Breaking

‏إظهار الرسائل ذات التسميات Mutharaiyar History. إظهار كافة الرسائل
‏إظهار الرسائل ذات التسميات Mutharaiyar History. إظهار كافة الرسائل

السبت، 29 يناير 2022

يناير 29, 2022

சோழ தேசத்துப் பூர்விக மன்னர்கள்

 சோழ தேசத்துப் பூர்விக மன்னர்கள்


வரலாறை மறைப்பது என்பது பெற்ற பிள்ளையை தாயிடம் இருந்து மறைப்பதற்க்கு சமமானது.

சோழ தேசத்துப் பூர்விக மன்னர்களின் பெயர் அட்டவணை என்று 2011ஆம் ஆண்டு திரு.மணிகண்டன் என்பவரால் எழுதப்பட்டு தமிழ் இலக்கியதுறை சார்பில் இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில்
    1)கி.பி ஆறாம் நூற்றாண்டு முதல் எட்டாம் நூற்றாண்டு காலத்தில் முத்தரையர் மன்னர்களின் நேரடி கட்டுப்பாடிலே இருந்தது சோழ மண்டலம்.அப்படி இருக்க இந்த நூலில் அது பற்றி  ஒரு குறிப்புகூட இல்லை.
    2)ஏழாம் நூற்றாண்டில் யார் ஆண்டார்கள் என்று குறிப்பிடாமல் அப்பர்,சம்பந்தர் உள்ளீட்டோரை பற்றி கூறி முத்தரையர்களை மறைத்துள்ளார் நூல் ஆசிரியர்.
    3)எட்டாம் நூற்றாண்டில் ஆழ்வார்களை பற்றி எழுதி முத்தரையர்களை மறைத்துள்ளார்.
   4)கி.பி ஆறு,ஏழு,எட்டாம் நூற்றாண்டுகளில் இந்த அட்டவணையில் முத்தரையர்கள் என்ற மன்னர்களே  இல்லாத போது எப்படி ஒன்பதாம் நூற்றாண்டில் விஜயாலயசோழன் முத்தரையர்களிடம் இருந்து சோழ தேசத்தை மீட்டார்??????
   5)தமிழ் குடி மன்னர் முத்தரையர் வரலாற்றை மறைத்த உங்களுக்கு வந்தேரி மன்னர்களின் வரலாற்றை கூறுவதில் எவ்வளவு ஆர்வம்.நாயக்க மன்னர்கள்,இஸ்லாம் மன்னர்கள்,மராத்திய மன்னர்கள்,ஆங்கிலேயர்கள் என அனைவரையும் சரியாக குறிப்பிட்டுள்ளார்.இந்த புத்தக ஆசிரியர்.

முத்தரையர் வரலாறுகள் திட்டமிட்டே மறைக்கப்பட்டுள்ளது.

மீள்வோம்! முத்தரையர் வரலாற்றை உலகறிய செய்வோம்.

இவண்
  ஏ.எஸ்.கலையரசன் அம்பலகாரர் 
  முத்தரையர் வரலாறு ஆய்வுக்கூடம்


يناير 29, 2022

முத்தரையர் சமூக குடிப்பெயர்கள்

  முத்தரையர் சமூக குடிப்பெயர்கள்


முத்தரையர் சமுக குடிப்பெயர்கள் பதிவு-1

அடைக்கலம்,அடைக்கப்பன்,அடைக்கன்

                  தமிழ் பெயர்களில் முக்கியமான ஒரு பெயராக இந்த அடைக்கன், அடைக்கப்பன், அடைக்கலம் என்ற பெயர்கள் உள்ளது. இந்த பெயர் எதனால் இவ்வளவு சிறப்பு வாய்ந்தது என நாம் பார்கவேண்டும்.

அதிலும் இந்த பெயரை 100க்கு 99% பெயர் கொண்ட  சமுகம் முத்தரையர் சமுகமே.


பொருள்:

    அடைக்கலம்,அடைக்கப்பன்,

அடைக்கன் என்ற பெயர்களில் அடை என்ற சொல் அடிப்படையாக கொண்டுள்ளது.அடை என்பது சேர்தல்,தஞ்சமைடைதல் என குறிக்கிறது.மேலும் அடை என்ற ஒரு வகை உணவும் உள்ளது.பெயர்களில் அடை வருவது பெரும்பாலும் அடைக்கலம் என்ற பெயரை மையமாக கொண்டே அடைக்கன்,அடைக்கப்பன் என்ற பெயர்கள் உள்ளது.


அடைகலம் என்பது ஆபத்தான நிலையில் இருக்கும் நபர்,யாரிடம் சென்றால் பாதுகாப்பாக இருப்போம் என்று அவர்களை சேர்வது,பாதிக்கப்பட்டவர்களை பாதுகாத்து ஆதரவு கொடுப்பதே அடைக்கலம்.


சிவன் அடைக்கலம்:

         உலகாலும் எம்பெருமான் சிவபெருமானை போற்றும் விதகமாக மாணிக்கவாசகர் திருவாசகத்தில் அடைக்கலப்பத்து என்று பத்து பாடல்களாக பாடியுள்ளார். பரம்பொருளை நாடி வருவோரை தம்மில் அடைக்கலம் கொடுத்து காப்பவராக கூறியுள்ளார். 

ஒரு பாடல்: 

(எ.கா)

    பெரும் பெருமான் என் பிறவியை

         வேர் அறுத்துப் பெரும் பிச்சித்

    தரும் பெருமான் சதுரப் பெருமான்

         என் மனத்தின் உள்ளே

     வரும் பெருமான் மலரோன்

        நெடுமால் அறியாமல் நின்ற 

    அரும் பெருமான் உடையாய் 

           அடியேன் உன் அடைக்கலமே.

                         நீ பிறவியைப் போக்குபவன்,

பக்திப் பித்தைப் பெருக்கு பவன்,

எதையும் சாதிப்பவன்,சித்தமிசை குடிகொள்பவன்,ஜுவபோதம் படைத்த அயனுக்கும் அரிக்கும் எட்டாதவன்,ஜீவர்களை உடையவன்,ஆதலால் நீமதாதேவன்,

உன்னிடம் அடைக்கலம் புகுகிறேன்.

இவ்வாறு அடைக்கலம் என்ற சொல் சிவபெருமான் பெயர்களில் ஒன்றாகவும் உள்ளது. திக்கிட்டவனுக்கு தெய்வமே துணை என்பதற்கேற்ப பரம்பொருளான சிவபெருமானை நாடி செல்வோரை எவ்வாறு அடைக்கலம் கொடுத்து காக்கின்றாறோ அதை போல முத்தரையர் சமூக மக்கள் தங்களை நம்பி வருபவர்களை அடைக்கலம் கொடுத்து காப்பவர்களே. ஆகையால், அடைக்கலம் என்ற பெயரை முத்தரையர் சமூகம் மிகுதியாக கொண்டுள்ளது.

மேலும் முத்தரையர் சமூக குல தெய்வ வழிபாட்டில் சுவாமி அடைக்கலம் காத்த அய்யனார் சாமி மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாகவும், முக்கிய வழிபாட்டு தெய்வமாகவும் கருதப்படுகிறது.


இதை மையமாக கொண்டே முத்தரையர் சமுகத்தில் அடைக்கலம்,அடைக்கன்,அடைக்கப்பன் என்ற பெயர் நிலைபெற்றுள்ளது.

இதே போல பெண்கள் பெயராக அடைக்கி,அடைக்கம்மாள் போன்ற பெயர்கள் உள்ளது.


குறிப்பாக: பொன்னமராவதி,தில்லைக்காடு,நத்தம்,

திருமயம் போன்ற பகுதிகள் சுவாமி அடைக்கலம் காத்த அயயனார் கோவில் அமைந்துள்ளது.

#அடைக்கன் #அடைக்கலம் #அடைக்கப்பன்

இங்ஙனம்

   ஏ.எஸ்.கலையரசன் அம்பலகாரர்

   முத்தரையர் வரலாறு ஆய்வுக்கூடம்

يناير 29, 2022

தேவேந்திர குல மக்களுக்கு ஊரை காணியாட்சியாக கொடுத்த முத்தரையர்கள்

தேவேந்திர குல மக்களுக்கு ஊரை காணியாட்சியாக கொடுத்த முத்தரையர்கள்



தேவேந்திர குல மக்களுக்கு ஊரை காணியாட்சியாக கொடுத்த முத்தரையர்கள்!

புதுக்கோட்டை மாவட்டம்,பொன்னமராவதி ஒன்றியம்,வலையப்பட்டி அருகே உள்ள மணப்பட்டி என்ற ஊரை காணியாட்சியாக கொடுத்த பட்டயம்.

கி.பி 18ம் நூற்றாண்டு காலத்தில் கானாட்டார்,கோனாட்டார் எல்லை சண்டையில் 22பேர் தலைப்பலி கொடுத்தனர்.அவ்வீரத்தையும்,தியாகத்தையும் போற்றி நல்லமெய்யான்,நாட்டாபிள்ளை உள்ளீட்டாருக்கு  "நாட்டான் முத்திரியன் வில்லூனி நத்தம் மணமங்கலம் நல்லூரை"
பிடார முத்திரியர்,சக்கர முத்திரியன்,
செம்ம முத்திரியர்,
காடமுத்திரியன்,குப்பிடார முத்திரியன் இவர்கள் இவ்வூரை காணியாட்சியாக கொடுத்துள்ளனர்.மேலும் இன்றவும் சுவாமி வலையப்பட்டி அடைக்கலம் காத்த ஐய்யனார் கோவில் வழிபாடு மற்றும் வலையப்பட்டி நாட்டார்களில் உள்ள கிராம நாட்டில்  இன்றளவும் நாட்டாப்பிள்ளையாக உள்ளனர்.

நன்றி.

இங்ஙனம்
  ஏ.எஸ்.கலையரசன் அம்பலகாரர்
  முத்தரையர் வரலாறு ஆய்வுக்கூடம்



يناير 29, 2022

வலையர்தடி வளரி ஆவணம்

 வலையர்தடி வளரி ஆவணம்

வலையர்தடி வளரி ஆவணம் பதிவு-16

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டம்,எடுத்தனூர் கிராமத்தில் உள்ள இரண்டு இரும்பு வலையர்தடிகள்.

வளரி  என்றாலே அது வலையர்களின் ஆயுதம்தான்.அதற்கு சான்றாக இன்றளவும் முத்தரையர் சமுகத்தில் மட்டும் வலையர்தடிகள் உள்ளது.
தம் குல தெய்வத்திற்க்கு நிகராக வளரியும் உள்ளது என்பது வளரியின் முக்கியத்துவத்தை உணரமுடியும்.

தமிழகத்தில் அதிக வளரி உள்ள மாவட்டம் என்றால் தற்போதைய எமது கணிப்புபடி அது சிவகங்கை மாவட்டம்தான்.அதற்க்கு அடுத்தபடியாக புதுக்கோட்டை மாவட்டம் உள்ளது.

எடுத்தனூரில் காவல்தெய்வமான 
சுவாமி தர்ம சாத்தார்,ஸ்ரீ பாலையடி காளி தெய்வ வழிபாட்டில் வளரி முக்கியம் வாய்ந்த ஆயுதமாக உள்ளது.
சுவாமி தர்ம சாத்தார் தெய்வம் முத்தரையர் மன்னர்களில் சாத்தன் மரபை தொடர்புப்படுத்துகினது.
புதுக்கோட்டை மாவட்ட பகுதியில் சாத்தன் மாறன்,சாத்தன் பூதி,சாத்தன் பூதிகளரி,சாத்தன் மாறன் போன்ற மன்னர்கள் ஆண்ட பூமியாகும்.அதன் தொடர்பு வம்சாவளிகள் இன்றளவும் பொன்னமராவதி வட்டார பகுதிகளில் சாத்தன் என்ற குல பட்டம் கொண்டு முத்தரையர் சமுகம் வாழ்ந்துவருகிறனர்.அதே போல சாத்தன் முத்தரையர் மரபில் வந்தவரே இந்த தர்ம சாத்தனாராக இருக்க வேண்டும்.(மேலும் விரிவான ஆய்வு செய்து முழுமையாக பதிவிடுவோம்).

நன்றி.

படஉதவி-தம்பி எடுத்தனூர் மணிகண்டன்(மு.வ.ஆ.எடிட்டர்)

இவண்
   ஏ.எஸ்.கலையரசன் அம்பலகாரர்
   முத்தரையர் வரலாறு ஆய்வுக்கூடம்



يناير 29, 2022

கண்ணப்ப நாயனார் திருமேனி

 கண்ணப்ப நாயனார் திருமேனி


கண்ணப்ப நாயனார் திருமேனி!


சிற்பத்தின் பெயர் - கண்ணப்ப நாயனார்


சிற்பத்தின் அமைவிடம் - செப்புத் 

திருமேனிகள் காட்சிக்கூடம்


ஊர் - எழும்பூர்


வட்டம் - அமைந்தகரை


மாவட்டம் - சென்னை


அமைவிடத்தின் பெயர் - அரசு மைய 

அருங்காட்சியகம், சென்னை


சிற்பத்தின் வகை - சைவம்


அளவுகள் / எடை - உயரம் 66 செ.மீ.


விளக்கம் - 

         கண்ணப்ப நாயனார் சிவபெருமானுக்காக தன் இடது கண்ணை தோண்டிய பின்பு, கையில் உள்ள கருவியால் வலது கண்ணையும் தோண்டுதல் பொருட்டு நிற்கும் காட்சி. அன்பினுக்கோர் வடிவம் தந்தாற் போன்று அடியோன் கண்ணப்பர் மரவுரியாடை தரித்தவராக, மார்பில் குறுக்காக சன்னவீரம் செல்கிறது. செவிகளில் வளையங்களும், கைகளில் வளைகளும், கால்களில் பாதணிகளும் அணிந்தபடி, தலையணி சடைமகுடமாய் திகழ, தலையை இடப்பக்கம் சாய்த்தவாறு நிற்கிறார்.


