Maveeran A.Venkatachalam Mutharaiyar
யார் இந்த AV என்கிற ஆ.வெங்கடாசலனார் ? எதற்காக அனைவரும் அக்டோபர் 7 என்று முழங்குகின்றனர் ? ஏன் அன்று மாவீரர் தினம் , மாவீரன் குருபூஜை, இளைஞர் எழுச்சி நாள் ?
அறிந்து கொள்ளுங்கள்...!
மாவீரன் நினைவு நாள்..!!!
1984 - ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல், அதற்க்கு சில ஆண்டுகளுக்கு முன்பாக தமிழக முதல்வராக இருத்த இதயதெய்வம் எம்.ஜி.ஆர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட "முத்தரையர் மாநாடு" புதுக்கோட்டை மாநகரில் நடைபெறுகிறது, புதுக்கோட்டை மாநகரமே மூச்சுவிட முடியாத அளவிற்க்கு நம் உறவுகள் குவிந்திருக்க வந்திருந்த கூட்டத்தை கண்ட இதயதெய்வம் எம்.ஜி.ஆர் அதே கூட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க ஒரு அறிவிப்பினை வெளியிட்டார் அதுதான் "தமிழக அமைச்சரவையில்" முத்தரையர்களுக்கும் பிரதிநிதிதுவம் என்ற அறிவிப்பு,
அதற்க்கும் முன்பாக பல முத்தரையர்கள் சட்டமன்றம் சென்று இருந்தாலும் "அமைச்சர்" பதவி என்பது கனவாகவே இருந்தது, அந்த நிலையை மாற்றி இப்படி ஒரு அறிவிப்பினை வெளியிட்டு என்றென்றும் "முத்தரையர்களின்" நம்பிக்கையாய் திகழ்ந்த மறைந்த இதய தெய்வம் எம்.ஜி.ஆர் அதே புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் 1984 ஆம் ஆண்டு ஒரு "முத்தரையருக்கு" வாய்பளிக்க வேண்டும் என்று கருதி, அன்றைக்கு துடிப்புமிக்க இளைஞராக இருந்த மறைந்த அய்யா திரு. A.வெங்கடாசலத்தை வேட்பாளராக அறிவிக்கிறார்.
இப்படி எம்.ஜி.ஆரால் அரசியலில் கைகாட்டப்பட்ட திரு. “A.வெங்கடாசலம்” எனும் “ஆலங்குடி வெங்கடாசலம்”, அந்த தேர்தலில் தன்னை எதிர்த்துப்போட்டியிட்ட பெரியண்ணன் என்னும் திமுக பெரும்புள்ளியை மண்ணை கவ்வ வைத்து எதிர் வேட்பாளர் பெற்ற வாக்குகளை விட ஒரு மடங்கு அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் (AV பெற்றது :74202 எதிர் வேட்பாளர் :37173) வெற்றிப்பெற்று முதல்முறையாக சட்டமன்றம் சென்றவர், எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பிறகான இரண்டு தேர்தல்களில் (1989, 1991) வாய்பளிக்கப்படாமல் ஒதுக்கப்பட்டார், சிங்கத்தை எவ்வளவு நாள்தான் அடைத்து வைக்க முடியும் ?
