Breaking

الأربعاء، 16 أكتوبر 2019

வாணகோ முத்தரையர் வரலாறு- Mutharaiyar History

வாணகோ முத்தரையர் வரலாறு
நாடாண்ட முத்தரைய மன்னர்கள்:
___________________________________

2.வாணகோ முத்தரையர்

வாணகோ முத்தரையரின் முன்னோர் தமிழகத்தின் தொண்டை மண்டலப் பகுதிகளிலும், தமிழகத்தின் வடபகுதியும், மைசூர் மாநிலத்தின் தென் எல்லையுமான பகுதிகளிலும் ஆட்சி செய்துள்ளனர்.

இவர்களைப் பற்றிய போதிய கல்வெட்டு ஆதாரங்கள் தமிழகத்தில் கிடைக்கவில்லை. எனினும் வடஆற்காடு மாவட்டம், திருவண்ணாமலையை அடுத்த தண்ட்ராம்பட்டிலுள்ள இரண்டு கல்வெட்டுக்கள் மட்டுமே நேரிடையாக கிடைத்துள்ளன. இரண்டும் நடுகற்களாகும். வட்டெழுத்தில், முதலாம் நரசிம்மனின் 7ம் ஆட்சியாண்டில் (கி.பி.667)ல் வெட்டப் பெற்றவையாகும்.

"வாணகோ முத்தரைசர்
நாடு பாவிய் மேற்
கோவலூர் மேல் வந்து
தஞ் சிற்றப்படிகளை
எறிந்த ஞான்று"

என்று காணப்படுகிறது. இந்த கல்வெட்டும், மற்றொரு கல்வெட்டும் முத்தரைய மன்னர்களின் பழைய இருப்பிடத்தையும், சிறுகச் சிறுக நாட்டை விரிவுபடுத்தியதையும் அறிய உதவுகிறது. இவ்வாறு நாட்டை விரிவுபடுத்தும் போது, இரண்டு போர் வீரர்கள் மரணமடைந்துள்ளனர். இருவேறு சமயம் போரில் இறந்துள்ளனர். அவர்களுக்கு நன்றி மறவாத வாணகோ முத்தரையர் நடுகல் எரித்து, நிகழ்ச்சியைப் பொறித்துச் சிறப்பித்துள்ளார்.

இவ்வாறு வாணகோ முத்தரைசர் போர் தொடுத்தும், தனது சிற்றப்பாவான, பொன்மாந்தனார் என்ற முத்தரைசர் மீதுதான் நடத்தியுள்ளார். இவ்வாறு தமிழகத்தின் வட எல்லையில் ஆட்சொபுரிந்து வாணகோ முத்தரைசர் பக்கத்து நாட்டை ஆண்ட மாந்த பருமர் மீது படையெடுத்தது நன்கு தெரிகிறது.

இந்த மாந்த பருமர் ஆட்சி பற்றி, செங்கம் பகுதி கடலடி, மேல்புஞ்சை மற்றும் தருமபுரி கொளத்தூரில் கிடைத்துள்ள நடுகற்கள் மூலம் இவன் முத்தரையனே என்பது புலனாகிறது. பொன் என்ற அடைமொழியை முத்தரையர்களே கொண்டுள்ளனர். தருமபுரி மாவட்டம் பாலவாடியில் கிடைத்துள்ள கல்வெட்டில் "பெரும்பாண முத்தரைசர்" என்பவர் பற்றி தெரிகிறது. இந்த பெரும்பாண முத்தரைசர் கங்க மன்னன் ஸ்ரீ புருஷனின் சமகாலத்தவன்.

இந்த பொன் மாந்தனார் என்ற மன்னர் தான் முத்தரையர்களின் மூத்த அரசன். இவரின் பெயரோடு இரண்டு கல்வெட்டுக்கள் உள்ளன.

முதல் கல்வெட்டு.👇

"கோவிசைய நரை சிங்க பருமற்கு
யாண்டேழாவது வாணகோ முத்தரைசரு
நாடு பாவிய் மேற் கோவலூர் மேல் வந்து
தஞ் சிற்றப்படிகளை எறிந்த ஞான்று
பட்டான் சேவர் பரி அட்டுங் கொள்ளி துரு
மாவனார் மகன் மாற்கடலன்" என்கிறது.

இரண்டாவது கல்வெட்டு.👇

"கோவிசைய நரைசிங்க பருற்கு
யாண்டேழாவது மேற் கோவலூர் மேல்
வாணகோ முத்தரைசர் நாடு பாவிய் தஞ்
சிற்றப்படிகள் பொன் மாந்தனார் மேற் 
வந்த ஞான்று பொன் மாந்தனார் காய்ப்
பட்டான் கடுவந்தையர் மகன் விற்சிதை
கல் வாணகோக் கடமர்" என்கிறது.

பொன் மாந்தனார் முதலாம் நரசிம்மவர்மன் கி.பி.630-669 காலத்தில் மேற்கோவலூர்ப் பகுதியில் ஆட்சி செய்துள்ளார். அப்போது தான் இவரது அண்ணன் மகன் வாணகோ முத்தரைசர் என்பதும் நன்கு புலனாகிறது. இந்த பொன் மாந்தனார், மாந்த பருமர் என்றே கல்வெட்டுக்களில் காணப்படுகிறார். இந்த பொன் மாந்தனார் பல்லவர்க்கு அடங்கியவராக ஆட்சி செய்து காலப்போக்கில் தனித்த சுய ஆட்சி செய்தும் வந்துள்ளார்.