ஆக்கப் பொருள் - உலோகம்


காலம் / ஆட்சியாளர் - கி.பி.975 / முற்காலச் சோழர்


ஒளிப்படம் எடுத்தவர் - தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை


ஒளிப்படம் வழங்கிய நிறுவனம்/ நபர் - தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை

சுருக்கம் - 

         63 நாயன்மார்களுள் ஒருவரான கண்ணப்ப நாயனார் வேடுவர் ஆவார். சிவபெருமானுக்காக தன் கண்களை தந்தவர்.


நன்றி தகவலாற்றுப்படை.


இவண்

    ஏ.எஸ்.கலையரசன் அம்பலகாரர்

     முத்தரையர் வரலாறு ஆய்வுக்கூடம்

يناير 29, 2022

வேட்டுவரும் வலையரும்

 வேட்டுவரும் வலையரும்


"வேட்டுவரும் வலையரும்"

இன்று தமிழகத்தில் பல குடி மக்கள் வாழ்கிறார்கள். அனால் இவர்களில் சிலர் மட்டுமே சங்க இலக்கியத்தில் இடம் பெற்றார்கள். சங்க இலக்கியத்தில் இடம் பெற்றவர்கள் தான் மிகவும் பழமையான தமிழ் மக்கள். இவர்களில் சிலர் வேட்டுவர், வலையர், குறும்பர், குறவர், பறையர் போன்றவை. 
வலையர்கள் பண்டைய காலத்தில் வலைஞர் மற்றும் வலைவர் என்று அழைக்கப்பட்டார்கள்.

சங்க இலக்கிய நூலில் ஒன்று பட்டினப்பாலை. பட்டினப்பாலையில் ஒரு பாடல் வருகிறது. அந்த பாடலில் காவேரி பூம்பட்டினத்தில் வாழும் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும்  சந்தோசமாகவும் வாழ்ந்தார்கள் என்று வருகிறது. 

அந்த பாடல் "நீர் நாப்பண்ணும் நிலத்தின் மேலும்
ஏமாப்ப இனிது துஞ்சி 
கிளை கலித்து பகை பேணாது
வலைஞர் முன்றில் மீன் பிறழவும்
விலைஞர் குரம்பை மா ஈண்டவும்
கொலை கடிந்தும் களவு நீக்கியும்".

இந்த பாடல் நம் வலையர் குடி முன்னோர்களை பற்றி குறிப்பிட்டு பேசுகிறது. அதாவது காவேரி பூம்பட்டினத்தில் வலையர்களின் வீடு குளத்தில் மீன் துள்ளி கொண்டு இருக்கிறது என்று இப்பாடல் சொல்கிறது. சங்க காலத்தில் இருந்து இன்று வரைக்கும் வலையர்கள் காவேரி பூம்பட்டினத்தில், அதாவது நாகப்பட்டினம் மாவட்டத்தில் வாழ்ந்து கொண்டு தான் வருகிறார்கள். 

சங்க இலக்கிய பாடல்களில்  வலையர் மதுரையில் வாழ்ந்த பாடலும், தொண்டைமண்டலத்தில் வாழ்ந்த பாடலும் கூட காணலாம். ஆக வலையர்கள் அணைத்து பகுதியிலும் வாழ்ந்த பூர்வ குடி மக்கள். 

என்னதான் வலையர் என்ற பெயர் சங்க இலக்கியத்தில் தனியாக இருந்தாலும் வலையர்கள் வேட்டுவரே!
ஆம் வலையர் வேட்டுவர் தான். சொல்ல வேண்டும் என்றால் வலையரும் வேட்டுவரும் ஒரே மக்கள் தான். இதுக்கு பல ஆதாரங்கள் உண்டு. 
வாங்க பாப்போம். 

1950 வருடம் வெளிவந்த "AGRICULTURAL WAGES AND EARNINGS OF PRIMARY PRODUCERS IN CEYLON" என்கிற புத்தகத்தில் "வேடர், வலையர், வேட்டுவர்" ஒன்றாக போட்டு இவர்கள் சேலம், கோவை மாவட்டத்தில் வேட்டை குடியினர் என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள். இவர்கள் போல பலர் வலையருக்கும், வேட்டுவருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கு என்று குறிப்பிட்டு உள்ளார்கள். 

உதாரணமாக எட்கர் தர்ஸ்டன் 1909 வருடம் வெளிவந்த " CASTE AND TRIBES OF SOUTHERN INDIA" என்கிற புத்தகத்தில் வலையர்க்கும் வேட்டுவருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கு என்றும் வலையர்களின் முன்னோர் கண்ணப்ப நாயனார் என்று குறிப்பிட்டு உள்ளார். 
கண்ணப்பர் நாயனார் வேட்டுவர் குடியை சேர்ந்தவர். வலையர் மக்கள் தங்களை கண்ணப்பர் நாயனார் வழிவந்தவர்கள் என்றும் கூறி கொள்வார்கள் மற்றும் தமிழகத்தில் கண்ணப்பர் நாயனாருக்கு மிக பெரிய விழா எடுப்பது கூட வலையர்களே ஆவார்கள். ஆக இதுவும் வலையர்களும் வேட்டுவர்களும் ஒருவர் என்று நிரூபிக்கிறது. 

அது மட்டும் அல்லாமல் 1921 வருடம் வெளிவந்த "அகத்தியமகாமுனிவர் திரட்டியருளிய தேவாரத்திரட்டு" என்கிற புத்தகத்தில் வலையர்களை "கேவேடர்" என்று குறிப்பிட்டு உள்ளது. 

கி.பி 1157 வாழ்ந்த நிஷாதராஜன் என்ற ஒரு அரசன் திருமயத்தில் இருக்கும் ஒரு கோவிலுக்கு நன்கொடை செய்து உள்ளார் மற்றும் இவரின் இனத்தவர்கள் உள்வரும் வெளியேறும் வணிக பொருளுக்கும் வணிகர்களுக்கும் பாதுகாப்பு கொடுத்து உள்ளார்கள்.
இந்த நிஷாதராஜன் மன்னர் ராஜேந்திர சோழன் கேரளன் என்று அழைக்கப்பட்டார். இவர் வாழ்ந்த மற்றும் ஆட்சி புரிந்த இடம் பொன்னமராவதி. பொன்னமராவதில் வலையர்கள்  பெரும்பான்மையாக வாழும் பகுதி மற்றும் பொன்னமராவதி இன்று வலையர்களின் கோட்டையாக கருதப்படுகிறது. நிஷாதராஜன் பற்றி தகவல் 1988 வெளிவந்த "SOUTH ASIAN STUDIES" என்கிற புத்தகத்தில் குறிப்பிட்டு உள்ளது. மேலும் புத்தகத்தில் நிஷாதராஜன் அரசன் வலையர் என்று குறிப்பிட்டு உள்ளது. நிஷாதராஜன் அரசன் இயற்கையால் நிறைந்த காட்டில் வாழ்ந்த வேட்டைக்காரன். நிஷாதராஜன் என்கிற வார்த்தை சமஸ்க்ரிதம் வார்த்தை. இதுக்கு தமிழில் பொருள் "வேட்டுவராஜன் அல்லது வேட்டுவர் அரசர்". இதிலிருந்து வலையரும் வேட்டுவரும் ஒருவரே என்கிற முடிவுக்கு நாம் வரலாம். 

இது போல பல ஆதாரம் சொல்லலாம். வரும் காலத்தில் இன்றும் நிறைய பார்ப்போம். வலையர் வேட்டுவர் ஒரே மக்கள். 

💥நன்றி : வலைஞர் அரசன்

💥 மறுபதிப்பு : முத்தரையர் வரலாற்று பக்கம்

الثلاثاء، 30 نوفمبر 2021

نوفمبر 30, 2021

வீரபாண்டியனை எறிஞ்சு தலைகொண்ட கரிகால சோழன் " காலத்து சேலம் அருங்காட்சியக வீரக்கல்

 "வீரபாண்டியனை எறிஞ்சு தலைகொண்ட கரிகால சோழன் " காலத்து சேலம் அருங்காட்சியக வீரக்கல் 


இரண்டாம் பராந்தகர் தம் மக்களில் மூத்தவனான "இரண்டாம் ஆதித்யனுக்கு" இளவரசு பட்டம் கட்டினார்.


ஆற்றலும் வலிமையும் கொண்ட மாவீரனாய் திகழ்ந்த ஆதித்ய கரிகாலன் முன்பு தம் தந்தையால் சுரம் இறக்கப்பட்ட வீரபாண்டியனை சேவூர் என்னுமிடத்தில் எதிர்கொண்டான் !


இந்த வீரபாண்டியன் சோழர்க்கு அடிபணியாமல் சுதந்திர ஆட்சி செய்து வந்தான், ஏதேனும் ஒரு சோழனை கொன்றமையால் தம்மை "சோழன் தலை கொண்ட வீரபாண்டியன்" என்று அழைத்துக் கொண்டான்.


ஆதித்யன் இவனை சேவூரில் கொன்று பாண்டிய நாட்டை சோழர் ஆட்சிக்கு கீழ் கொண்டுவந்து தாம் பூண்ட பெயரே, மறந்தாலும் மறையாத பட்டமான " வீரபாண்டியன் தலை கொண்ட கொபரகேசரி".


வடக்கே காஞ்சியில் தங்கியிருந்து சோழரின் வடவெல்லையை விரிவுறச் செய்தான், ஆதித்யன் சூழ்ச்சியால் இளவயதிலேயே கொல்லப்பட்டான், அதில் இன்றும் மர்மம் நிலவுகிறது.


இவனின் கல்வெட்டுகள் அதே கம்பீரமான பட்டபெயருடன் காணக்கிடைகின்றன, அவற்றுள் சேலம் அருகே பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயிலில் காணக்கிடைக்கும் கல்வெட்டு மேற்கு தமிழகத்தில் கிடைக்கும் முக்கிய கல்வெட்டு ! அதேபோல் நாமக்கல் மாவட்டம் ரெட்டிபட்டியில் கிடைத்த வீரக்கல்லில் ஆதித்த கரிகாலன் குறிப்பு கிடைக்கிறது ! அந்தக் கல் தற்போது சேலம் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகிறது !


கொடுக்கமங்கலத்தின் ஆரையன் ஆயிரவன் இளஞ்சிங்க முத்தரையன் என்பான் பகைவர்கள் கவர்ந்து சென்ற ஆநிரைகளை மீட்க அவர்களோடு சண்டையிட்டு வீரமரணம் எய்துகிறான் ! அவனுக்காக ஆயிரவன் ஏகவீர முத்தரையன் என்பவர் எடுத்த வீரக்கல் !


வீரபாண்

டி கனை எறிஞ் 

சு தலை கொ

ண்ட கலி(ரி)

கால சோழ 

 ற்குச் செல்லா 

நின்ற யா 

ண்டு நாலா 

வது கொ 

டுக்க 

மங் 

கல 

த்தி 

லிருக்கும் ஆரைய 

ன் ஆயிர 

வனான 

இளஞ் 

சி 

ங்க மு 

ததரை 

யன்த 

ன்னு 

ர்க்காலி


இது வீரபாண்டியனை எறிஞ்சு தலைகொண்ட கரிகால சோழனின் நாலாவது ஆட்சியாண்டில் எடுக்கப்பட்டுள்ளது 


இந்த மன்னன் சுந்தர சோழரின் மூத்த  மகனான இரண்டாம் ஆதித்தன் எனும் ஆதித்த கரிகாலன் ! முதலாம் இராஜராஜனின் அண்ணண் 


பொதுவாக வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி அல்லது பாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி என்று காணப்படும்  ஆதித்தன் கல்வெட்டு இங்கு வீரபாண்டியனை எறிஞ்சு தலைகொண்ட கரிகால சோழன் என்று குறிக்கப்பட்டுள்ளது சிறப்பு

نوفمبر 30, 2021

தானமநாடு சேந்தன்குடி ஜமீன் வழுவாடிதேவர்

 தானமநாடு 

 ஜமீன் வழுவாடிதேவர்




முத்தரையர் ஜமீன் என்பதை சொல்லும் பழனி_கோவில் செப்பு பட்டயம்

முத்தரையர் செப்பேடு

இடம்:
காலம்: செய்தி:

கோவை மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், சுணியூர் கலியுகம் 4774:சகம 1596, கி.பி.1673,

முத்தரையர் தோற்றம், பெருகி வளர்ந்த வரலாறு, குடியேறிய இடங்கள், ஆட்சி செய்த இடங்கள், செய்த திருப்பணிகள் இவைகளை விரிவாகக் கூறி அவர்கள் அனைவரும் கூடி பழனியில் மடம் ஒன்று கட்டி அதற்குக் கொடுக்க வேண்டிய சமுதாய வரி முதலியவைகளை இச்செப்பேடு விளக்குகிறது. பழனியில் ஒன்று கூடிய வன்னிமுத்தரசர் முத்தரையர்கள் இனத்தைச் சேர்ந்தவர். கி.பி. 1674ஆம் திருவாவினன்குடிக்குக் கீழ்புறம், சரவணப் பொய்கைக்குத் ஆண்டு தென்மேல்புறம் மடம் ஒன்றைத் தங்கள் பெயரில் உருவாக்கினர். வேலாயுத உடையான் மகன் கொளந்தைவேலு உடையான் வசம் மடத்தை நிர்வாகத்துக்கு அளித்தனர். முத்தரையர்கள் அனைவரும் பெரிய ஊருக்கு 10 பணமும், சிறிய ஊருக்கு 5 பணமும் கொடுக்க வேண்டும் பண்ணையத்துக்கு 2 பணமும், பயலாள்கள் ஒரு பணமும் கொடுக்க வேண்டும். திருமணத்திற்கு மாப்பிள்ளை வீடும் பெண் வீடும் இரண்டிரண்டு பணம் கொடுக்க வேண்டும் தேருக்கு ஒரு பணம் கொடுக்க வேண்டும். குற்றத்திற்கு விதிக்கும் தண்டனைப் பொருளில் மூன்றில் ஒன்று மடத்திற்குக்கொடுக்க வேண்டும் மடத்தில் பரதேசிகட்கு உப்பு, ஊறுகாய், நீராகரம் கொடுக்க வேண்டும். அடியார்கட்கு அன்னமிட வேண்டும் என்று விரிவாகச் செப்பேடு எழுதி கொளந்தைவேலு உடையான் வசம் கொடுத்தனர். இச்செப்பேட்டு வாசகம் எழுதியவர் இராமசாமிக் கவிராயர்
என்பவர்.


