நடத்தினர்.
முத்தரையர் என்பதற்க்கு பொருளாக
முத்+அரசர்
முத்து+அரையர்
மூத்த அரையர்
முத்+தரையர்
மூன்று+அரையர்
மூவரையர்
போன்ற பல விதமாக கருத்துக்களை வரலாற்று ஆய்வளர்கள் கூறுகின்றனர்....
                முத்தரையர்கள் வலையர் குடியினர்  சூரிய குலம்,சத்திரியர்கள் ஆவார்கள்.
அதற்க்கு எடுத்துக்காட்டாக கல்வெட்டுகளும்,
செப்பேடுகளும் ஏராலமாக கூறுகிறது.
முத்தரையர்களை பற்றியும் அவர்களின் செழிப்பான ஆட்சியை பற்றியும் இலக்கியம்,கல்வெட்டு,செப்புபட்டையம் என பலவாறாக புகழ் பாடுகிறது...
     
             முத்தரையர்கள் தமிழ் கலைகளை வளர்த்தவர்கள், குறிப்பாக கோவில்,
குடைவரை,இசை, குடகூத்து,ஏரி,மடை,
கிணறு,காட்டாறு,என பலவகை கலைகளை முத்தரையர்களின் தனி கலைபணியாற்றியுள்ளனர்.
அதக்கு சான்றாக இன்றளவும் முத்தரையர் கல்வெட்டுகள்,செப்பேடுகள் மற்றும் முத்தரையர் மன்னர் மரபு பெயர்ளும் கூறுகிறது....
              முத்தரையர் மன்னர்கள் பரம்பரை பரம்பரையாக ஆட்சி நடத்தினர்...
ஐந்தாம் நூற்றாண்டு இறுதி காலத்தில் ஆட்சியை குணமுடிதன்,வாணாகோ முத்தரைசர்,பொன்மாந்தர் முத்தரைசர் என்னும் முத்தரையரில் தொடங்கி குவாவன் மாறன்,விடேல்விடுகு,பெரும்பிடுகு,பரமேஸ்வர்,சுவரன் மாறன்,சாத்தன் பூதி,சாத்தன் பழியிலி,பூதி களரி,போன்ற பெயர்களில் முத்தரையர் மன்னர்கள் பரம்பரை பரம்பரையாக ஆட்சி நடத்தினர்...
                    பத்தாம் நூற்றாண்டு காலத்தில் பிற்கால சோழர் ஆட்சி தலைபட தொடங்கியது...ஆனால் முத்தரையர்களை சோழர் வென்றசாக சான்று இல்லை.முத்தரையர்களும்  வீழ்ச்சி அடைந்ததாக சான்றுகள் இல்லை...இதை அடிப்படையாக கொண்டு பார்த்தால் முத்தரையர்களின் மூதாதயராக சோழ வம்சவழியாக பல செப்பேடுகள் கூறுகிதது..அதைவைத்து பார்த்தால் முத்தரையர் என்ற பெயரை மாற்றி தம்முன்னோர் பெயரான சோழ பட்டத்தை கொண்டு சோழராக மீண்டும் ஆட்சியமைத்திருக்கவேண்டும்...
                 இதற்க்கு எடுத்துக்காட்டாக தஞ்சை மாவட்டத்தில் சில கல்வெட்டுகளில் விஜயாலய முத்தரையர்,பாராந்தக முத்தரையர்  போன்ற கல்வெட்டு செய்திகளும் புதுக்கோட்டை மாவட்டத்தில் மும்முடி சோழ முத்தரையர் போன்ற கல்வெட்டுகளில் முத்தரையர் சோழர்களின் இணக்கத்தை கூறிக்கிறது...
                
              முத்தரையர் சோழ ஆட்சிக்கு பிறகு அரியனைக்கு நாயக்கர்களின் ஆட்சி நடைபெற்ற தொடங்கியது.
அவற்றில் பாளையங்களாக பிரிக்கப்பட்டது.
              பாளையங்களில் சில இடங்களில் ஜமீன்களாகவும்,காவல் அதிகாரிகளாவும் முத்துராசா,முத்துராஜ நாயக்கர்,முத்திரிய நாயுடு போன்ற பெயர்களை கொண்டு  வாழ்ந்து வந்தனர்...
              பிறகு கிராமங்கள் நாட்டு மிராஸ், அம்பலகாரர்,அம்பலம்,சேர்வை,ஊராளி,
வேடுவர் கவுண்டர்,மூப்பனார் போன்ற பட்டங்களில் கிராம நாட்டுகளில் ஆட்சி நடித்தனர்...
               பல ஆயிரம் ஆண்டுகளாக ஆட்சியாளர்களாக விளங்கியவர்கள் முத்தரையர்கள் என்பதற்க்கு எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை என்பதே உண்மை.....
சுருக்கமாக இப்பதிவில் கூறியுள்ளோம்...அடுத்தடுத்த பதிவுகளில் ஒவ்வொன்றாக விளக்கம் அளிப்போம்....
நன்றி....
வரலாற்று தொகுப்பு;
ஏ.எஸ்.கலையரசன் அம்பலகாரர்
முத்தரையர் வரலாற்று ஆய்வுகூடம்

முத்துராஜா நெட்வொர்க் -Muthuraja Network

No comments:

Post a Comment