மீண்டும் 1996 ஆம் ஆண்டு தேர்தலில் வாய்ப்புக் கேட்டார் அப்போதும் சிங்கத்தின் பலமறியாத அதிமுக தலைமை வேறு ஒருவரை வேட்பாளராக அறிவித்தது, அந்த தேர்தலில் சுயேட்சையாக களம் இறங்கி அன்று ஒட்டுமொத்த தமிழகத்தில் வீசிய திமுக அலையை முறியடித்து, ஒரே ஒரு சுயேட்சை உறுப்பினராக தமிழக சட்டமன்றத்திற்க்கு இரண்டாவது முறையாக சென்றார், இந்த காலகட்டங்களில் நத்தம் தொகுதியின் " நிரந்தர" சட்டமன்ற உறுப்பினராக இருந்த அய்யா. திரு. ஆண்டிஅம்பலத்துடன் இணைந்து முத்தரையர் சமூகத்திற்காக சட்டமன்றத்தில் பல கோரிக்கைகளை வைத்து வாதாடி வந்தார், இவரின் பலத்தினை அறிந்த அதிமுக தலைமை மீண்டும் 2001 தேர்தலில் வாய்பளித்து வெற்றிப்பெற்று வந்தவருக்கு "அமைச்சர்" பதவியும் கொடுத்து அழகு பார்த்தது. அதற்க்கு அடுத்த தேர்தலில் (2006) "முத்தரையர் சமூகத்தின் பல தலைவர்கள் தேர்தலில் நின்று வோட்டுகளைப் பிரித்ததால்" இரண்டாவது இடத்தைப் பெற்று முதல்முறையாக தோல்வியை சந்தித்தார் (இந்த தேர்தலில் முத்தரையர் சமூகத்தின் மற்றும் ஒரு மதிக்கதக்க தலைவர் திரு. எஸ். ராஜசேகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றிப்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது)
இவ்வாறு எம்.ஜி.ஆரால் அடையாளப்படுத்தப்பட்டு "சுயம்புவாக" வளர்ந்த அய்யா. திரு. வெங்கடாசலத்தினை யாரும் எதிர்பார்க்காத, ஒரு போதும் நினைத்துப்பார்க்க முடியாத ஒரு நிலையில் பெண் வேடமிட்டு வந்த கோழைகள் வெட்டிவீழ்த்திய போது "முத்தரையர்" சமூகத்தின் இதயமே நின்று போனது, இதோ ஆறு ஆண்டுகள் ஆகப்போகிறது (அக்டோபர் 7 ம் நாள்), நம் தலைவனை நாம் மறந்து போனோமா ? அந்த கொலைகார கோழைகளை மறந்துவிட்டோமா ?
நினைவு நாளில் அஞ்சலி செலுத்துவது என் தலைவனின் புகழுக்கு களங்கம் என்பதால்தான் தலைவனின் நினைவிடத்தில் " சபதம் ஏற்க" இளைஞர்படை தயாராகி வருகிறது. இதில் என் இனமான இளைஞர்களை வா..! என நான் அழைப்பது அவமதிப்பதாக இருக்கும் நாம் "சேர்ந்து போவோம் வா..!!" என்று இனமான முத்தரையனை அழைக்கிறேன். வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி இந்த உலகில் வாழும்போதே வரலாறாய் மாறிப்போனது சிலரே..!! அதில் என் தலைவனும் ஒருவன்..!,
எல்லா மக்களுக்கும் சாதிகளை, மதத்தை கடந்து பாதுகாவலனாய் இருந்த மரத்தை விழ்த்த விட்டுவிட்டு நாம் வேடிக்கைப் பார்பது தகுமா ? என் சிங்கங்களே.. அணியணியாய் திரளுவோம் வா...! மிரளட்டும் ஆலங்குடி வடகாடு படைதிரட்டி வா...!! எவனுக்கும் அஞ்சுவது சிங்கத்தின் குணமல்ல...! உறுமலோடு வா..!! உன் தலைவனின் பாதையாய் உன் பாதை மாறட்டும்..,! உலகம் அஞ்சும் வீரத்தின் விளை நிலங்களே வாருங்கள் போவோம் வடகாட்டிற்க்கு..!!!
ஒரு சபதம் ஏற்போம் அந்த தலைவனின் சமாதி தொட்டு... "உன் வழியில் அரசியலை வென்றெடுப்போம்..!" என்று, அந்த தலைவனின் ஆசியோடு இந்த இனம் இனிவரும் காலத்தில் "தமிழகத்தின்" தலையெழுத்தை மாற்றுவதாக இருக்கட்டும்...
No comments:
Post a Comment