نوفمبر 30, 2021

முத்தரையர் சொல் வருவதற்கு முன்பே முத்துராஜா என்னும் சொல்

 முத்தரையர் என்ற சொல் வரலாற்றில் வருவதற்க்கு முன்பே முத்துராஜா என்னும் சொல் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் கலமல்லாவில் கிபி 5-ஆம் நூற்றாண்டை சேர்ந்த தெலுங்கு நாட்டையாண்ட சோழர்களான "ரேனாட்டு சோழர்" பற்றிய கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இக்கல்வெட்டே தெலுங்கு மொழியின் மிகப்பழமை வாய்ந்த முதல் கல்வெட்டாகும்.




இந்த கல்வெட்டிற்க்கு விளக்கம் அளித்துள்ள மத்திய அரசின் மத்திய தொல்லியல் துறையினர்கள் 1947-1948 ஆம் ஆண்டு தொல்லியல் துறையினரால் வெளியிடப்பட்ட "Epigraphica indica vol 27" ல் இக்கல்வெட்டு சம்பந்தமாக விளக்கம் அளித்துள்ளனர். 


அதில் ரேனாட்டு சோழ வம்சத்தினரே முதன் முதலில் முத்துராஜா என்ற பட்டம் தாங்கியவர்கள் என்றும். முத்துராஜா என்றால் ரேனாட்டு சோழ வம்சத்தின் இளைய மரபினர் என்றும் இதற்க்கு ஆதாரமாக மத்திய அரசின் Epigraphica indica vol 27 நூலில் கலமெல்லா சோழர் கல்வெட்டில் சோழர்கள் முத்துராஜா பட்டம் தாங்கியவர்கள் என்றும் இந்த முத்துராஜா பட்டமே பின்னாட்களில் முத்தரையர் என்று மருவியதாகவும் மத்தியதொல்லியல் துறை கூறுகின்றது.


முத்தரைய மன்னர்கள் சோழர் மரபினர் என அரசாங்கமே அறிவித்துள்ளது. 

 முத்தரையர்கள் சோழர் மரபினர்கள்

முத்து(ராஜா) என்னும் சோழ இளவரசருக்கான பட்டமே பின்னாட்களில் முத்து(அரையர்) என்று உருப்பெற்றது. ராஜா என்ற தெலுங்குச்சொல்லின் தமிழ் வடிவம் அரையர் ஆகும். முத்துராஜா முத்தரையராக ஆகியது இதன் மூலம் தான் என்று தெளிவாகுகின்றது இதையே தொல்லியல் துறையும் கூறுகின்றது.


முத்துராஜா என்ற சொல்லாடளின் மற்றோரு வடிவமே முத்தரையர்


முத்து+ராஜா - முத்து+அரையர்


ராஜா என்றாலும் அரையர் என்றாலும் ஒரே பொருள் தான்


தெலுங்கில் ராஜா தூய தமிழில் அரையர்.


ராஜா - அரையர்


அரையர் என்றால் அரசர் என்று பொருள்.


இதை கலமெல்லா கல்வெட்டு தெளிவுபடுத்துகின்றது. 


* முதி,முது என்பதற்க்கு பொருள் மூத்த என்று அர்த்தம்


* முத்துராஜா என்ற தெலுங்கு சொல்லாடலின் தமிழ் வடிவம் முத்தரையர் மற்றும் கன்னட வடிவம் முத்துராசா ஆகும்.


மேலே மத்திய தொல்லியல் துறையினர் கூறியதுபடி பார்த்தால் இன்றும் ஆந்திராவில் முதிராஜ்,முடிராஜ் என்றும் கர்நாடகாவில் முத்தராசா என்றும் தமிழ்நாட்டில் முத்தரையர்,முத்துராஜா,முத்திரையர் என்று முத்தரையர்கள் வாழுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


முத்துராஜா என்ற சமூகம் யார் என்று தமிழக அரசின் கெசட் மற்றும் ஆங்கிலேயர் கால குறிப்புகளில் பார்த்து தெளிவுபடுத்திக் கொள்ளவும்


கட்டுரைகள்


செம்மொழி தெலுங்கின் கலமல்லா கல்வெட்டு

 - சேசாத்திரி - கட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு 28 அக்டோபர் 2015

செம்மொழி தெலுங்கின் கலமல்லா கல்வெட்டு!   சேசாத்திரி ஶ்ரீதரன-நடுவண் பண்பாட்டு அமைச்சகம் தெலுங்கிற்கான செம்மொழி வல்லுநர் குழு ஒன்றை அமைத்து அதன் பரிந்துரையின்படி 2008 நவம்பரில் இல் தெலுங்கைச் செம்மொழியாக  அறிவித்தது.


இதற்கு 1,500 முதல் 2,000 ஆண்டுகள் பழைமை உடைய  இலக்கியங்கள் அல்லது பதியப்பட்ட வரலாறு இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில்1904 இல் சென்னையில் இருந்து செயற்பட்ட இந்தியத் தொல்லியல் துறையினர் மேற்கொண்ட கள ஆய்வில் கடப்பை மாவட்டம் கமலாபுரம் வட்டம் ஏற்ரகுடிபாலேம் கலமல்லா ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் கோவிலில் கண்டு அறியப்பட்ட ரேனாட்டு சோழன் எரிகல் முத்துராசு  தனஞ்செயன் பற்றிய கல்வெட்டு எழுத்தமைதியால் பழமையானது இதாவது, கி.பி. 575 ஆம்  நூற்றாண்டினது என்று முடிவு செய்யப்பட்டு அதை நடுவண் பண்பாடு அமைச்சகத்திற்கு சான்று ஆவணமாகக் காட்டியுள்ளனர்.


ரேநாடு என்பது இற்றைய இராயல்சீமையின் கடப்பை மாவட்டத்தைச் சுற்றி அமைந்த நாட்டுப் பகுதியாகும். இதை ஆண்ட சோழர்கள் ரேநாட்டுச் சோழர்கள் எனப்பட்டனர். யுவான் சுவாங்கின்  பயணக் குறிப்பில் உள்ள "சுளியர்" என்பதை மேற்கோளாகக் கொண்டு சிலர் சோழர்களை கி.பி  7 ஆம் நூற்றாண்டு முதல்13 ஆம் நூற்றாண்டுவரை ஆண்டவர்கள் என்று கூறுவது உண்டு.


இக்கல்வெட்டு கோவில் வளாகத்தில் கிடத்தப்பட்டிருந்த உடைந்த தூணின் இரண்டு பக்கங்களில்17 வரிகளில் வெட்டப்பட்டுள்ளது. இதில் நான்கு வரிகள் (12 - 15) சிதைந்து உள்ளன. அதை சென்னைக்கு கொண்டுவந்து தொல்பொருள் சேமிப்பில் வைத்திருந்துள்ளனர். ஆனால் இப்போது அக்கல்வெட்டு காணாமல் தொலைக்கப் பட்ட நிகழ்வு தொல்லியல் ஆர்வலர்களை பெரிதும் வருத்தமுறச் செய்துள்ளது. இனி, இக் கல்வெட்டு பாடமும்  விளக்கமும்.


1. ...................

2. కల్ముతురా           kalmutura                கல்முத்துரா     

3. జు ధనంజ            ja dananja               ஜ தனன்ஜ    

4. య ఱు రేనా         ya ru raina               ய ரு ரைனா  

5. ణ్డు ఏళన్             ndu elen                  ண்டு ஏலன்   

6. చిఱుంబూరి          chirumburi               சிறும்பூரி

7. రేవణకాలు (పం)    raivanakalu (pam)   ரைவணகாலு(பம்)

8. పు చెనూరు కాజు   pu chenuru kaju      பு செனூரு காஜு

9. ఆఱికాశా ఊరి        arikasa ori               அரிகாசா  ஊரி

10. ణ్డవారు ఊరి        ndavaru ori              ண்டவாரு ஊரி

11. న వారు ఊరిస...  na vaaru orisa         னவாரு ஊரிச

12.

13.

14.

15.

16. హాపాతకస           hapatakasa                  ஹபாதகச

17. కు.                     ku                               கு


கல்வெட்டு பாடம்:

......../ కల్ముతురా / జు ధనంజ / య ఱు రేనా / ణ్డు ఏళన్ / చిఱుంబూరి / రేవణకాలు / (పం) పు చెనూరు కాజు / ఆఱికాశా ఊరి / ణ్డవారు ఊరి /  న వారు ఊరిస.../  హాపాతకస / కు


... / கல்முத்துரா / ஜு தனஞ்ஜ / ய ரு ரைனா / ண்டு ஏலன் / சிறும்பூரி /ரைவணகாலு (பம்) / பு செனூரு காஜு / அரிகாசா ஊரி / ண்டவாரு ஊரி / னவாரு ஊரிச .... /   ஹபாத கச / கு


..... / kalmutura / ju dananja / ya ru raina / ndu elen / chirumburi /    raivanakalu (pam) / pu chenuru kaju / arikasa ori / ndavaru ori / na vaaru orisa.... /  hapatakasa /  ku   


Dhananjaya - செல்வத்தை வென்றவன், அருச்சுனனின் மற்றொரு பெயர்: இலக்கிய பதிவு: Srimad Bhagavatam 1.9.3; ரேவண்த - இந்த கல்பத்தின் 5 ஆவது மனுவின் பெயர் , சூரியனின் ஒரு மகனுக்கு பெயர்; ஏலன் - to oppose, battle ; காலு (கால்) - மகன், கால்வழி, காலாட்படை; ஆரிகாசா - கொக்கரித்து ஆரவாரித்து போருக்கு எழுந்து வெளியேவந்தான்; இண்டு + அர் = இண்டர் - இடையர், இழிகுலத்தோர் "இண்டக்குலத்தை" திவ். திருப்பல் 5; pata kasaku - (கசகுதல்) -  பின்வாங்குதல்.

السبت، 20 نوفمبر 2021

نوفمبر 20, 2021

கரிகால்சோழன் முத்தரையர் வரலாறு

 கரிகால்சோழன் முத்தரையர் வரலாறு


கரிகால் சோழன் கீர்த்தி பெற்ற முத்தரையர் சோழ மன்னன் ஆவான். உறையூரை தலைநகராக கொண்டு சோழ நாட்டை ஆட்சி செய்தவன். இவன் செயற்கரிய செயல்களை மக்களுக்கு செய்து அழியாப் புகழ் பெற்றவன். இக் கரிகாலன் முத்தரையர் குலத்து, சூரிய வம்சத்தை சேர்ந்தவனாவான்.


கரிகாலன் முத்தரையர் குலத்தவன் என்று பல்வேறு சான்றுகள் கிடைத்துள்ளன. அவையாவன;


பழனி மடம் பற்றிய செப்பு பட்டயத்தில் (கி.பி.1674)ல் வெட்டியதில், பின்பக்கம் வரி எண் 3லுள்ள வரியில் முத்தரையர் சூரிய வம்சத்தினர் என்று கூறுகிறது. இம் முத்தரையர்கள் கோப்புலிங்க ராஜாவின் வம்சத்திலே பெண் எடுத்தவர்கள் என்றும், சோழருடனிருந்தவர்கள் என்றும், சோழர் சார்பாக பாண்டியரை வென்றவர்கள் என்றும் வரிகள் 62முதல் 64வரை கூறுகின்றது.


ஆலங்குடி நாட்டு அம்பலம் திரு.மயிலப்பன் முத்தரையரிடமுள்ள செப்பேடு சகாத்தம் 1400க்கு கி.பி 1478ல் உள்ள செப்பேட்டில் கரிகால் சோழனும், உக்கிர வீரபாண்டியன் ராஜாவும் முத்தரையர்க்கு கரை பிரியல் செய்ததாகக் கூறுகிறது.


திருவரங்குளத்தை அடுத்துள்ள "இம் மண் ஆண்டான்பட்டி" யிலிருக்கும் அருணாசலம் அம்பலக்காரரிடம் உள்ள முத்தரையர் செப்பேட்டில் (கி.பி.1430) "சூரிய முத்திரியர் எட்டுக்கரைப் பேர்" என்றும் எட்டுப்பட்டங்களையும் கூறுகிறது.


திருவரங்குளத்தை அடுத்துள்ள கோயில்பட்டி ஆதிதிராவிடர் திரு.பிச்சன் மானாங்காத்தான் என்பவரிடமுள்ள செப்பேடு கி.பி.1478ல் "கரிகால் சோழன் குழுவினர்" என்றும் சூரிய முத்திரியர் என்றும் கூறுகிறது.


புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் செம்பூதி கிராமத்திலுள்ள கிருஷ்ணசாமி நாயுடு அவர்களிடமுள்ள கி.பி.1378ம் வருட செப்பேட்டில் கரிகால் சோழனை முத்தரையர் என்று குறிப்பிட்டுள்ளது.


