தனுஷ்கோடியின் மைந்தன் நீச்சல்காளி அம்பலம் நினைவுநாள்
இன்று 03/11/2019 தனுஷ்கோடி மைந்தனுக்கு நினைவு அஞ்சலி.
*வணங்குகிறோம் மனித கடவுளை..*🙏🙏🙏🙏😢
தெரிந்துகொள்வோம் பல உயிர்களை காத்த காளி அம்பலத்தின் வாழ்வியல்.
*தனுஷ்கோடியின் மைந்தன் "நீச்சல் காளி அம்பலம்".*
இந்தியாவின் தென்பகுதி எல்லை முடிவில் தனுஷ்கோடியில் பிறந்தவர் நீச்சல் காளி அம்பலம் அவர்கள். இவர் முன்னை தமிழருள் மூத்தவர்கள் என்றழைக்கப்படும் வலையர் எனும் மீனவர்குடியில் பிறந்தவர். வலையர்கள் என்பார் அரசகுடியும், மீனவருமான முத்தரையர் சமூகத்தினர் ஆவர். கடல் தேவதையின் கருணையைப் பெற்றவர் இந்த காளி அம்பலம். இவர் இளம் வயதிலேயே நீச்சலில் அதீத திறமை வாய்ந்தவராக திகழ்ந்தவர். இந்த காளியின் கடலாட்சி, தமிழகத்தின் தென் கிழக்குக் கோடியில் உள்ள தனுஷ்கோடியில் மிக பிரசித்தமானது. மீனவரான காளி அம்பலம் அவர்கள், 60 மற்றும் 70-களில் தனுஷ்கோடி முதல் இலங்கை வரை நான்கு முறை பாக் ஜலசந்தி வழியாக கடலை நீந்திக் கடந்து சாதனைபடைத்தவர்.
"நீச்சல் காளி அம்பலம், 1968-ல் ஒருமுறை பாக் ஜலசந்தியை நீந்திக் கடக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். ராமேஸ்வரம் நகரியம் சார்பில் இந்தபோட்டி நடத்தப்பட்டது.
நீச்சல் காளி தனுஷ்கோடியிலிருந்து ஸ்ரீலங்காவின் (இலங்கை) தலைமன்னார் வரை – 40 கி.மீ தூரம் – வெகு அனாயாசமாக நீந்திக்கடந்துக்கொண்டிருந்தவர் அவர். தனுஷ்கோடியில் குதித்து, 12 இலிருந்து 14 மணி நேரம் இடைவிடாமல் நீந்தி தலைமன்னார் சேர்ந்து, அங்கு இரண்டு மூன்று நாட்கள் இருந்துவிட்டு, மறுபடியும் நீந்தி தனுஷ்கோடி வந்து சேருவாராம். இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. சமீபத்தில் கூட ப்யூலா செளத்ரி என்ற நீச்சல் வீராங்கனை தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னார் வரை நீந்தியிருக்கின்றார். ஜிப்ரால்டர் ஜலசந்தியைக் கூட நீந்திக் கடந்தவர் இந்த ப்யூலா.
ஆனால் இதுபோன்ற நீச்சல் வீரர்களுக்கும், நீச்சல் காளிக்கும் முக்கியமான ஒரு வித்தியாசம் உள்ளது. நீச்சல் வீரர்களோடு கூடவே பாதுகாப்புக்காக விசைப்படகுகளில் ஆட்கள் செல்வார்கள். மின்விளக்கு வசதி, வழிகாட்டுவதற்கு ‘கைட்’ போன்ற எல்லா வசதியும் உண்டும். அதோடு, தண்ணீரிலேயே நீண்டநேரம் இருப்பதால் உடம்பில் சுளுக்கு, பிடிப்பு எதுவும் ஏற்பட்டுவிடாமல் இருக்க உடம்பு பூராவும் ‘க்ரீம்’ தடவிக்கொள்வார்கள் நீச்சல் வீரர்கள்.
இது எல்லாவற்றையும் விட அவர்களுக்குள்ள அதிமுக்கிய வசதி என்னவென்றால், நீந்தமுடியவில்லையென்றால் நீச்சலை ரத்து செய்துவிட்டு படகில் ஏறி அமரலாம். ஆனால் நீச்சல் காளிக்கு இதுபோன்ற வசதிகள் ஏதும் கிடையாது. களைப்பு ஏற்பட்டாலும் நீச்சலை நிறுத்த முடியாது, நிறுத்தினால் மரணம். மூச்சைப் பிடித்துக்கொண்டு தலைமன்னார் வரை நீந்தியே ஆக வேண்டும். இவற்றையெல்லாம் சிறிதும் பொருட்படுத்தாது ஒற்றை ஆளாக 40 கி.மீ கடல் தூரத்தை 14 மணி நேரம் தொடர்ச்சியாக நீந்தி சாதனை படைத்தவர். தனது 80 வயதிலும் முதுமை எண்ணாது ஆழ்கடலில் பாய்ந்து நீந்தக்கூடிய நெஞ்சுரம் கொண்டவர். இதனால் அப்பகுதிகளில் தனித்தோர் மரியாதையுடன் நீச்சல்காளி அழியா புகழ்ப்பெற்றார்.
