Breaking

Wednesday, 18 November 2020

முத்தரையர்கள் வளர்த்த நீர் மேலாண்மை வரலாறு பதிவு-1

முத்தரையர்கள் வளர்த்த நீர் மேலாண்மை வரலாறு பதிவு-1


முத்தரையர்கள் தமிழ் நிலத்தின் ஆதிகுடிமக்கள்.சங்க இலக்கியம் கூறும் மூத்தகுடி மக்கள்.இவர்கள் கடல்,நிலம்,மலை,காடு என அனைத்து பகுதியிலும் வாழக்கூடிய மக்கள்.எந்த இடத்தில் வாழ்ந்தாலும் அந்த இடத்தில் வாழ்வுக்கு ஏற்றவைகளை உருவாக்கி வாழ்ந்தவர்கள் முத்தரையர் சமுக மக்கள்.குறிப்பாக ஆதியில் வேட்டையாடுதல்,மீன் பிடித்தல்,முத்து எடுத்தல்,கடல் வணிகம், நெல் விவசாயம்,காய்கறிகள் விளைவித்து வணிகம் செய்தல்,பழங்கள் விளைவித்தல் போன்று இடத்திற்க்கு ஏற்ப வாழ்ந்தவர்கள் முத்தரையர் சமுக மக்கள்.இதில் விவசாயத்திற்க்கு பெரும்பங்கு நீர் மட்டுமே மூலகாரணமாகும்.ஆகையால் நீர் மேலாண்மைக்கு சிறந்த பல பணிகளை புதிதாக உருவாக்கியவர்கள் முத்தரையர்கள்.அதன் வரலாறுகள் தமிழகத்தின் நீர் மேலாண்மைக்கு முக்கியம் வாய்ந்தவை.

திருக்குறள்;
நீர்இன்று அமையாது உலகெனின்யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.
திருவள்ளுவர் கூற்றுக்கு ஏற்ப வாழ்பவர்கள் முத்தரையர்கள்.

முத்தரையர்கள் வளர்ந்த நீர் மேலாண்மை:
                      முத்தரையர்கள் நீர் மேலாண்மைக்கு முதன்மையாக கூற வேண்டும் என்றால் அது நம் 
கரிகால் வளவன் காவேரி அன்னையின் மேல் எழுப்பிய கல்லனையைதான் நாம் முதலில் கூறவேண்டும்.கல்லனை தமிழ் இனத்தின் பெரும் அடையாளம்.
டெல்டா மண்டலத்தின் விவசாயத்தை தீர்மானிக்கும் அணையாக இன்றுவரை உள்ளது.(விரிவாக அடுத்த பதிவுகளில் பார்ப்போம்)

முத்தரையர்கள் நீர் மேலாண்மையை வளர்த்த வகைகள்:
                   *கல்லனை
                   *ஏரி
                   *மதகு,குமிழி
                   *கிணறு
                   *அகழி
                   *கண்மாய்
                   *ஊரணி
                   *குளம்,குட்டை 
 பல ஆயிரம் ஆண்டுகளாக நீர் மேலாண்மையை அமைத்தும் அதை பாதுகாத்தும்,பராமரித்தும்,மக்கள் பயன்பாட்டிற்க்கு அமைத்து 
நீர் மேலாண்மைக்கு சிறந்தவர்களாக முத்தரையர் பெருங்குடி விளங்குகிறது.

முத்தரையர்கள் வளர்த்த நீர் மேலாண்மை பற்றிய வரலாறு செய்திகளை அடுத்தடுத்த பதிவுகளாக விரிவாக பதிவு செய்வோம்...
மேலும் உங்கள் பகுதியில் உள்ள முக்கியம் வாய்ந்த நீர் மேலாண்மைக்கு சிறந்த விளங்க கூடிய ஏரி,கண்மாய்கள் போன்றவைகள் இருந்தால் தெரிவியுங்கள்..

நன்றி...

சமுக வரலாறு பணியில்,
  ஏ.எஸ்.கலையரசன் அம்பலகாரர்
  முத்தரையர் வரலாறு ஆய்வுக்கூடம்


b>

No comments:

Post a Comment