தமிழ்நாட்டில் கரிகால் சோழனை முத்தரையர் என்று குறிப்பிடும் செப்பேடுகள் இருக்க மைசூர் நாட்டில் தலைக்காடு பகுதியை ஆண்ட கங்கர்கள் தங்களை "விருத்த ராஜா முத்தரையர்" என்று அழைத்துக்கொண்டனர். இவர்கள் "தமிழ் முதுகுடி மக்கள்" எனக் குறிப்பிடுவதற்காக தம்மை "முது அரசர்",  முத்தரசர்" என்று கூறிக்கொண்டனர்.(தினமணி)28-10-88)


கங்க அரசர்கள் கி.பி.550லிருந்து 600க்குள் ஆண்ட "துர்விநீதன்" என்ற சிறந்த மன்னனின் தேவி ஒரு சோழ இளவரசியாவாள். அவள் "உரகபுரத்தை ஆண்ட, கரிகால் சோழனின் வழிவந்தவனும், பரம ஷத்திரியனுமான சோழ அரசனின் பெண்" என்று குறிக்கப்பெறுகிறாள். அதை குறிக்கும் செப்பேடு "உரகபுராதிப பரம ஷத்திரிய சோழ, குல திலக ஸ்ரீ சாக்த சரண சந்தான பிர சூதா" என்று கூறுகிறது. "சந்தானம்" வழித்தோன்றிய என்று பொருள். கரிகாலன் சிறுவனாக இருந்த போது தீயிலிருந்து தப்பினான். அப்போது அவனது காலை தீ சுட்டதால் "கரிகாலன்" எனப்பெயர் பெற்றான் என்பது பண்டைய தமிழ் வரலாறு கூறும் உண்மையாகும்.


இத்தமிழ் மரபைக் கங்கர்களது செப்பேடுகள் உறுதி செய்கின்றன. கங்க அரசன் துர்விநீதனுக்கு மகன் வயிற்று மகன் (பேரன்) ஸ்ரீ விக்கிரமன் என்று ஒருவன் இருந்தான். அவன் பின்னர் கங்க அரியணை ஏறினான். அவனும் சோழ இளவரசியை மணந்தான் அவனை  கூறும்போது கங்கர் செப்பேடு "காவிரிக்கு கரை கட்டிய கரிகால் சோழனின் குலத்து உதித்தவள்" என்று "காரித காவேரி தீர கரிகால் சோழ குல வம்ச சோழ நிரூபதிபுத்ரி" எனப் புகழ்கிறது. கங்கர்கள் தம்மை காரிகாலச் சோழ குலப்பெண் வழிவந்தவர்கள் என்று கூறி பெருமைப்படுகிறார்கள்.


இப்பொழுது பாருங்கள் எங்கையோ மைசூர் பகுதியை 1300 ஆண்டுகளுக்கு முன் ஆண்ட கங்க அரசர்கள் தம்மை "முத்தரையர்" என்றும், "கரிகால் சோழ குலத் தொடர்புடையவர்" என்றும் தமது செப்பேடுகளில் கூறிக்கொள்வதும், தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில், உள்ள பல செப்பேடுகளில் கரிகால் சோழன் குழுவிர் என்று கூறுவதும் வரலாற்றின் சான்றாக உள்ளது. இவர்கள் 10வது நூற்றாண்டு முதல் 14-15ஆம் நூற்றாண்டு வரை புதுக்கோட்டைப் பகுதிகளில் தானைத் தலைவர்களாகவும், வளநாட்டை ஆளும் தலைவர்களாகவும் கல்வெட்டுக்களில் காணப்படுகிறது.


உறையூரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த சோழர் கரிகால் பெருவளத்தான். புகாரையும் தலைநகராக கொண்டனர். உறையூர் பண்டை காலத்தில் "உறந்தை" என்றும் அழைக்கப்பட்டது. இந்தச் சோழர்கள் கிள்ளிவளவன், சென்னி, செம்பியன், என்றெல்லாம் அழைக்கப்பட்டனர். இந்த நாட்டை ஆண்ட முத்தரையன் இளஞ்சேட் சென்னி இவனே கரிகாலனின் தந்தை ஆவான்.


ரேநாடு என்பது கடப்பை, கர்நூல், அனந்தப்பூர் மாவட்டங்களடங்கிய பகுதிகளாகும். இதன் தலைநகர் "சீட்புலி"  ஆகும். இந்நாட்டை கரிகாலன் வெற்றி கொண்டான். அங்கே காட்டை அழித்து நாடாக்கினான், நகரங்களாக்கினான். ஏரி, குளம் வெட்டி நீரைப் பெருக்கி, நிலவளம் காத்தான். இந்த தெலுங்கு சோழர்கள் சூரிய குலத்தவர் ஆவார்கள். இவர்கள் புலிக்கொடியை கொண்டிருந்தனர். இவர்கள் தங்கள் செப்பேடுகளில்


"தினகரன் குலத்தினராகிய மந்தார மரத்திற்குறிய

காவிரி தேசத்திலிருந்து வந்த திரை ராஜ்யர்களாகிய

கரிகாலன் வழி வந்த காஸ்யப கோத்திரர்"/என்று கூறுகின்றனர்.

வாராங்கல்லைத் தலைநகராக கொண்டு ஆட்சிபுரிந்த காகதீயர்கள் தங்களை கரிகால் சோழனின் மரபினர் என்கின்றனர். காகதீயர், பொத்தப்பி சோழர், ரே நாட்டுச் சோழர் ஆகியோர் தங்களை சூரிய குலத்தவர் என்றும், கரிகாலன் மரபினர் என்றும் அழைத்துக் கொள்கின்றனர்

نوفمبر 20, 2021

வலையர் குடி சோழ முத்தரையர் சாம்ராஜ்யம்

 வலையர் குடி சோழ முத்தரையர் சாம்ராஜ்யம்







வலையர் குடி சோழ முத்தரையர் சாம்ராஜ்யம்.

காவிரிக்கு கரை அமைத்து அதில் கல்லணை கட்டிய, சோழ சாம்ராஜுயத்தை உருவாக்கிய மாமன்னர் கரிகாலசோழன் முத்தரையர். 

கரிகாலசோழன் முத்தரையர் வழிவந்த ஆந்திரா ரேநாட்டு சோழர்கள். 

ஆந்திரா ரேநாட்டு சோழர்கள் வழிவந்த பொத்தப்பி சோழர்கள். 

ரேநாட்டில் சோழர்கள் ஒரு நாட்டை மூன்றாக பிரித்து ஆண்டு வந்ததை கல்வெட்டுக்கள் குறிப்பிடுகிறது. ரேநாட்டு சோழர்கள் ஆட்சி முறை  அதாவது, நந்திவர்மசோழனுக்கு மூன்று மகன்கள் இருந்துள்ளனர். இதில்,

முதல் மகன் : சிம்மவிஷ்ணுசோழன் யுவராஜா 

இரண்டாவது மகன் : சுந்தரநந்தாசோழன் அதிராஜா

மூன்றாவது மகன் : தனஞ்சயசோழன் முத்துராஜா 

இதில், முதல் மகன் சிம்மவிஷ்ணுசோழன் யுவராஜாவிற்கு மகப்பேறு இல்லை. யுவராஜா பட்டத்தில் இருப்பவர் தான் அடுத்த சோழ நாட்டின் சோழராஜாவாக முடிசூடுபவராவர். 

இரண்டாவது மகன் சுந்தரநந்தாசோழன் அதிராஜா பட்டத்திற்கு உரியவர். இவரின் வழிவந்தவர்களே பொத்தப்பி சோழர்கள் மற்றும் பிற்கால சோழர்கள் ஆவார். சுந்தரநந்தாசோழன் அதிராஜா நாட்டை ஆண்டவர்கள் தான் பொத்தப்பி சோழர்கள் ஆவார். அதிராஜா நாட்டை ஆண்ட பொத்தப்பி சோழர் ஸ்ரீ காந்தன் முத்தரையர் ஆவார். இவர் தான் விஜயாலயசோழன் தந்தை ஆவார். சுந்தரநந்தாசோழன் அதிராஜா வழிவந்தவரே தஞ்சை பெருவுடையார் கோயில் கட்டிய ராஜராஜசோழன் முத்தரையர் ஆவார். 

மூன்றாவது மகன் தனஞ்சயசோழன் முத்துராஜா ஆவார். இவர் தான் சோழர் வம்சத்தின் இளைய மரபினர் ஆவார். தனஞ்சயசோழன் முத்துராஜா வழிவந்தவர் தான் பேரண்டம் போற்றும் சோழ பேரரசர் பெரும்பிடுகு சுவரன்மாறன் முத்தரையர். 

இந்த மூன்று மகன்களும் ஒரே நாட்டை மூன்றாக பிரித்து ஆட்சி செய்துள்ளனர் என ரேநாட்டு சோழர்கள் ஆட்சி செய்த கல்வெட்டுக்களில் அறியலாம். இது போல தான் தமிழகத்திலும் ஆட்சி புரிந்துள்ளனர் என்பது தெளிவாகிறது.


نوفمبر 20, 2021

Mutharaiyar History

 Mutharaiyar History







சோழ வம்சத்தை தொடங்கி மாபெரும் கல்லனை கட்டியவன் சூரிய குல சோழன் கரிகால் பெருவளத்தான் 

தஞ்சையை வளமாக்கி தஞ்சை தேசத்தை உருவாக்கியவன் கரிகால் வழியோனன் சூரிய குல சோழன் தனஞ்செய முத்தரையர் 

களப்பிரர்களிடம் இருந்து சேர , சோழ , பாண்டிய தேசத்தை காப்பாற்றியவன் கரிகால் பெருவளத்தான் பேரன் சூரிய குல சோழன் சுவரன் மாறன் 

தஞ்சையை தலைநிமிர வைத்து உலகத்தை வியப்படைய செய்து தஞ்சை பெருவுடையார் கோயில் கட்டியவன் சூரிய குல சோழன் அருள்மொழி வர்மன் 

தன் வீரத்தால் தெற்காசியாவையே கங்கை முதல் கடாரம்வரை ஆட்சி செய்தவன் சூரிய குல சோழன் அருள்மொழி வர்மன் மகன் இராஜேந்திர சோழன்

முத்தரையர் குலத்தில் அவதரித்து கயவர் வேடம் அணிந்து திருமாலுக்கு தன் இறைபக்தியை நிறுபித்த சூரிய குல சோழன் திருமங்கையாழ்வார்


نوفمبر 20, 2021

பிற்கால சோழ முத்தரையர்களின் வரலாறு

 பிற்கால சோழ முத்தரையர்களின் வரலாறு


தமிழர்களின் மறைக்கப்பட்ட வரலாறுகள் உயிர்பெற்று உலகறிய வேண்டுமெனில், பிற்கால சோழர்கள் தோற்றம் மற்றும் கி.பி 2 முதல் கி.பி 9 வரை 5 நூற்றாண்டுகள் ஒட்டுமொத்த சோழதேசங்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்து, மக்கள் போற்றும் பொற்கால ஆட்சி புரிந்த #முத்தரையர் பேரரசின் கல்வெட்டுகள், வரலாற்று சான்றுகள் அனைத்தையும் நன்கு ஆராய்ந்து தெளிவுற வேண்டும்

பிற்கால சோழர்களை பற்றிய வரலாறு அறியப்பட முக்கிய சான்றாகவும், #முத்தரையர் மன்னர்களை தோற்கடித்து சோழர் ஆட்சி மீண்டும் வரலாற்றில் தோன்றியது எனும் கருத்துக்கள் மேலோங்கி நிற்க காரணமாகவும் இருப்பவர் #விஜயாலயசோழன்' ஆவார்.

ஆனால், விஜயாலய சோழன் மரபுவழி எது..??

விஜயாலயன் என்பது  இயற்பெயரா..?? அல்லது மன்னரின் புனைப்பெயரா...??

அவர் எவ்வாறு தஞ்சையில் அரியணை ஏறினார்..??

தஞ்சையை கைப்பற்றும் முன்னர் விஜயாலய சோழன் ஆட்சி மற்றும் அவரது தோற்றம் பற்றிய வரலாறு அறிய உதவும் சான்றுகள் எது...??

கி.பி. 850 காலத்தில் எந்த பெரும் போரில் தஞ்சை விஜயாலய சோழனால் கைப்பற்றப்பட்டது..??

 
முத்தரையர் மற்றும் பிற்கால சோழர்கள் ஒரேமரபுவழி தொடர்பை கொண்டிருந்ததை பல வரலாற்று சான்றுகள் கூறுகின்றன.

 
கரிகாலசோழன் மரபாக அறியப்படும் முத்தரையர்களையும் அவர்கள் கலை முறைகளையும் தனது முன்னோர்களாக அப்படியே விஜயாலய சோழன் ஆட்சி காலத்திலும் நிலைத்திருக்க காரணம் என்ன..?

முத்தரையர் மன்னர்களுக்கும், பிற்கால சோழர்களுக்கும் வாரிசு ஆட்சி அதிகாரத்தின் அடிப்படையில் தான் தஞ்சை நகரம் விஜயாலய சோழன் வசமானது என்ற கருத்தும் ஆராய்ந்து ஏற்கதக்கது.

மேலும், விஜயாலய சோழன் வணங்கிய தெய்வமும் (நிசம்பசூதனி கொற்றவை தேவி) முத்தரையர் மன்னர்களின் வழிபாட்டு முறைகளும் (பிடாரி கொற்றவை, சிவ வழிபாடு) ஒன்றுதான் என்பதை வரலாற்றின் மூலம் எளிதில் அறிய முடிகிறது.