நீச்சல்காளி அம்பலத்திற்கு இளம் வயதிலேயே பெருமைமிகு அடையாளம் கிடைக்கப்பெற்றது. 1964-ல் ஏற்பட்ட புயலில் கடலுக்குள் சிக்கிய தனுஷ்கோடி நகரத்தின் மக்களை மீட்டு நீச்சல் காளி' மட்டும் தனியொரு ஆளாக பல உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறார். தனது நீச்சல் திறனை பெரிதும் பல உயிர்களை காப்பாற்ற பயன்படுத்தினார். தன்னுயிரையும் பொருட்படுத்தாது வெகுநேரம் கடலில் நீந்தியும், உடல் அயர்வு பாராமலும் மக்கள் பலரை காப்பாற்றியது நீச்சல் காளியின் தனி போற்றுதலுக்கு உரியது.
அந்த கடல்சீற்றத்திற்கு பிறகு அங்குவாழ்ந்த மக்கள் அனைவரும் இராமேஸ்வரம் மற்றும் பிற பகுதிகளில் குடிஅமர்த்தப்பட்டனர். ஆனால் அந்நகரில் மிகுந்த செல்வந்தர்களாய் வாழ்ந்த முத்தரையர் சமூக வலையர்கள் தமது வீடுகள் மற்றும் அடிமட்ட வாழ்வாதாரத்தினை இழந்தும் தனுஷ்கோடியை விட்டு வராமலே சிலர் அங்கேயே தங்கியுள்ளர். இன்றும் அம்மக்களின் குடிசைகளும், நீச்கல்காளி அம்பலத்தின் குடும்பத்தினரும் அப்பகுதியில் உள்ளதை சுற்றுலா செல்லும் பயணிகள் அந்த அவலநிலைகளை பார்க்க முடியும்.
தற்போது அப்பகுதியில் இடிந்து போன, சேதமடைந்த சில கட்டிடங்கள் மட்டுமே புயலின் மிச்சங்களாய் தற்போது இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சோகத்தை நினைவூட்டி வருகின்றன. தனுஷ்கோடி நகரம் அழிந்தபின்பும் நீச்சல் காளி அவர்கள் நான் பிறந்து வளர்ந்த இடம், இந்த இடத்தைவிட்டு நான் வரமாட்டேன். என் கடைசி காலம் வரை இங்கேயே இருப்பேன், இன்னும் எத்தனைப் புயல் வந்தாலும் சந்திப்பேன் என்ற வைராக்கியத்துடன் முதன் முதலில் அங்கேயே தங்கி அந்நகரின் நீங்கா நினைவிலே வாழ்ந்து வந்தார். அங்கு வரும் வரவேற்க்கும் முதல் ஆளாக நின்று மக்களிடம் தனுஷ்கோடியின் வரலாறும், அழிவையும் எடுத்துரைத்து மக்களின் மனதில் தனுஷ்கோடி நகரத்தை அழியாது வாழவைத்தார். அதன்பிறகு அவரது குடும்பத்தினரும் அவருடனே அப்பகுதியில் வாழத்தொடங்கினர்.
தனுஷ்கோடி நகரம் தான் இழந்த பெருமையை மீண்டும் பெறும் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்து வந்த நீச்சல்காளியின் விருப்பம் கடைசிவரை நிறைவேறவில்லை. அந்த கடல் விழுங்கிய தனுஷ்கோடியின் கடைசி சாட்சியாய் நின்ற நீச்சல்காளியும் தன் மனதில் பதிந்த நீங்கா துயரத்திலேயே உயிர்நீத்தார்.
தனக்கென்ற தனி வரலாறு கொண்ட "மனிதகுல மாணிக்கம் நீச்சல் காளி அம்பலம்" அவர்கள் 2010 ஆம் வருடம் நவம்பர் 03 அன்று இறைவனடி சேர்ந்தார்.
இன்றுவரை யார் இந்த நீச்சல் காளி என்பதும், கிருஸ்தவ ஆலயம், இந்து கோயில்களும் நிறைந்த பெருவணிக நகரமாகவும், அக்காலத்திலேயே பிரமாண்ட அஞ்சல் அலுவலக கட்டிடமும், இரயில்வே நிலையமும் கொண்டிருந்த புனித பூமியான தனுஷ்கோடி நகரினை பற்றியும் பெரியளவில் கூறப்படவில்லை.
*"நீச்சல் காளி அம்பலம்"* தனுஷ்கோடியின் அடையாளம் ஆவார்.
*தமிழரின் உணர்வான கோரிக்கை*:-
♦ பெரும்நகரமாக இருந்து அழிந்துள்ள தனுஷ்கோடியின் எல்லை பகுதியில் நினைவு சின்னங்களும், பல உயிர்களை கடலில் நீந்தியே காப்பாற்றிய நீச்சல்காளி அம்பலத்திற்கு திருஉருவ சிலை மற்றும் மண்டபம் அமைத்திட வேண்டும்.
இது அப்பகுதி மக்கள் மட்டுமின்றி அனைவரது நீண்டநாள் வேண்டுகோள்களாகவே உள்ளது. மத்திய, மாநில அரசுகளும் சமூக ஆர்வலர்களும் நினைத்தால் நிச்சயம் இது சாத்தியமாகும்.
(நீச்சல் காளியின் விருப்பமும்-ஏக்கமும் தனுஷ்கோடி நகரம் மீண்டும் மக்களின் வாழ்வு நகரமாக மாற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது).
*வாழ்க "நீச்சல் காளியின் புகழ்"....*
பெருமையுடன் போற்றி வணங்குகிறோம்..🙏
இவண் : *சூரியகுல முத்தரையர் குடும்பம்.*⚔🇪🇸⚔🦁🤝🙏
Muthuraja Network -முத்துராஜா நெட்வொர்க்

No comments:
Post a Comment