Breaking

Tuesday 30 November 2021

தானமநாடு சேந்தன்குடி ஜமீன் வழுவாடிதேவர்

 தானமநாடு 

 ஜமீன் வழுவாடிதேவர்




முத்தரையர் ஜமீன் என்பதை சொல்லும் பழனி_கோவில் செப்பு பட்டயம்

முத்தரையர் செப்பேடு

இடம்:
காலம்: செய்தி:

கோவை மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், சுணியூர் கலியுகம் 4774:சகம 1596, கி.பி.1673,

முத்தரையர் தோற்றம், பெருகி வளர்ந்த வரலாறு, குடியேறிய இடங்கள், ஆட்சி செய்த இடங்கள், செய்த திருப்பணிகள் இவைகளை விரிவாகக் கூறி அவர்கள் அனைவரும் கூடி பழனியில் மடம் ஒன்று கட்டி அதற்குக் கொடுக்க வேண்டிய சமுதாய வரி முதலியவைகளை இச்செப்பேடு விளக்குகிறது. பழனியில் ஒன்று கூடிய வன்னிமுத்தரசர் முத்தரையர்கள் இனத்தைச் சேர்ந்தவர். கி.பி. 1674ஆம் திருவாவினன்குடிக்குக் கீழ்புறம், சரவணப் பொய்கைக்குத் ஆண்டு தென்மேல்புறம் மடம் ஒன்றைத் தங்கள் பெயரில் உருவாக்கினர். வேலாயுத உடையான் மகன் கொளந்தைவேலு உடையான் வசம் மடத்தை நிர்வாகத்துக்கு அளித்தனர். முத்தரையர்கள் அனைவரும் பெரிய ஊருக்கு 10 பணமும், சிறிய ஊருக்கு 5 பணமும் கொடுக்க வேண்டும் பண்ணையத்துக்கு 2 பணமும், பயலாள்கள் ஒரு பணமும் கொடுக்க வேண்டும். திருமணத்திற்கு மாப்பிள்ளை வீடும் பெண் வீடும் இரண்டிரண்டு பணம் கொடுக்க வேண்டும் தேருக்கு ஒரு பணம் கொடுக்க வேண்டும். குற்றத்திற்கு விதிக்கும் தண்டனைப் பொருளில் மூன்றில் ஒன்று மடத்திற்குக்கொடுக்க வேண்டும் மடத்தில் பரதேசிகட்கு உப்பு, ஊறுகாய், நீராகரம் கொடுக்க வேண்டும். அடியார்கட்கு அன்னமிட வேண்டும் என்று விரிவாகச் செப்பேடு எழுதி கொளந்தைவேலு உடையான் வசம் கொடுத்தனர். இச்செப்பேட்டு வாசகம் எழுதியவர் இராமசாமிக் கவிராயர்
என்பவர்.


No comments:

Post a Comment