வரலாறு ஆதாரம் அடிப்படையில் முக்கிய சான்றுகள்:👇


1. முத்தரையர்களிடம் உள்ள #கரிகால் சோழ குழுவினரான சூரிய முத்தரையர் எனும் வரலாற்று செப்பேடு செய்தி சோழர் மரபினரை நேரடியாக அறிந்திட மிக முக்கிய ஆதாரமாக உள்ளது.

2. ரேனாட்டு சோழர்கள் எனும் முத்தரையர் அரச மரபினர் சோழ மகாராஜா என்றே வரலாற்றில் அறியப்படுகின்றனர்.

 
ஆதாரம் : தனஞ்சயவர்ம முத்துராஜா (எ) சோழ எரிகால் மகாராஜா.

புண்ணியகுமார முத்துராஜா (எ) சோழ மகாராஜா.

புகழ் சோழன், மணிமுடி சோழன் (எ) குவாவன் முத்தரையர்.

முத்தரையர்களே  சோழர்கள் - என்பதை நிரூபிக்கும் சில வரலாறு ஆதாரங்கள் :


1. கரிகால் சோழன் வழிவந்தவர்களாக கங்க தேசத்தை ஆண்ட மன்னர் துர்வீதனன் முத்தரையரின் கல்வெட்டு கூறுகிறது.

2. கரிகால் சோழனுக்கு பிறகு நேரடி சோழ மண்டல ஆட்சியில் முத்தரையர் அரசாட்சி பெயர்களை தாங்கிய சோழ-மன்னர்களே 450 ஆண்டுகள் ஆட்சிபுரிந்துள்ளர்.

3. வாரிசு பெயர்சூட்டல் மரபு  அடிப்படையில் புகழ்சோழன் (எ) குவாவன் முத்தரையர், மணிமுடி சோழன், விஜயாலய சோழன்,  விஜயாலய முத்தரையன், பெரும்பிடுகு - அக்ராணிபிடுகு, வளவன், வலைஞர் - கிள்ளிவளவன், மும்முடி சோழ முத்தரையன் - இருமுடி சோழன் போன்ற பல வரலாற்று செய்திகள் முத்தரையர் -சோழர்கள் குலவழி தொடர்பை உறுதிபடுத்துகிறது.

4. தன் முன்னோர்களது கலைகளைதான் பிற்கால மன்னர்கள் சீரமைப்பார், அவற்றை அழியாமல் பாதுகாப்பார்கள். அவ்வகையில் இளங்கோவதி முத்தரையரின் நார்த்தாமலை சோழீஸ்வரம் கற்கோயிலை விஜயாலசோழன் சீரமைத்து குறிப்பிடத்தக்கது.

சாத்தன் முத்தரையர் பூதீஸ்வரம் எனும் அக்கோயிலை வழிபட்டு விஜயாலய சோழீஸ்வரம் என பெயர்மாற்றம் செய்யப்பட்ட குலவழிபாடு சான்றும் குறிப்பிடத்தக்கது. ‌

 
5. முத்தரையர்களின் கட்டிடக்கலையின் விஜயாலய சோழீஸ்வரம் (எ) சாத்தன் முத்தரையர் பூதீஸ்வரம் கற்கோயிலை அடிப்படையாக வைத்து ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரியகோவில் கட்டப்பட்டதின் பின்புல மரபு ஒற்றுமை ஆதாரம்.

6. பிற்கால சோழர்கள் ஆட்சி உருவாக விஜயாலய சோழன் தஞ்சை மரபு முத்தரையர்களை - திருப்புறம்பியம் போரில் வென்றான் எனும் மிகப்பெரிய வரலாற்று பொய், கற்பனை மற்றும் வரலாற்று குழப்பங்களும் சிறந்த ஆதாரமாக உள்ளது.

திருப்புறம்பியம் போர் நடந்தது கி.பி. 870 பிறகு. ( இது விஜயாலன் ஆட்சிக்கு பிறகு முதலாம் ஆதித்தன் காலம்)*.

 ஆனால் விஜயாலயன் மகன் காலத்து போரில் எப்படி விஜயாலசோழன் முத்தரையர்களை வென்று கி.பி. 850 காலத்திலேயே ஆட்சியை கைப்பற்றினார்.......?????

7. திருப்புறம்பியம் போர் பல்லவர்களுக்கும் பாண்டியர்களுக்கும் நடந்தது. இதில் பாண்டியர்களுக்கு துணையாக திருமயம், புதுகை மற்றும் வல்லம் மரபு முத்தரையர் மன்னர்களும், 

பல்லவர்களுக்கு துணையாக தஞ்சை, ரேனாட்டு சோழ முத்தரையர் மன்னர்களும் துணையாக நின்றது குறிப்பிடத்தக்கது.

8. விஜயாலய சோழன் தன் வாரிசு உரிமையில் முத்தரையர்கள் உருவாக்கிய தஞ்சை தலைநகரில் ஆட்சிப்பொறுப்பேற்க வேண்டி தன்முன்னோர்களிடமே முரண்பட்டு தஞ்சையை தன்வசமாக்கிருக்க வேண்டும் எனும் வரலாற்று கருத்து.

9. மிகப்பெரிய பேரரசாக ஆட்சியில் உள்ள சோழ மண்டல எல்லைகளை வாரிசு உரிமை இல்லாத அடிப்படையில் ஏறத்தாழ 450 வருடங்களை சோழர் எனும் ஆட்சிப்பெயர் எப்படி காணாமல் போனது...?

 
10. சோழ மன்னராக கூறப்படும் திருமங்கை ஆழ்வார் முத்தரையர் குலம் உதித்தவர் எனும் வரலாற்று குறிப்புகள் மேலும் சோழர் மரபு ஒற்றுமைக்கான சான்றாக உள்ளது..

11. சோழர்கள் வேளிர் வழிவந்த சூரிய குலத்தோர் என்ற வரலாற்றுடன் முத்தரையர் மன்னர்களும் வேளீர் வழி தோன்றிய சூரிய முத்தரையர்கள் என்ற குலமரபு ஒற்றுமை மேலோங்கி நிற்கிறது.

12. கொடும்பாளுர் வேளீர், கொள்ளிடக்கரை முத்தரையர்கள், தஞ்சை தலைநகர் ஆட்சி என்ற அதே மரபை பின்பற்றி கொடும்பாளூர் சோழர்கள், தஞ்சை தலைநகர் ஆட்சி (முத்தரையர்கள் - பிற்கால சோழர்கள்) எனும் அரசாட்சி ஒற்றுமை சிறந்த ஆதாரமாக இருக்கிறது.

ஆதாரம் :


  பொன்னியின் செல்வன், சோழ மண்டல சதகம், வேங்கையின் மைந்தன், ரேநாட்டு கல்வெட்டுகள், கட்டிடக்கலைகளும் ஓர் சான்றாகும்.

மேலும் பல கல்வெட்டுகள் மறைக்கப்பட்டும், சிதைக்கப்பட்டும் உள்ளது.

இன்னும் ஏராளமான வரலாற்று ஆதாரங்கள் இதுவரை பலர் எழுதிய புத்தகங்களில் சோழர்கள், முத்தரையர்கள் பற்றிய வரலாற்று கூற்றுகளிலே தெளிவாக ஆராயப்படாமல் உள்ளன.

உண்மையில் வரலாறு முற்றிலும் அழியவில்லை....!

கயவர்களால் அழிக்கப்படுகிறது....!

சில வரலாறு ஆய்வாளர்களின்  கற்பனை, அவர்களின் சுயசாதி பற்று, அரசியல் மாற்றங்கள், காலநிலை இயற்கை சீற்றங்கள் ஆகிய காரணங்களால் மேலும் பல அழிந்துள்ளன... 

முத்தரையர் சோழர் வரலாற்றிற்கு முரணாக திணிக்கப்பட்டுள்ளன என்பதே மறுக்கமுடியா உண்மை.

சோழர் & முத்தரையர்கள்
போர்களில் மோதவில்லையே -

 ஏன் ?

    சோழர் மற்றும் முத்தரையர் அரசாட்சி பெயர் வேறுபாட்டையும், உண்மையான வரலாறு சுவடுகளை கண்டறிய முடியாத கற்பனை வரலாற்று குழப்பத்தையும் வைத்து இன்றளவும் தமிழ் மன்னர்களின் வரலாறு மறைக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் வருகிறது.

வரலாற்று குழப்பத்தை ஏற்படுத்திய ஆசிரியர்களும் பிற்கால சோழர்கள் பற்றி எதுவுமே தெளிவாக எடுத்துரைக்கவில்லை..



முத்தரையர் மற்றும் பிற்கால சோழர்கள் எவரும் போர்களில் மோதிக்கொண்டதாக வரலாறு இல்லை.. காரணம் இருவரும் ஒரே மரபை சார்ந்த மன்னர்கள்..

அதனால் தான் கரிகால் சோழ குழுவினரான சூரிய முத்தரையர் என்ற கல்வெட்டு செய்தியும், ரேநாடு சோழராக அறியப்பட்ட மன்னர் தம் பெயருடன் முத்துராஜா என அடையாளம் செய்துள்ளதும், தன்னை கரிகால் சோழன் மரபினர் என பல கல்வெட்டுக்களின் மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது.

வரலாறு குறிப்புகள் கூறுவது முத்தரையர் மற்றும் சோழர்கள் சூரிய குலத்தை சேர்ந்தவர். ஒரே வம்ச மன்னர்கள் ஆவர்.

முத்தரையர் அரசாட்சி, பிற்கால சோழர் அரசாட்சி என இரு வேறுபட்ட வரலாறு சுவடுகளினாலும், சில கற்பனை வரலாறு கூற்றுகளாலும் தான் அதிக வரலாற்று குழப்பம் ஏற்பட்டுள்ளது.. 

இதற்கு காரணம் உண்மையான வரலாறு மறைக்கப்பட்டு கற்பனைவாதிகளின் வரலாறு இன்றளவும் படிப்பதே பிழையானது..

விஜயாலய சோழன் முத்தரையர்களை போரிட்டு வெல்லவும் இல்லை.. கி.பி. 850 ல் தஞ்சையை கைப்பற்றினான் என்பது தவறு.. வரலாற்று ஆசிரியர்கள் கூறும் அந்த போர் கி.பி. 872ல் நடந்தது.. அது பாண்டியர் பல்லவர் போர்.. அப்போது விஜயாலய சோழர் மகன் முதலாம் ஆதித்த சோழனின் ஆட்சி காலம்..

திருப்புறம்பியம் போர் ஒன்றை வைத்தே தவறான வரலாற்று மூடர்கள் சோழர் முத்தரையர் வரலாற்றில் குழப்பத்தை உருவாக்கியுள்ளனர்..

கி.பி. 850 முத்தரையர் மரபு வாரிசாக விஜயாலய சோழன் தஞ்சையில் அரியணை ஏறினார் என்பதே மறுக்கமுடியாத உண்மை வரலாறு.

சோழர்கள் வேறு முத்தரையர் வேறு என கூறியவர்களிடம் சில கேள்விகள் :


1. கி.பி. முதலாம் நூற்றாண்டிலேயே கரிகால் சோழனில் பல போர் வெற்றிகளில் சோழர் நாடாக கூறப்பட்ட எல்லைகளை எப்படி முத்தரையர் நாடு என வரலாற்றில் கூறப்பட்டது ??.

2. கரிகால் சோழனுக்கு பிறகு எந்த சோழ மன்னரை தோற்கடித்து முத்தரையர் மன்னர்கள் முத்தரையர் அரசாட்சியை நிறுவினர் ...?

3. சோழப்பேரரசை முத்தரையர் எனும் குறுநில மன்னர்கள் எப்படி வீழ்த்தினர்..?? அவ்வாறெனில் பேரரசை வீழ்த்திய வீரமிக்க முத்தரையர் மன்னர்களை ஏன் அவ்வாறு குறிப்பிடவில்லை ..?

4. சோழ தேசத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்து சோழர் பெயர் தடையமே இல்லாமல் கி.பி. 5 முதல் கிபி.10 நூற்றாண்டு வரை எப்படி முத்தரையர்களால் ஆள முடிந்தது...?.



5. முத்தரையர் அரசாட்சியான 4 நூற்றாண்டுகளில் ஏன் ஒருமுறை கூட முத்தரையர் மீது சோழர் மரபு மன்னர் எவருமே போர்தொடுக்கவில்லை ..??.

6. சோழர் மற்றும் முத்தரையர் மன்னர்கள் போர்களில் மோதிக்கொண்ட வரலாறு கல்வெட்டுகள் ஒன்றுகூட இல்லையே ஏன்....???

7. கரிகால் சோழன் மரபாக முத்தரையர் மன்னர்களின் கல்வெட்டுகள் கூறுகின்றன .... அதன் அர்த்தம் என்ன..??

8. சோழர்கள் மற்றும் முத்தரையர் மன்னர்கள் இருவரும் வெவ்வேறு மரபு எனில் சோழர் -சூரிய குலம், முத்தரையர் -சூரிய குலம் எனும் வரலாற்று ஒத்துமை எப்படி ??

9. கரிகால் சோழன் வரலாறும், முத்தரையர் மன்னர் வரலாறும் மீனவ (வலையர்) வரலாற்றோடு ஒன்றியுள்ளதே.... அது எப்படி..??

10. விஜயாலய சோழன் எங்கிருந்து வந்தான்..?? எப்படி தஞ்சையை கி.பி. 850 கைப்பற்றி அரியணை ஏறினான்..??

11. முத்தரையர் மன்னர் கட்டிய கோயிலை சீரமைத்து விஜயாலய சோழீஸ்வரம் என வரலாற்றில் அழியா சின்னத்தை உருவாக்க அவசியம் என்ன...??

