தமிழ் இலக்கியத்தில் முத்தரையர்கள்
இலக்கியம்:
தமிழ் பிறந்த நாள்முதலே தமிழுக்கென இலக்கியம்,பண்பாடு,
கலாச்சாரம்,கலை,வழிபாடு,உணவு,ஆடை என அனைத்துவகையிலும் தமக்கென ஒரு அடையாளத்தை உருவாகியதுதான் நம் தமிழ் மொழி...
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொடர்ச்சி கொண்ட உலகின் சிறந்தவை இலக்கியங்கள். வாழ்வின் பல்வேறு கூறுகளை தமிழ் இலக்கியங்கள் கூறுகிறது. தமிழ் இலக்கியத்தில் வெண்பா, குறள், புதுக்கவிதை, கட்டுரை, பழமொழி, தொண்ணூற்றாறு வகை சிற்றிலக்கியங்கள் என பல வடிவங்கள் உள்ளன. தமிழில் வாய்மொழி இலக்கியங்களும் முக்கிய இடம் வகிக்கின்றன.
தமிழ் இலக்கியம்
1) சங்க இலக்கியம்
2)பதினென்மேற்கணக்கு
3)பதிணென்கீழ்கணக்கு
நூல்கள்கள் மூலமாக இலக்கனத்தை அறியமுடிகிறது....
பதிணென் கீழ்க்கணக்கு நூல்கள்;
பதிணெட்டு நூல்களை கொண்டது.அதில் முதலாவது நூல் நாலடியார் இப்பதிவின் பாடல் நூலாகும்.
நாலடியார்;
நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல். இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது. இது சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பாகக் கருதப்படுகிறது. இதனால் இது நாலடி நானூறு எனவும் பெயர் பெற்றது.
நீதிநூல்;
தமிழ் நீதி நூலான திருக்குறளுக்கு இணையாகப் பேசப்படும் சிறப்பைப் பெற்றுள்ளது நீதிகளைக் கூறுவதில் திருக்குறளும் நாலடியாரும் ஏறக்குறைய ஒரே முறையைப் பின்பற்றுகின்றன. திருக்குறளைப் போன்றே நாலடியாரும்,
1)அறத்துப்பால்,
2)பொருட்பால்,
3)காமத்துப்பால்
எனும் முப்பிரிவுகளை உடையதாக விளங்குகிறது.
நாலடியார் கூறும் மன்னர்;
நாலடியார் இயற்றிய காலத்தில் தமிழ் வேந்தராக போற்றப்படும் சேர,சோழ,பாண்டியரை காட்டிலும் முத்தரையர்கள் செல்வந்தராக விளங்கியுள்ளனர் என்பதினை நாலடியார் தெளிவாக கூறுகிறது...
அவை பொருட்பால்:
தாளாண்மை - 200 பாடல்
மானம் - 296 பாடல்
முத்தரையர் மன்னர் பற்றிய பாடல் பொருட்பாவில் தாளாண்மை பற்றியும்,மானம் பற்றியும் குறிப்பிடுகிறது...
தாளாண்மை பாடல்;
'பெருமுத் தரையர் பெரிதுவந் தீயுங்
கருனைச்சோ றர்வர் கயவர் -கருனையைப்
பேரு மறியார் நனிவிரும்பு தாளாண்மை நீரு மமிழ் தாகிவிடும்.'
~200 நாலடியார்
விளக்கம்;
பெருமுத்தரையர் பெரிதும் மகிழ்ந்து அன்னதானம் செய்வர் அவர் வழங்கும் கறிகளோடு கூடிய சோற்றை முயற்சி செய்யாமல் கயவர் வாங்கி உண்பர். கறிகளை பேர்தானும் அறியாத முயற்றியாளர்கள் அவர்கள் முயற்றிக்கு கிடைத்த பெற்ற நீர் உணவும் அவர்களின் முயற்க்கு கிடைத்த அமிழ்தம் பெற்ற இன்பம் அடைவதாக கூறுகிறது...
மானம் பாடல்;
மல்லன் மா ஞாலத்து வாழ்பவரு ளெல்லாம்
செல்வ ரெனினுங் கொடாதவர் -நல்கூர்ந்தார்
நல்கூர்ந்தக் கண்ணும், பெருமுத் தரையரே,
செல்வரை சென்றிர வாதார்.
~ 295 நாலடியார்
விளக்கம்;
வளம் மிக்க பெரிய உலகில் வாழ்பவோர் மிகுந்து செல்வந்தராக இந்தாலும்,வருமையுள்வர்களுக்கு உதவாத கொடியவராவர்.
சிலர் வறுமையுற்ற போதிலும் பொருளுடையவற்களிடம் சென்று ஒன்றும் இரவாதவர் பெருமுத்தரையர்க்கு இணை செல்வந்தரேயாவர்...
கருத்து;
பெரு முத்தரையர் மகிழ்ச்சியோடு கறிகளுன் சோறு வழங்கி அதை முயற்சியற்றவர்கள் பெருவதை காட்டிலும்.தாமாக முயற்ச்சித்து உண்ணும் நீரும் உணவும் அமிர்தமாக உண்கின்றனர் என்று 200வது பாடலும்,
வறுமையாக இருந்தாலும் பிறரிடம் கேட்காமல் வாழ்ந்தால் அவர் பெருமுத்தரையர் போல செல்வந்தர் என 296வது பாடலும் தாளாண்மை மற்றும் மானத்தையும் பற்றி தெளிவாக எடுத்துறைக்கிறது.....
இதில் பெருமுத்தரையர் பெரும் செல்வந்தராக குறிக்கப்படுகிறார்...
முத்தரையர்கள் நாலடியார் இயற்றிய காலகட்டத்தில்ல சிறந்து விளங்கியுள்ளார்கள்...அதே போல முத்தரையர்கள் ஆறாம் நூற்றாண்டு தொடங்கி பத்தாம் நூற்றாண்டு வரை பேரரசராகவும் வாழ்ந்தவர்கள்.தமிழ் கல்வெட்டுகள் போற்றும் புகழானவர்கள் முத்தரையர்கள்.
கலைபணியில்
கோவில்,குடைவரை,கோட்டை,கயல்வேல் கொடி,காசு,ஏரி,மடை,குளம்,காட்டாறு,இசை,
போர், கோவில்களுக்கு தானம் போன்ற ஏராலமான தமிழ் தொண்டுகளை செய்து தமிழ் வரலாற்றில் மேலோங்கி திகழ்ந்தவர்கள் முத்தரையர்கள்....
நன்றி
வரலாற்று தொகுப்பு:
ஏ.எஸ்.கலையரசன் அம்பலகாரர்
முத்தரையர் வரலாறு ஆய்வுகூடம்
Muthuraja Network _முத்துராஜா நெட்வொர்க்
No comments:
Post a Comment