வலையர் குடி சோழ முத்தரையர் சாம்ராஜ்யம்
வலையர் குடி சோழ முத்தரையர் சாம்ராஜ்யம்.
காவிரிக்கு கரை அமைத்து அதில் கல்லணை கட்டிய, சோழ சாம்ராஜுயத்தை உருவாக்கிய மாமன்னர் கரிகாலசோழன் முத்தரையர்.
கரிகாலசோழன் முத்தரையர் வழிவந்த ஆந்திரா ரேநாட்டு சோழர்கள்.
ஆந்திரா ரேநாட்டு சோழர்கள் வழிவந்த பொத்தப்பி சோழர்கள்.
ரேநாட்டில் சோழர்கள் ஒரு நாட்டை மூன்றாக பிரித்து ஆண்டு வந்ததை கல்வெட்டுக்கள் குறிப்பிடுகிறது. ரேநாட்டு சோழர்கள் ஆட்சி முறை அதாவது, நந்திவர்மசோழனுக்கு மூன்று மகன்கள் இருந்துள்ளனர். இதில்,
முதல் மகன் : சிம்மவிஷ்ணுசோழன் யுவராஜா
இரண்டாவது மகன் : சுந்தரநந்தாசோழன் அதிராஜா
மூன்றாவது மகன் : தனஞ்சயசோழன் முத்துராஜா
இதில், முதல் மகன் சிம்மவிஷ்ணுசோழன் யுவராஜாவிற்கு மகப்பேறு இல்லை. யுவராஜா பட்டத்தில் இருப்பவர் தான் அடுத்த சோழ நாட்டின் சோழராஜாவாக முடிசூடுபவராவர்.
இரண்டாவது மகன் சுந்தரநந்தாசோழன் அதிராஜா பட்டத்திற்கு உரியவர். இவரின் வழிவந்தவர்களே பொத்தப்பி சோழர்கள் மற்றும் பிற்கால சோழர்கள் ஆவார். சுந்தரநந்தாசோழன் அதிராஜா நாட்டை ஆண்டவர்கள் தான் பொத்தப்பி சோழர்கள் ஆவார். அதிராஜா நாட்டை ஆண்ட பொத்தப்பி சோழர் ஸ்ரீ காந்தன் முத்தரையர் ஆவார். இவர் தான் விஜயாலயசோழன் தந்தை ஆவார். சுந்தரநந்தாசோழன் அதிராஜா வழிவந்தவரே தஞ்சை பெருவுடையார் கோயில் கட்டிய ராஜராஜசோழன் முத்தரையர் ஆவார்.
மூன்றாவது மகன் தனஞ்சயசோழன் முத்துராஜா ஆவார். இவர் தான் சோழர் வம்சத்தின் இளைய மரபினர் ஆவார். தனஞ்சயசோழன் முத்துராஜா வழிவந்தவர் தான் பேரண்டம் போற்றும் சோழ பேரரசர் பெரும்பிடுகு சுவரன்மாறன் முத்தரையர்.
இந்த மூன்று மகன்களும் ஒரே நாட்டை மூன்றாக பிரித்து ஆட்சி செய்துள்ளனர் என ரேநாட்டு சோழர்கள் ஆட்சி செய்த கல்வெட்டுக்களில் அறியலாம். இது போல தான் தமிழகத்திலும் ஆட்சி புரிந்துள்ளனர் என்பது தெளிவாகிறது.
No comments:
Post a Comment