12. முத்தரையர் மன்னரிடம் விஜயாலய சோழன் போரிட்டு தஞ்சை கைப்பற்றிய வரலாற்று செய்தியை எந்த கல்வெட்டு கூறுகிறது...??

13. திருப்புறம்பியம் போரில் தான் தஞ்சை மீட்கப்பட்டது எனில் அந்த போர் நடந்த வருடம் எது...??? அப்போதைய சோழ மன்னன் முதலாம் ஆதித்தன் கல்வெட்டு செய்தி எங்கே....??? 

14. திருப்புறம்பியம் போர் கி.பி. 871 -872 ஆண்டில் நடந்ததாக வரலாறு கூறுகிறது.. அப்படியானால் கி.பி. 850 ஆண்டில் தஞ்சையை கைப்பற்றி எப்படி அரியணை ஏறி தஞ்சைக்கு மன்னர் ஆனார் விஜயாலய சோழன்...?? 

15. ரேநாட்டு சோழர்கள் என்று வரலாற்றில் கூறப்படும் மன்னர்கள் ஏன் தம் பெயருடன் முத்துராஜா, முத்தரையர் என கல்வெட்டுகளில் குறிப்பிட்டுள்ளனர்...???

16. விஜயாலய சோழனின் மூதாதையர் யார்....? அவர் எந்த மரபை சார்ந்தவர்...??அவருக்கு முடிசூட்டிய மன்னர் யார்..??

இன்னும் ஏராளமான கேள்விகள் உள்ளன... இவை அனைத்திற்கும் வரலாற்று விடயம் ஒன்று சரியாக கிடைக்கும் எனில் நிச்சயம் உண்மை வரலாறு அனைவராலும் அறிந்து கொள்ள முடியும்.

வரலாற்று ஆய்வாளர்கள் சோழர் வரலாற்று குழப்பத்தை தகர்த்து, உண்மையான வரலாற்றை வெளிக்கொண்டுவர வேண்டும். முயற்சி செய்யுங்கள்.....!

வரலாற்றை நடுநிலையோடு ஆராய்ந்து நன்கு படித்து அறிந்தோர்களுக்கு தெரியும் உண்மை வரலாறு


نوفمبر 20, 2021

முத்தரையர் குல மாமன்னர் திருமங்கை ஆழ்வார் வரலாறு

 முத்தரையர் குல மாமன்னர் திருமங்கை ஆழ்வார்  வரலாறு


முத்தரையர் குல மாமன்னர் திருமங்கை ஆழ்வார் 


திருமங்கையாழ்வார்  சோழ நாட்டில் திருவாலி திருநகிரிக்கு மிக அருகிலே உள்ள திருக்குறையலூரில் பிறந்தார். சோழ முத்தரையர் மன்னர்கள் மற்றும் பரமேசுவரன், நந்திவர்மன் போன்ற பல்லவ மன்னர்களைப் பற்றிய குறிப்புகள் இவர் பாடல்களில் இருப்பதால் இவரை எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்தவர் என்று வரலாறுகூற்று எடுத்துரைக்கிறது.


நள வருஷத்தில் கார்த்திகை மாதம் பௌர்ணமியும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த தினத்தில் அவதரித்தவர். இவர் அரசகுல மரபினரான முத்தரையர் வம்சவழியில் பிறந்ததாக குறிப்புகள் உள்ளன. 

கல்வெட்டு : (முத்துராஜகுல திருமங்கை ஆழ்வார்).


   இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் நீலன். இளம் வயதிலே போர்த் திறமைகளுடன் விளங்கினார். தந்தைக்குப் பின் தமது சோழ முத்தரையர் மரபு மன்னனின் சேனாதிபதியாக அமர்ந்து பல போர்களில் வெற்றி பெற்று பரகாலன் (எதிரிகளின் எமன்) என்ற பெயர் பெற்றார். இவருடைய வீரத்துக்குப் பரிசாக முத்தரைய சோழ மன்னன் இவரைத் திருமங்கை நாடு என்னும் குறுநிலத்திற்கு அரசனாக முடி சூட்டினார்.


ஆழ்வார்களிலேயே மிகவும் சிறப்புடையவர் திருமங்கை மன்னன். ஆழ்வார் பாடல்கள் நம் ஆலயங்களின் பழமையை நிரூபிக்கும் சரித்திரச் சான்றுகளாக உள்ளன.


திருமங்கை மன்னரும் 


வைணவ காதலும்


இறைப்பணி கடமையை நிறைவேற்ற யாசகமும் கைக்கொடுக்காதப்படியால் களவாடியாவது அடியார்களுக்கு தினமும் அன்னம் இடுவதையும், திருவரங்கத் திருக்கோயிலின் கைங்கரியங்களையும் செய்ய எண்ணினார். இதனால் திருடன் (கள்வன்-கள்ளன்) வேடம்தரித்து செல்வந்தரிடம் கள்ளனாக சென்று செல்வங்களை  களவாடினார். இச்செயலை மெச்சி, இறைவனே இவர் களவாடும் பாதையில் வந்து, இவரை ஆட்கொண்டதோடு வேண்டிய செல்வங்களையும் கொடுத்தருளினார்.


திருமங்கை ஆழ்வாரின் வாழ்க்கை வரலாறு :


     திருமாலின் சார்ங்கம் என்ற வில் - அம்சமாக பிறந்தவர். அரசகுடி மன்னனாகப் பிறந்து பக்தி மார்க்கத்தில் திளைத்தவர். பெற்றோர்கள் இவருக்கு நீலன் என்று பெயரிட்டனர். இவரது வீரத்தில் மகிழ்ந்த சோழ மன்னன், நீலனை தன் படைத்தளபதி ஆக்கியதுடன், தம் மரபு என்பதால் திருவாலி நாட்டின் மன்னனாகவும் ஆக்கினான். அமங்கலை என்ற தேலோக கன்னி, கபில முனிவரின் சாபத்தால் பூமியில் குமுதவல்லி நாச்சியார் என்ற பெயரில் வளர்ந்து வந்தாள். இவளது புகழையும், அறிவையும் கேள்விப்பட்ட திருமங்கைஆழ்வார் இவளைத்திருமணம் செய்ய விரும்பினார். 


விஷ்ணுவின் பக்தையான குமுதவல்லியோ தன்னை திருமணம் செய்ய வேண்டுமானால் தினமும் ஆயிரத்தெட்டு வைணவர்களுக்கு அமுது படைக்க வேண்டும் என்ற நிபந்தனை விதித்தாள். நிபந்தனையின் பேரில் அமுது படைத்து, படைத்து அரண்மனையின் நிதி நிலை சரிந்தது. பேரரசின் வழக்கமாக  கப்பம் கேட்டு வந்த ஏவலர்களிடம் தன் நிலையை கூறி அனுப்பி விட்டார். அவமதித்ததாக எண்ணி கோபமடைந்த முத்தரையச்சோழ மன்னன் அமைச்சர்களுடன் தன் படையை அனுப்பி ஆழ்வாரை பிடித்து வரும்படி கூறினான். 


ஆனால் அனைவரும் திருமங்கை மன்னரான நீலனால் விரட்டியடிக்கப்பட்டனர். எனவே மேலும் தமது ஆழ்வாரின் வீரத்தை பரிசோதிக்க எண்ணி சோழ மன்னனே பெரும் படையுடன் சென்றான். ஆனாலும் ஆழ்வார் அவர்களுக்கு எதிராக வாள்ஏந்தி நின்றார். ஆழ்வாரின் வீரத்தில் மகிழ்ந்த சோழநாட்டு சக்ரவர்த்தி அவரிடம் நேரில் சென்று பேச்சுப்படி கப்பம் கட்டுவதே சிறந்தது. அதுவரை அரசமரபு வாக்கு தவறியதால் என் கைதியாக கோயிலில் தங்கியிரு என்றார். 


சோழ மன்னன் கூறியபடி ஆழ்வாரும் மூன்றுநாட்கள் எதுவும் சாப்பிடாமல் கோயிலில் தங்கியிருந்தார். பசி மயக்கத்தில் தூங்கிய ஆழ்வாரின் கனவில் தோன்றிய காஞ்சிபுரத்து பெருமாள். தன் சேவைக்கு வந்தால் அவரது கடன் தீர்க்கும் வகையில் பொருளுதவி செய்வதாக கூறினார். தமது சோழ மன்னனின் அனுமதிபெற்று படையினருடன் காஞ்சிபுரம் சென்ற ஆழ்வார், பெருமாள் கூறிய இடத்தில் தோண்டவும், பெரும் புதையல் இருந்தது. அதை எடுத்து மக்கள் நலனுக்கான சோழ பேரரசுக்குரிய கடனை அடைத்து விட்டு மீதியை அமுது படைக்க வைத்துக்கொண்டார்.

இதையறிந்த சோழ மன்னன் ஆழ்வாரைப் பணிந்து, பணத்தை திருப்பிக்கொடுத்து அமுது படைக்கவைத்துக் கொள்ள கூறினார். இந்தப்பணமும் தீர்ந்து போகவே, ஆழ்வார் தன் அமைச்சர்களுடன் பணக்காரர்களிடம் கொள்ளையடித்து அமுதுபடைத்து வந்தார். ஒரு முறை நாராயணன் லட்சுமி தேவியுடன் மணக்கோலத்தில் வந்தார். 


ஆழ்வார் தன் படையினருடன் அவர்களை மிரட்டி அவர்களது நகைகளை பெற்றுக்கொண்டார். ஆனால் தன் கால் விரல் மோதிரத்தை மட்டும் நாராயணன் கழட்டவில்லை. ஆழ்வாரும் மோதிரத்தை கழட்டும்படி கூறியதற்கு, என்னால் முடியவில்லை முடிந்தால் நீயே கழட்டிக்கொள் என்றார் நாராயணன். அதேபோல் ஆழ்வாரும் குனிந்து தன் பற்களால் விரலைக்கடித்து மோதிரத்தை இழுத்தார். அப்போது நாராயணன் ஆழ்வாரின் காதுகளில் நாராயண மந்திரத்தை உபதேசித்தார்.

வந்திருப்பது நாராயணன் என்பதை அறிந்த ஆழ்வார் மண்டியிட்டு பெருமாிடம் சரணடைந்தார். 


மன்னன் ஆழ்வார் அவரது இறைப்பணி மற்றும் எந்நிலையிலும் கைவிடாத பக்தியும் எம்பெருமானின் மனதையும் வருடிய கள்வனாக நீங்கா புகழுடன் நிலைத்து போற்றப்படுகிறார்.


:


    பெருமாளின் 108 திருப்பதிகளில் திருமங்கை ஆழ்வார் தனியாக சென்று 46 கோயில்களையும், மற்ற ஆழ்வார்களுடன் சேர்ந்து 36 கோயில்களையும் என மொத்தம் 82 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார். 12 ஆழ்வார்களில் இவர்தான் அதிக பெருமாள் திருத்தலங்களை மங்களாசாசனம் செய்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது வரலாற்றில் ஒரு சிறப்பு என்னவென்றால் இவர் மொத்தம் 82 பெருமாள் கோயில்களை மங்களாசாசனம் செய்திருந்தாலும், தான் பிறந்த சொந்த ஊரான திருக்குறையலூரில் உள்ள பெருமாள் கோயிலை மங்களாசாசனம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


திருமங்கை ஆழ்வார் தனியாக சென்று மங்களாசாசனம் செய்த கோயில்கள்-46.


1. திருப்புல்லாணி (அருள்மிகு கல்யாண ஜகன்னாதர் திருக்கோயில், திருப்புல்லாணி, ராமநாதபுரம்)


 

2. திருமயம் (அருள்மிகு சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில், திருமயம், புதுக்கோட்டை)

3. திருக்கரம்பனூர் (அருள்மிகு புரு÷ஷாத்தமன் திருக்கோயில், உத்தமர் கோயில், திருச்சி)

4. கண்டியூர் (அருள்மிகு ஹரசாப விமோசனர் திருக்கோயில், கண்டியூர், தஞ்சாவூர்)

5. நைமிசாரண்யம் (அருள்மிகு தேவராஜர் திருக்கோயில், நைமிசாரண்யம், உ.பி.)

6. ஜோதிஷ்மட், திருப்பிரிதி(அருள்மிகு பரமபுருஷர் திருக்கோயில், நந்தப்பிரயாக், உ.பி.)

