மூன்று தரை முத்தரையர்கள் வரலாறு
மூன்று தரை முத்தரையர்கள்:
______________________________
சோழ முத்தரையர்(கள்)
_________________________
1.எதிரில்லாதானான சோழ முத்தரையர்:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நாமபுரீஸ்வரர் கோயில் கல்வெட்டில், இக் கோயில் கட்டும்போது பல்வேறு பட்டவர்களுடன் ஆலங்குடி ஊராண்ட "எதிரில்லாதானான சோழ முத்தரையர்" இரண்டு நிலைக் காலைத் தர்மமாக கொடுத்துள்ளதை புதுக்கோட்டை கல்வெட்டு 1037விளக்குகிறது.
2.சேக்கிழான் அரையன்:
தென் ஆற்காடு மாவட்டம் காட்டு மன்னார் கோயிலருகிலுள்ள உடையார்குடி கோயில் கல்வெட்டில், கோ ராசகேசரி வர்மனின் 6வது ஆட்சியாண்டில் மேலப்பழுவூரை சேர்ந்த "சேக்கிழான் அரையன் சங்கர நாராயணனாகிய சோழ முத்தரையன்" நிலம் கொடையளித்துள்ளான் என்று கூறுகிறது.
3.சித்தக்குட்டி மாதவன்:
மதுரை மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் குருவித்துரை கல்வெட்டில் "சித்தக்குட்டி மாதவனான சோழ முத்தரையன்" கல்வெட்டு உள்ளது இவனைப்பற்றி ஏற்கனவே (சத்ரு பயங்கர முத்தரையன் என்ற தலைப்பில் பார்த்திருக்கிறோம்.)
4.முடிகொண்ட சோழ முத்தரையன்:
ஜெயங்கொண்ட சோழபுரம் கல்வெட்டில் ராஜ ராஜனின் 27ஆவது ஆட்சியாண்டில் (கி.பி.1045) கயிறூர் கலியனான "முடிகொண்ட சோழ முத்தரையன்" காணப்படுகிறான். இந்த சோழபுரத்தை காரைக்காட்டு நென்மேலியான ஜெயங்கொண்ட சோழபுரம் என்று கூறுகிறது. இம்முத்தரையன் முடிகொண்ட சோழ முத்தரையன் ஆட்சித் தலைவனாக இருந்தவன். இவனின் மகன்கள் "கலியன் கயிறூர்" மற்றும் "கலியன் வாணியன்" ஆகியோராவார். இவர்கள் இருவரும் ஏதோ ஒரு போரில் இறந்துபட்டதாக தெரிகிறது. இறந்த இவர்கள் ஆன்மா சாந்தியடைய இக்கோயிலில் திருநந்தாவிளக்கு ஒன்று வைத்து, அதன் பராமரிப்பிற்காக 32 பசுக்களை கொடையாக அளித்தூள்ளான். சோழர் காலத்தில் ஆட்சியிலிருந்த முத்தரையர்கள் அரசை இழந்து, ஆட்சி அதிகாரிகளாக மாறியுள்ளனர். இவ்வாறு பதவி இழந்த முத்தரையர்கள், தனது முன்னோர்களின் பெயரை வைத்துக் கொள்கின்றனர். குறிப்பாக விக்கிரமச் சோழ முத்தரையன், விசயாலய முத்தரையன், பராந்தக முத்தரையன், சுந்தர சோழ முத்தரையன், என்ற பெயரில் ஆட்சித் தலைவனாக இருந்துள்ளான். (ஆவணம். இதழ் 2/4/1992 பக்கம் 28.)
5.கருணாகர சோழ முத்தரையன்:
விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை கோயிலில் விக்கிரமச் சோழனின் 12ஆவது ஆட்சியாண்டில் (கி.பி.1129-30)ல் உள்ள கல்வெட்டு தொகுதி 27ல் க.எ.188ல் "கருணாகரச் சோழ முத்தரையன்" பற்றிய செய்தி உள்ளது. இம்முத்தரையனுக்கு "சூற்றிய தேவன்" என்ற பட்டப்பெயரும் இவனது இளைய சகோதரன் "விக்கிரமச் சோழன் மொழக்கன் பள்ளி கொண்டான்" என்ற பெயரிலும் உள்ளான். இவன் மாம்பாக்கம் என்ற இடத்திலே நடைபெற்ற போரில் இறந்துபட்டவன்.
இவர்களால் ஏற்பட்ட பகை, பழி நீங்க அய்யாறன் சாத்தான் என்பவன் திவக்கரை ஆளுடையார் கோயிலில் திரு நொந்தா விளக்கு ஒன்றை வைத்து, விளக்கு எரிப்பதற்காக 32 பசுக்களை
கொடையாக அளித்துள்ளான்.
6.சங்கர நாராயணன் என்ற சோழ முத்தரையன்
இவரைப்பற்றிய கல்வெட்டு
ஒன்று, திருச்சி மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், கோவிந்த புத்தூரில் கோப்பர கேசரியின் 13வது ஆட்சியாண்டு (கி.பி.1025)ல் உள்ளது.
இவர் கோவிந்தப்புத்தூரில் ஸ்ரீ கைலாசநாதர் ஆழ்வார் என்ற கோவிலை கட்டியுள்ளார். இக்கோயிலை பராமரிக்கவும், திருச் சென்னடைபுறம், நெய்யமுது, கறியமுது, வெற்றிலை பாக்குப் படையல், அயனச் சங்கராந்தி, இரண்டுக்கும் விசு இரண்டுக்கும் வைகாசி விசாகமும், நீராட்டுதல், பெருந்திருவமுது செய்யவும், திருப்புகையும், திருச்சந்தனமும், திருவிளக்கு போடவும், அதற்குத்தினம் எண்ணெய் நாழியும் ஆழாக்கு இத்தனையும் குறைவரத் தினசரியும் செய்து வர வேண்டும் என்றும் அதற்காக பட்டர்கள் இவரிடம் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இதற்காக வடகுடி கண்மாயில் நில தானம் கொடுத்துள்ளார். இவர் திருச்சி மாவட்டம் மேலப்பழுவூரைச் சேர்ந்தவர் என்று திரு.நடன காசிநாதன் கூறுகிறார். இச்செய்தி தொகுதி.19 க.எ.331ல் கல்வெட்டை காணலாம்.