"மாந்த பருமற்குப் பதினொன்றாவது
கொங்கணி அரைசரு படை ஒடு சிரிகங்
கரைசரு சங்க மங்கலத் தெரிந்த ஞான்று
சிரி கங்கரைசரு சேவகர் ஒரு கரையர் எறிந்து பட்டகல்" 

என்று முதலாது கல்வெட்டும்.

"மாந்த பருமற்கு இருபத்திரண்டாவது
விரி ஊர் நாட்டு கரு இரம்புரை சாத்தான்
னோடு கற்றொரு கொள்ளுப் பட்டாருகல்"

என்று காணப்படுகிறது.
இந்த கல்வெட்டுக்களின் சான்றின் மாந்தப் பருமரின் ஆட்சியின் கீழ் கொங்கணி அரசரும், கங்க அரசான சிரி கங்கரைசரும் ஆண்டுள்ளனர் என்பது புலனாகிறது. மேலும் இம்மன்னன் இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளான் என்பதையும் உணரலாம். இவன் முதலாம் நரசிம்மவர்மனுக்கு அடங்கிய சிற்றசாக இருந்து பின்னர் படிப்படியாக விடுதலை பெற்று தனித்த ஆட்சி செய்திருக்கிறான். இவன் அவ்வாறு விடுதலை பெற தனக்கு கீழ் ஆட்சி செய்த கொங்கணி அரசரும், கங்க மன்னரும் பொர்க்கலத்தில் உற்ற துணையாக இருந்துள்ளனர் என்பதையும் அறியலாம். ஏனென்றால், முத்தரையர், கொங்கணி அரசர், கங்கர் ஆகிய மரபினர் வேளிர் குலத்தவர் என்பதால் இருக்கலாம்.

இந்த மாந்த பருமர் மேற்கோவலூரைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்துள்ளனர். இதனால் தான் இவனது அண்ணன் மகன் வாணகோ முத்தரைசர் கோவலூரைத் தாக்கியிருக்கின்றான்.இவனது ஆட்சி எல்லை தருமபுரி மாவட்டம் கொளத்தூர் வரையில் பரவி இருந்துள்ளது. தன்னைத் தாக்கிய வாணகோ முத்தரைசரை வென்று அவரது ஆட்சிப் பரப்பையும் பிடித்துக் கொண்டுள்ளான்.

இம்மன்னன் காலத்திலேயே பெரும்பாண முத்தரைசர் என்ற முத்தரையன் வாணகோ முத்தரையருக்கு அடுத்து ஆட்சி செய்திருக்க வேண்டும். "பெரும்" என்ற அடைமொழியை முத்தரையர் பெற்றிருந்தனர். இதனை நாலடியார் பாடல்கள் நமக்கு சான்றாக தெரிவிக்கின்றன.

நாலடியாரில் "பெரும்" என்ற அடைமொழியுடன் கூடிய பாடல்.👇

"பெரு முத்தரையர் பெருதுவந் தீயும்
கருணைச் சோறாவர் கயவர் - கருணையைப்
பேரு மறியார் நனி விரும்பு தாளாண்மை
நீரு மமிழ் தாகி விடும்" 200வது பாடல்.

என்று பெரு என்ற அடைமொழியைக் காட்டுகிறது. பெரும்பாண முத்தரையரை குறிக்கும் கல்வெட்டு இன்று வரை ஒன்று தான் கிடைத்துள்ளது. அதனை காண்போம்.

"ஸ்ரீ புரிச பருமற்(குயா)ண்டு பத்தாவது பெரும்
பாண முத்தரைசர் கங்க நாடாளப் போகற்றூர்த் 
தொறு அஞ்ங் கள்வர் கொண்ட ஞான்று தொறு 
மீட்டுப்பட்டார் நொச்சி சாத்தனார்"

என்கிறது.
இக்கல்வெட்டின்படி பெரும்பாண முத்தரைசர் ஸ்ரீ புருஷவர்மனுக்கு அடங்கிய சிற்றரசனாக ஆண்டது தெரிகிறது. கங்க நாட்டை ஆண்டதாகவும் தெரிகிறது. இருவரும் கங்கநாட்டை ஆண்டதாகவும் கூறுகிறது. இப்பெரும்பாண முத்தரைசர் ஏதாவது ஒரு பகுதில் ஆட்சி செய்திருக்கலாம். இவனது ஆட்சிக்காலம் ஸ்ரீ புருஷவர்மனின் 10வது ஆண்டு குறிக்கப்படுவதால் கி.பி.8ம் நூற்றாண்டின் நடுப்பகுதியாகலாம் எனக் கருதப்படுகிறது.

இம்மன்னனுக்குப் பின் வந்தோர் தஞ்சைப் பகுதியில் காணப்படுகின்றனர்..

பேஸ்புக் பதிவு: சிவமாரி...

MUTHURAJA NETWORK -முத்துராஜா நெட்வொர்க்

ليست هناك تعليقات:

إرسال تعليق