7. சிங்கவேள்குன்றம் (அருள்மிகு பிரகலாத வரதன்,நரசிம்மர் திருக்கோயில், அகோபிலம், கர்நூல், ஆந்திரா)

8. திருஎவ்வுள் (அருள்மிகு வீரராகவ பெருமாள் திருக்கோயில், திருவள்ளூர்)

9. தின்னனூர் (அருள்மிகு பக்தவத்சல பெருமாள் திருக்கோயில், திருநின்றவூர், திருவள்ளூர் மாவட்டம்)

10. திருத்தண்கா (அருள்மிகு விளக்கொளி பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்)

11. திருப்பரமேஸ்வர விண்ணகரம் (அருள்மிகு பரமபதநாதன் திருக்கோயில், திருப்பரமேஸ்வர விண்ணகரம், காஞ்சிபுரம்)

12. திருப்பவள வண்ணம் (அருள்மிகு பவள வண்ணர் திருக்கோயில், திருப்பவள வண்ணம், காஞ்சிபுரம்)

13. திரு நீரகம் (அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில்) காஞ்சிபுரம்

14. திரு காரகம் (அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில்) காஞ்சிபுரம்

15. திருக்கார் வானம் (அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில்) காஞ்சிபுரம்

16. திருக்கள்வனூர் (அருள்மிகு ஆதிவராக பெருமாள், கள்வப்பெருமாள் திருக்கோயில்கள், திருக்கள்வனூர், காமாட்சி அம்மன் கோயிலுக்குள் உள்ள சன்னதி, காஞ்சிபுரம்)

17. நிலாத்திங்கள் துண்டான் (அருள்மிகு சந்திர சூடப் பெருமாள் திருக்கோயில், நிலாத்திங்கள் துண்டான், ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குள் உள்ள சன்னதி, காஞ்சிபுரம்)

18. திருப்புட்குழி (அருள்மிகு விஜய ராகவப் பெருமாள் திருக்கோயில், திருப்புட்குழி, காஞ்சிபுரம்)

19. திருவஹீந்தபுரம் (அருள்மிகு தெய்வநாயகன் திருக்கோயில், திருவகிந்திபுரம், கடலூர்)

20. காழிச்சீராம விண்ணகரம் (அருள்மிகு திரிவிக்ரமன் திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம்)

21. திருக்காவளம்பாடி (அருள்மிகு கோபாலகிருஷ்ணன் திருக்கோயில், திருக்காவளம்பாடி, திருநாங்கூர், நாகப்பட்டினம்)


 

22. திருவெள்ளக்குளம் (அருள்மிகு ஸ்ரீ நிவாசன் திருக்கோயில், திருவெள்ளக்குளம், திருநாங்கூர், நாகப்பட்டினம்)

23. கீழைச்சாலை (அருள்மிகு தெய்வநாயகன் திருக்கோயில், திருத்தேவனார் தோகை, திருநாங்கூர், நாகப்பட்டினம்)

24. திருப்பார்த்தன் பள்ளி (அருள்மிகு தாமரையாள் கேள்வன் திருக்கோயில், திருப்பார்த்தன் பள்ளி, திருநாங்கூர், நாகப்பட்டினம்)

25. திருமணிக்கூடம் (அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயில், திருமணிக்கூடம், திருநாங்கூர், நாகப்பட்டினம்)

26. மணிமாடக் கோயில் (அருள்மிகு நாராயணன் திருக்கோயில், மணிமாடக் கோயில், திரு நாங்கூர், நாகப்பட்டினம்)

27. அரியமேய விண்ணகரம் (அருள்மிகு குடமாடு கூத்தன் திருக்கோயில், அரியமேய விண்ணகரம், திரு நாங்கூர், நாகப்பட்டினம்)

28. வன் புருத்÷ஷாத்தமம் (அருள்மிகு புருத்÷ஷாத்தமன் திருக்கோயில், வன் புருத்÷ஷாத்தமம், திரு நாங்கூர், நாகப்பட்டினம்

29. திருத்தேற்றி அம்பலம் (அருள்மிகு செங்கண்மால் திருக்கோயில், திருத்தேற்றி அம்பலம், திரு நாங்கூர், நாகப்பட்டினம்)

30. வைகுந்த விண்ணகரம் (அருள்மிகு வைகுண்டநாதன் திருக்கோயில், வைகுந்த விண்ணகரம், திரு நாங்கூர், நாகப்பட்டினம்

31. செம்பொன் சேய் கோயில், (அருள்மிகு பேரருளாளன் திருக்கோயில், செம்பொன்சேய் கோயில், திரு நாங்கூர், நாகப்பட்டினம்)

32. தலைசிங்க நான்மதியம் (அருள்மிகு நாண்மதியப் பெருமாள் திருக்கோயில், தலைச்சங்காடு, நாகப்பட்டினம்)

33. இந்தளூர் (அருள்மிகு பரிமள ரங்கநாதர் திருக்கோயில், திருஇந்தளூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம்)

34. தேரழுந்தூர் (அருள்மிகு தேவதிராஜன் திருக்கோயில், தேரழுந்தூர், நாகப்பட்டினம்)

35. திருச்சிறுபுலியூர் (அருள்மிகு அருள் மாகடல் திருக்கோயில், திருச்சிறுபுலியூர், திருவாரூர்)

36. நாகை (அருள்மிகு நீலமேகப் பெருமாள் திருக்கோயில், நாகபட்டினம்)

37. திருக்கண்ணங்குடி (அருள்மிகு லேகநாதப் பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணங்குடி, திருவாரூர்)

38. திருக்கண்ண மங்கை (அருள்மிகு பக்தவத்ஸலப் பெருமாள் திருக்கோயில், திருக்கண்ண மங்கை, திருவாரூர்)

39. திருச்சேறை (அருள்மிகு சாரநாதன் திருக்கோயில், திருச்சேறை, தஞ்சாவூர்)

40. திருநறையூர் (அருள்மிகு திருநறையூர் நம்பி திருக்கோயில், திருநறையூர், தஞ்சாவூர்)

41. திருவெள்ளியங்குடி (அருள்மிகு கோலவல்வில்லி ராமன் திருக்கோயில், திருவெள்ளியங்குடி, தஞ்சாவூர்)

42. நந்திபுர விண்ணகரம் (அருள்மிகு ஜகந்நாதன் திருக்கோயில், நந்திபுர விண்ணகரம், நாதன் கோயில், தஞ்சாவூர்)

43. ஆதனூர் (அருள்மிகு ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில், ஆதனூர், தஞ்சாவூர்)

44. திருப்புள்ளபூதங்குடி (அருள்மிகு வல்வில் ராமன் திருக்கோயில், திருப்புள்ளபூதங்குடி, தஞ்சாவூர்)

45. திருக்கூடலூர் (அருள்மிகு வையம் காத்த பெருமாள் திருக்கோயில், திருக்கூடலூர், தஞ்சாவூர்)

46. திருக்கோழி (அருள்மிகு அளகிய மணவாளர் திருக்கோயில், உறையூர், திருச்சி.


திருமங்கை ஆழ்வார் அருளியவை :


 

1. பெரிய திருமொழி (1084 பாசுரங்கள்)

2. திருக்குறுந்தாண்டகம் (20 பாசுரங்கள்)

3. திருநெடுந்தாண்டகம் (30 பாசுரங்கள்)

4. திரு எழு கூற்றிருக்கை ( 47 பாசுரம்)

5. சிறிய திருமடல் (155 பாசுரங்கள்)

6. பெரிய திருமடல் (297 பாசுரங்கள்).


   எனும் ஆறு திவ்வியப் பிரபந்தங்களில் 1351 பாசுரங்கள் அருளியுள்ளார். இவற்றுள் பல யாப்பு வடிவங்களைப் பயன்படுத்தி உள்ளார்.


ஆழ்வாரின் தனி சிறப்புகள் :


♦ பல்வேறு யாப்பு வடிவங்களைப் பக்தி இலக்கியத்திற்குப் 

பயன்படுத்திக் கொண்டார்.


♦ நாட்டுப்புறப்பாடல் வகைகளைப் பின்பற்றி, பக்தி 

நெறியைப் புலப்படுத்தினார்.


♦ சித்திரகவி படைத்துப் பக்தி உலகுக்கு வளம் சேர்த்தார்.


♦ தாண்டகங்கள் அருளி அவற்றுள்ளும் நாயகநாயகி 

பாவத்தை அருளினார்.


♦ அகப்பொருள் துறையைப் பயன்படுத்திக் கொண்ட 

ஆழ்வார் நாயகி நிலையில் இருந்து பாடியிருப்பவை 

பக்தியின் முதிர்கனிகள் ஆகும்.


♦ மடல் துறைவழி ஓர் புதிய இலக்கிய வகையைப் படைத்த 

பெருமைக்கு உரியவர்.


♦ பக்தி இலக்கியத்தை, பக்தி இயக்க இலக்கியம் ஆக்கி, 

தமிழ் வளத்துக்கும் இலக்கிய வகைப் பெருக்கத்திற்கும் 

வித்திட்டவர்.


♦ இறைவன் கோயிலில் எழுந்தருளி இருக்கும் தோற்றத்தில் 

(அர்ச்சாவதாரம்) ஈடுபாடு கொண்டு ஏராளமான 

பாசுரங்களைப் பக்திச் சுவை ததும்பப் பாடிய பெருமைக்கு உரியவர்.


தினம் ஒரு பாசுரம் - 59. 


 ஓதி ஆயிர நாமங்கள் உணர்ந்தவர்க்கு* உறுதுயரடையாமல்*

 ஏதமின்றி நின்றருளும் நம்பெருந்தகை* இருந்த நல் இமயத்து*

 தாது மல்கிய பிண்டி விண்டு அலர்கின்ற* தழல்புரை எழில் நோக்கி*

 பேதை வண்டுகள் எரியென வெருவரு* பிரிதி சென்றடை நெஞ்சே

பெரிய திருமொழி. 

(திருமங்கை ஆழ்வார்).


திருமங்கை ஆழ்வாரும் - அவதரித்த முத்தரையர் மரபும் :

         

       ஆழ்வார்களில் தனித்தோர் சிறப்புமிக்க திருமங்கை ஆழ்வார் திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் திருப்பணி முடித்து முத்தரசன் குறடு என்று ஆயிரங்கால் மண்டபம் எடுப்பித்து வரலாற்று புகழ்போற்றினார். இன்றும் திருமங்கை ஆழ்வார் வம்ச வழி முத்தரையர் மக்கள் தம்குல அரையர் சேவை (ராஜ) வழிபாடும்,  வேறுபரி நிகழ்வும் வருடந்தோறும் சிறப்பாக நடத்தி வருகின்றனர்.


பெருமளவில் முத்தரையர்கள் கண்ணப்பர் வழி சிவ கோத்திரம் வழிபாடும், திருமங்கை ஆழ்வார் மரபில் விஷ்ணு பெருமாள் கோத்திரம் என்று இருவேறுபட்ட வழிபாட்டினை கொண்டுள்ள அரசகுடி மக்கள் என்பது நமது பெருமைக்குறிய ஒன்றாகும்.


முத்தரையர் மரபு மன்னர்கள் பல சிவவழிபாடு தளங்களை கட்டினாலும், திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் திருப்பணி, புதுகை - திருமயம் பெருமாள் கோயில் மூலம் வைணவத்தையும் ஆதரித்தும் வழிபட்டும் தளங்களை அமைத்துள்ளனர் என்பது சிறப்புக்குறியது.


திருமங்கை ஆழ்வார் முத்தரையரே என்பதற்கான ஆதாரம்.


1. ஸ்ரீரங்கத்தில்  திருமங்கை ஆழ்வார் அவர்கள் ஆயிரங்கால் மண்டபத்தை கட்டி அதற்கு அவர் பிறந்த முத்தரையர் இனத்தின் பெயரால்  *முத்தரசன்குறடு* என்றே பெயர் வைத்தார் முத்துராஜகுல திருமங்கை ஆழ்வார்.


2. மேலும் ஸ்ரீரங்கம் வேடுபரி திருவிழாவில் திருமங்கை ஆழ்வார் முத்தரையர்  வழிவந்த திரு.பெரியண்ணன் முத்தரையர் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் அறங்காவல்துறையால்  ஆண்டுதோறும் சிறப்பு மரியாதை  செய்யப்படுகிறதே தவிர, வேறு எந்த இனத்தாருக்கும் செய்யப்படவில்லை.


 


3. இதேபோல் திருமங்கையாழ்வார் பிறந்த ஊரான திருவாலி நாட்டில்,  தற்போதைய நாகை மாவட்டம்  வேதராஜபுரத்தில்  கருடசேவை நிகழ்ச்சியின் போது திருநகரிலிருந்து அவர் பிறந்த திருநாங்கூருக்கு கொண்டுவந்து  தங்க வைத்து தீர்த்தவாரி நடைபெருகிறது.


4. பழங்காலம் தொட்டு இன்றுவரை திருமணங்கொல்லை எனும் கிராமத்தில் பங்குனி மாதம் வேடுபரி விழா நடத்தப்படுகிறது.  இவ்விழாவில் முத்தரையர்களுக்கு பரிவட்டம் கட்டி கோவில் மரியாதை செய்யும் வழக்கம் உள்ளது. இந்த விழாவில் திருமங்கை ஆழ்வாரை தூக்கி செல்லும் உரிமை முத்தரையர்களுக்கு மட்டுமே என்பது குலமரபுச் சான்றாக உள்ளது.


5. இதேபோல காஞ்சி வரதராஜ பெருமாள்கோவிலில் வேடுபரி நிகழ்ச்சி நடைபெருகிறது.  இவ்விழா தொன்று தொட்டு இன்றுவரை வைகாசி மாதம் நடைபெறுகிறது. இங்கேயும் முத்தரையர்களுக்கு பரிவட்டம் கட்டி கோவில் மரியாதை செய்யப்படுகிறது.


6. இந்நிகழ்ச்சியின் போது நான்கு நாட்களில் 30 கி.மீ தூரம் வரை, திருமங்கை ஆழ்வாரைத் தூக்கி சென்று சேர்ப்பதை முத்தரையர்கள் மட்டுமே முழு உரிமையுடன் செய்கின்றனர்.


இங்கு தங்களால் கட்டப்பட்ட மண்டபத்திற்க்கு "ஸ்ரீதிருமங்கை மன்னனவதரித்த முத்துராஜ குல பாளையக்காரர் மண்டபம் "  என கல்வெட்டி பெயர் பொறித்துள்ளனர்.

இந்நடைமுறைகளின் மூலம் திருமங்கை ஆழ்வார் "முத்தரையர்" என உறுதியாகிறது.


ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழாவில் ஏராளமான முத்தரையர்கள் கலந்து கொள்கின்றனர்.

இங்கே முத்தரையர் மண்டகப்படி அன்று வேடுபரி நிகழ்ச்சியை நடத்துகின்றனர்

الجمعة، 6 أغسطس 2021

أغسطس 06, 2021

சூரிய குல முத்தரையர் வம்சத்தினர்

 சூரிய குல முத்தரையர்கள்


சோழ வம்சத்தை தொடங்கி மாபெரும் கல்லனை கட்டியவன் சூரிய குல சோழன் கரிகால் பெருவளத்தான் 🔥.