7.வேட்டைக்காரன் சோழ முத்தரையன்
வேட்டைக்காரன் சோழ முத்தரையனின் கல்வெட்டுத் தொகுதி S.||.7 க.எண்.105ல் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் பெரிய வயலூரில் உள்ளது.
இக்கல்வெட்டில் இவனின் மகன் "சிய முத்தரையன்" ஆவான் என்கிறது. இந்த சிய முத்தரையனும் மற்றொரு வேட்டைக்காரன் பந்தலும் சேர்ந்து வேட்டைக்கு சென்றுள்ளனர். இந்த பந்தலுவின் தந்தை சேந்த முத்தரையன் ஆவான்.
இவர்கள் சேர்ந்து வேட்டையாடும் போது, சிய முத்தரையனின் அம்பு குறி தவறி தாக்கியதால் பந்தலு முத்தரையன் இறந்துபட்டான். இதனால் இரண்டு குடும்பத்திற்குள்ளும் பகை ஏற்பட்டுள்ளது. இந்த பகையை நீக்கவும் இந்த தவறுக்காகவும், இக்கோவிலில் (ஏதோ ஒரு தர்மம்) செய்துள்ளான்.
8.சுந்தரச் சோழ முத்தரையன்
இந்த சுந்தரச் சோழ முத்தரையன்
பற்றிய கல்வெட்டு தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டம், புல்லமங்கை பசுபதி கோவிலருகில் உள்ளது.
இவனுக்கு "பராந்தக முத்தரையன்" என்ற சிறப்பு பெயரும் உள்ளது. இவன் கிழார்க் கூற்றத்து பில்லமங்கலம் பிரம்மதேயக் கிராமம் திருவாலந்துறை காளாப்பிடாரி கோவில் முன்பாக மக்கள் கூடி 1 1/2 மா நிலத்தை விற்றுள்ளனர்.
இந்நிலத்தை 25 ஈழக் காசுக்கு விற்கப்பட்டுள்ளது. விற்கப்பட்ட நிலம் கண்டமங்கலம் என்ற பிரம்மதேயக் கிராமத்தைச் சேர்ந்தது. இந்த நில விற்பனையின் போது சுந்தர சோழ முத்தரையன் கணக்கனாக இருந்துள்ளான். இக்கல்வெட்டில் பராந்தக முத்தரையன் பெயரும் உள்ளது. (க.தொ.19ல் க.எண்.63ல் உள்ளது.)
9.சேக்கிழான் சக்தி மலையனாகிய சோழ முத்தரையன்
இவனைப்பற்றிய கல்வெட்டு
கோப்பர கேசரி பன்மரின் 3வது ஆட்சியாண்டில் (கி.பி 1125) தஞ்சை மாவட்டம் திருச்சோற்றுத்துறையில் (தொகுதி 19.க.எண்.72,78 மற்றும் 827ல்) காணப்படுகிறது.
இங்குள்ள மகாதேவர்க்கு ஒரு நந்தாவிளக்கு வைத்து எரிப்பதற்கு மேலூர் கோட்டத்து காவனூரில் இருக்கும் இவன் 25பொன் கொடையளித்தான்.
அந்தப் பொன் பரிசோதித்த சுத்தத் தங்கம் என்றும் குறிப்பிடுகிறான். இதே மன்னனின் 2வது ஆட்சியாண்டில் (கி.பி.1124) ராஜாயி ராஜ வளநாட்டு, மேற்கானாட்டு நகரம் வானவன் மாதேவியிலுள்ள காளீஸ்வரமுடையார் மகாதேவர்க்கு ஒரு நந்தா விளக்கும் வைத்துள்ளான்.
இந்த விளக்கை எரிக்க 96 ஆடுகளை என்றென்றும் குறையாத எண்ணிக்கையுடன் பராமரிக்க கேட்டு கல்வெட்டியுள்ளான். இச்செய்தியை க.எண் 827ல் கூறப்பட்டுள்ளது. மேலும் க.எ.72ல் இவன் நில புலன்களை, மாடு, மனை உடைய செல்வம் நிறைந்த ஆநிரை கொண்ட பண்ணையார் என்கிறது.
10.விக்கிரமச் சோழ முத்தரையர்
பு.க.எண் 694ல் விக்கிரமச்
சோழர் பற்றிய கல்வெட்டு ஒன்று
வீர பொக்கன உடையார் காலத்தில் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டத்தில் காணப்படுகிறது. இதில் கூழைக் குளத்தூரில் தட்டான் வகைக்குள் சுவந்திரம் பெறுவதில்
பகை ஏற்பட்டுள்ளது.
இந்த பகையை தீர்க்க கீழைப்புதுவயல் ஊரார்களும், விக்கிரமச் சோழ முத்தரையர்களும் கூடி நியாயம் பேசி தீர்த்து வைத்தனர் என்று இவ்வூரில் இடிந்து கிடக்கும் சிவன் கோயில் கல்வெட்டு தெரிவிக்கிறது..
பேஸ்புக் பதிவு : சிவமாரி அம்பலம்
Muthuraja Network -முத்துராஜா நெட்வொர்க்
ليست هناك تعليقات:
إرسال تعليق