தஞ்சையை வளமாக்கி தஞ்சை தேசத்தை உருவாக்கியவன் கரிகால் வழியோனன் சூரிய குல சோழன் தனஞ்செய முத்தரையர் 🔥.


களப்பிரர்களிடம் இருந்து சேர , சோழ , பாண்டிய தேசத்தை காப்பாற்றியவன் கரிகால் பெருவளத்தான் பேரன் சூரிய குல சோழன் சுவரன் மாறன் 🔥.


தஞ்சையை தலைநிமிர வைத்து உலகத்தை வியப்படைய செய்து தஞ்சை பெருவுடையார் கோயில் கட்டியவன் சூரிய குல சோழன் அருள்மொழி வர்மன் 🔥.


தன் வீரத்தால் தெற்காசியாவையே கங்கை முதல் கடாரம்வரை ஆட்சி செய்தவன் சூரிய குல சோழன் அருள்மொழி வர்மன் மகன் இராஜேந்திர சோழன் 🔥.


முத்தரையர் குலத்தில் அவதரித்து கயவர் வேடம் அணிந்து திருமாலுக்கு தன் இறைபக்தியை நிறுபித்த சூரிய குல சோழன் திருமங்கையாழ்வார் 🔥 .

الخميس، 5 أغسطس 2021

أغسطس 05, 2021

ரேநாட்டு சோழர்கள் மற்றும் பொத்தப்பி சோழர்கள்

 ரேநாட்டு சோழர்கள் மற்றும் பொத்தப்பி சோழர்கள்


வீடியோ தொகுப்பு:

ரேநாட்டு சோழர்கள் மற்றும் பொத்தப்பி சோழர்கள் தங்களை கரிகால் சோழன் வம்சத்தினர் என்று குறிப்பிட்டுள்ளார்கள் மற்றும் ரேநாட்டு சோழர் தனஞ்சய சோழ முத்துராஜா 5 ஆம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்டதும், களப்பிரர் வருகையால்  பிற்காலத்தில் ஆந்திர பகுதியை  ஆட்சிசெய்தவர் ஆவார்.


தமிழன் எங்கு ஆட்சிசெய்தாலும் தமிழனே...


أغسطس 05, 2021

சோழ முத்தரையர் வரலாறு

 சோழ முத்தரையர் வரலாறு




சோழ முத்தரையர் 🔥 . 

கால பிடாரி சுவரன் மாறன் முத்தரையர் குல தெய்வம் கோவிலுக்கு நிலம் கொடுக்கப்பட்டது 
கொடுத்தவர்  சுந்தர சோழ முத்தரையர்  .

சுந்தர சோழன் இவர் இராஜராஜ சோழனின் தந்தை .இவர் தம்மை முத்தரையர் என்றே தான் அடையாளப்படுத்தியுள்ளார். 

அதாவது முற்கால சோழர்கள் தம்மை கரிகால் சோழன் வம்சத்தினர் என்று அடையாளப்படுத்தினர் . 
முற்கால சோழர்களான தனஞ்செய சோழ முத்தரையர் தம்மை கரிகால் பெருவளத்தான் வம்சாவளி என்றே புன்னியகுமார மலபேடு செப்பேடு மூலம் அறியலாம்.

அதே போல் பிற்கால சோழரான இராஜராஜ சோழன் என்கிற அருள்மொழி வர்மன் தந்தை தம்மை முத்தரையர் என்றே அடையாளப்படுத்தி புள்ளமங்கலம் , பிரமபுரீசுவரர் கோவிலில் கல்வெட்டை வெளியிட்டுள்ளனர் . 

இதன் மூலம் முத்தரையர்களும் சோழர்கள் என அறியலாம் .

1)சுந்தர சோழர் மனைவி 
வானவன் மாதேவி மலையமான் வம்சம்

2) பிள்ளைகள்

1)ஆதித்த கரிகாலன்
 சிறிது காலத்தில் 
கொலைசெய்து விட்டனர்.

2)குந்தவை 

சாளுக்கிய (சந்திர குலம்)மன்னன் 
விமாலாதித்தியனை திருமணம் முடித்து
மீண்டும் சோழர் ஆச்சியை நிறுவியவள் 
பின்னாளில் குலத்துங்க சோழமரபு தோற்றுவிக்கப்பட்டது -தாய் தந்தை குலம் 
உருவாக்கப்பட்டது உபய குலம்மாக...

3)அருன் மொழிவர்மன் பின்னாளில்
ராஜராஜ சோழன்னாக முடிசூட்டி எல்லையில்லா  தரணி ஆண்டவன்
தஞ்சை பெரிய கோவிலை கட்டியவன்
இவனுக்கு பின் சோழர் சாம்ராஜ்யம் மேலோங்கியது.

இங்கு உள்ள வரலாற்று அறிஞர்கள் முற்கால சோழர்கள் பற்றி தான் பேசுவார்களே தவிர பிற்கால சோழர் பற்றி பேசமாட்டார்கள் . 

பிற்கால சோழர்கள் பற்றி பேசினால் முத்தரையர் சோழர் என கூறநேறிடும் என்பதற்காக வரலாறு மறைக்கப்படுகிறது . 

இனி வரும் காலங்களில் வரலாற்றை தெரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் எடுத்துரையுங்கள் .

சோழம் மீண்டும் எழும் . ( முத்தரையர் குடி ) 


الثلاثاء، 20 يوليو 2021

يوليو 20, 2021

கண்ணப்ப நாயனார் ஐராவதேஸ்வரர் கோயில்

 கண்ணப்ப நாயனார் ஐராவதேஸ்வரர் கோயில் 

தானத்தில் சிறந்தது கண் தானம் என்பதை முன்கூட்டியே உலகிற்கு எடுத்துரைத்தவர் கண்ணப்ப நாயனார். ஐராவதேஸ்வரர் கோயில்  மகாமண்டபத்தின் நுழைவாயிலில் எங்கும் காணக்கிடைக்காத கண்ணப்ப நாயனாரின் பெரிய சிற்பம் இருக்கிறது. வில்லுடன் கைக்கூப்பிய நிலையில் உள்ள இவரது இந்த சிற்பம் அற்புதமானது. இவர் காலில் மெல்லிய காலணியுடன் காட்சியளிக்கிறார். காட்டில் வாழ்வதால் அதற்கேட்ற்ப மரபலகையினால் செய்யப்பட்ட காலணியை அணிந்திருப்பது போல் உருவாக்கப்பட்டுள்ளது. கலைஞரின் கூர்ந்த மதி காரணமாக கண்ணப்ப நாயனாரின் காலணியும் இங்கு கவிதை பேசுவதாக உள்ளது.




يوليو 20, 2021

கல்லணை சுற்று பகுதியில் வாழும் முத்தரையர் ஊர்கள்

 கல்லணை சுற்று பகுதியில் வாழும் முத்தரையர் ஊர்கள்


கல்லணை சுற்றி உள்ள முத்தரையர் ஊர்கள்!

1)கல்லணை

2)வேங்கூர்

3)காட்டுகுளம்

4)வளப்பங்குடி

5)கோவிலடி

6)கச்சமங்கலம்

7)தூங்கூர்புதூர்

8)திருவளஞ்சோலை

9)பனையம்புதூர்

10)உத்தமர்சீலி

11)நாட்டுகரை

12)கூகூர்

13)பெரமங்கலம்

14)குரிக்காரன்குளம்

15)அன்பில்

16)சமயபுரம்

17)மஞ்சத்திடல்

18)நாகவரம்

19)உறையூர்

20)தேனீர்பட்டி

21)செம்பட்டு

22)சந்தோஷ்நகர்

23)குண்டூர்

24)சுக்காம்பார்

25)முருக்கூர்

26)சாமினாதபுதூர்

27)திருக்காட்டுபள்ளி

28)வெள்ளாங்குளம்

29)தொகூர்

30)விளங்குடி

31)பாபாகுறிச்சி

32)பொய்யாமணி

33)கௌத்தரநல்லூர்

34)மேலகொண்டையபேட்டை

35)காவுத்தரசன்நல்லூர்

இவ்வூர்கள் கல்லணை சுற்று பகுதியில் முத்தரையர்கள் பூர்வமாக வாழ்ந்துவரும் ஊர்களாகும்.இதில் பல ஊர்கள் விடுபட்டு உள்ளது.கல்லணை சுற்றி 20கிமி இடைவெளியில் இருக்கும் உங்கள் ஊர் பெயர்களை இப்பதில் பதிவு செய்யுங்கள் உறவுகளே...

நன்றி..

செய்தி உதவி:

   ஏ.எஸ்.கலையரசன் அம்பலகாரர்

   முத்தரையர் வரலாறு ஆய்வுக்கூடம்

يوليو 20, 2021

தமிழகத்தில் முத்தரையர் மக்களின் தொகை

 தமிழகத்தில் முத்தரையர் மக்களின் தொகை


தமிழகத்தில் முத்தரையர் மக்களின் தொகை தோரயமாக,

தமிழகத்தில் வரலாறு மற்றும் சாதி பின்புலத்தில் வேறுபட்ட பல்வேறு இனக்குழு மக்கள் வாழ்கின்றனர். அவர்களுள் முதன்மை பெரும்பான்மை சமுதாயமாக முத்தரையர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இன்றைய மாவட்டம் வாரியாக ஒவ்வொரு பகுதியிலும் முத்தரையர் அரசமரபை சார்ந்த வம்சாவளி மக்கள் பல்வேறு சாதி அடையாளத்தில் குறிப்பிடப்பட்டு பெருவாரியான மக்கள் தொகையில் வாழ்கிறார்கள்.

முத்தரையர் அரசாட்சி பரவியிருந்த டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களில் மிக அடர்த்தியான மக்கள் தொகையையும், மற்ற பகுதிகளில் கணிசமாகவும் வாழ்கிறார்கள்.

தமிழகத்தில் மட்டும் சுமார் 2 கோடி மக்கள் தொகையில் முத்தரையர் சமுதாயம் வாழ்வதும், உண்மையான சாதி வாரி புள்ளிவிவரங்கள் மூலமாக அறியமுடியும்.... வாக்காளர் அடிப்படையில் சுமார் 1 கோடி மக்கள் தொகைக்கு அதிகமாக முத்தரையர் சமுதாயம் குறிப்பிடப்படுகிறது.

மாவட்டம் வாரியாக
முத்தரையர் மக்கள் தொகை :
        தமிழ்நாடு முழுவதும் அம்பலக்காரர், சேர்வை, முத்துராஜா, வலையர், முத்தரையர், முத்திரிய நாயுடு, முத்திரிய நாயக்கர் என்று வாழும் முத்தரையர் வம்சாவளியினர் அடிப்படையிலும், சாதி சான்றிதழ் அடிப்படையிலும் முத்தரையர் சமுதாயம் மக்கள் தொகை கணக்கிடப்பட்டுள்ளது.

திருச்சி-70%

புதுக்கோட்டை-70%

சிவகங்கை-60%

தஞ்சை-60%

திண்டுக்கல்-55%

பெரம்பலூர்-55%

அரியலூர்-30%

கரூர்-60%

மதுரை-60%

விருதுநகர்-45%

இராமநாதபுரம்-40%

தூத்துக்குடி-25%

சென்னை-25%

காஞ்சிபுரம்-30%

வேலூர்-40%

நாமக்கல்-30%

கோவை-38%

தேனி-25%

திருவள்ளுர்-22%

திருவாரூர்-52%

நாகப்பட்டினம்-35%

புதுச்சேரி-35%

திருநெல்வேலி-25%

திருப்பூர்-35%

ஈரோடு-35%

விழுப்புரம்-30%

திருவண்ணாமலை-30%

சேலம் 30%.

மற்ற மாவட்டங்களில் முத்தரையர்கள் 10% குறையாமல் மக்கள் தொகையில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த கணக்கெடுப்பு முத்தரையர் சமுதாயத்தில் இருந்து தனித்து வாழும் வேட்டுவர், ஊராளி கவுண்டர் மக்களை தவிர்த்து எடுக்கப்பட்டவை ஆகும்..
( இப்பிரிவுகளையும் சேர்த்தால் கொங்கு மண்டலம் மற்றும் சில மாவட்டங்களில் 5% - 15% வரை கூடுதலாக மக்கள்தொகை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது ).

Mutharaiyar

முத்தரையர் கோரிக்கை :
   தமிழக மக்கள் தொகையில் பெரும்பான்மை சமுதாயமாக வாழும் முத்தரையர்களுக்கு பொருளாதாரம் அடிப்படையிலும், அரசியல் பிரதிநிதித்துவம் அடிப்படையிலும் தனி ஒதுக்கீடுகள் வேண்டும் என்ற நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.

அரசமரபாக போற்றப்பட்ட முத்தரையர் மக்கள் பொருளாதாரம், கல்வியில் நலிவுற்ற நிலையில் உள்ளனர். ஆகையால் மக்கள்தொகை அடிப்படையில் முதுஅரசகுடி மக்களுக்கு தனி உள்இட ஒதிக்கீடு அமைத்தல் சிறந்தது.

✓தமிழக முத்தரையர்களுக்கு பிற்பட்ட பட்டியலிலே 20% தனி இடஒதிக்கீடு வேண்டும்.

✓ முத்தரையர் மக்களுக்கு பெரும்பான்மை அடிப்படையில் உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும்.

இந்திய திருநாட்டின் மத்திய, மாநில அரசுகள் முத்தரையர் மக்களின் வாழ்வுரிமை கோரிக்கைகளை நிரைவேற்றிட முயற்சிக்க வேண்டும்..🙏

சிங்கத்தமிழரின் ஒருமித்த கோரிக்கை வெல்லட்டும்...!
வாழ்த்துக்கள்..!