வேட்டுவரும் வலையரும்
"வேட்டுவரும் வலையரும்"
இன்று தமிழகத்தில் பல குடி மக்கள் வாழ்கிறார்கள். அனால் இவர்களில் சிலர் மட்டுமே சங்க இலக்கியத்தில் இடம் பெற்றார்கள். சங்க இலக்கியத்தில் இடம் பெற்றவர்கள் தான் மிகவும் பழமையான தமிழ் மக்கள். இவர்களில் சிலர் வேட்டுவர், வலையர், குறும்பர், குறவர், பறையர் போன்றவை.
வலையர்கள் பண்டைய காலத்தில் வலைஞர் மற்றும் வலைவர் என்று அழைக்கப்பட்டார்கள்.
சங்க இலக்கிய நூலில் ஒன்று பட்டினப்பாலை. பட்டினப்பாலையில் ஒரு பாடல் வருகிறது. அந்த பாடலில் காவேரி பூம்பட்டினத்தில் வாழும் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்தார்கள் என்று வருகிறது.
அந்த பாடல் "நீர் நாப்பண்ணும் நிலத்தின் மேலும்
ஏமாப்ப இனிது துஞ்சி
கிளை கலித்து பகை பேணாது
வலைஞர் முன்றில் மீன் பிறழவும்
விலைஞர் குரம்பை மா ஈண்டவும்
கொலை கடிந்தும் களவு நீக்கியும்".
இந்த பாடல் நம் வலையர் குடி முன்னோர்களை பற்றி குறிப்பிட்டு பேசுகிறது. அதாவது காவேரி பூம்பட்டினத்தில் வலையர்களின் வீடு குளத்தில் மீன் துள்ளி கொண்டு இருக்கிறது என்று இப்பாடல் சொல்கிறது. சங்க காலத்தில் இருந்து இன்று வரைக்கும் வலையர்கள் காவேரி பூம்பட்டினத்தில், அதாவது நாகப்பட்டினம் மாவட்டத்தில் வாழ்ந்து கொண்டு தான் வருகிறார்கள்.
சங்க இலக்கிய பாடல்களில் வலையர் மதுரையில் வாழ்ந்த பாடலும், தொண்டைமண்டலத்தில் வாழ்ந்த பாடலும் கூட காணலாம். ஆக வலையர்கள் அணைத்து பகுதியிலும் வாழ்ந்த பூர்வ குடி மக்கள்.
என்னதான் வலையர் என்ற பெயர் சங்க இலக்கியத்தில் தனியாக இருந்தாலும் வலையர்கள் வேட்டுவரே!
ஆம் வலையர் வேட்டுவர் தான். சொல்ல வேண்டும் என்றால் வலையரும் வேட்டுவரும் ஒரே மக்கள் தான். இதுக்கு பல ஆதாரங்கள் உண்டு.
வாங்க பாப்போம்.
1950 வருடம் வெளிவந்த "AGRICULTURAL WAGES AND EARNINGS OF PRIMARY PRODUCERS IN CEYLON" என்கிற புத்தகத்தில் "வேடர், வலையர், வேட்டுவர்" ஒன்றாக போட்டு இவர்கள் சேலம், கோவை மாவட்டத்தில் வேட்டை குடியினர் என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள். இவர்கள் போல பலர் வலையருக்கும், வேட்டுவருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கு என்று குறிப்பிட்டு உள்ளார்கள்.
உதாரணமாக எட்கர் தர்ஸ்டன் 1909 வருடம் வெளிவந்த " CASTE AND TRIBES OF SOUTHERN INDIA" என்கிற புத்தகத்தில் வலையர்க்கும் வேட்டுவருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கு என்றும் வலையர்களின் முன்னோர் கண்ணப்ப நாயனார் என்று குறிப்பிட்டு உள்ளார்.
கண்ணப்பர் நாயனார் வேட்டுவர் குடியை சேர்ந்தவர். வலையர் மக்கள் தங்களை கண்ணப்பர் நாயனார் வழிவந்தவர்கள் என்றும் கூறி கொள்வார்கள் மற்றும் தமிழகத்தில் கண்ணப்பர் நாயனாருக்கு மிக பெரிய விழா எடுப்பது கூட வலையர்களே ஆவார்கள். ஆக இதுவும் வலையர்களும் வேட்டுவர்களும் ஒருவர் என்று நிரூபிக்கிறது.
அது மட்டும் அல்லாமல் 1921 வருடம் வெளிவந்த "அகத்தியமகாமுனிவர் திரட்டியருளிய தேவாரத்திரட்டு" என்கிற புத்தகத்தில் வலையர்களை "கேவேடர்" என்று குறிப்பிட்டு உள்ளது.
கி.பி 1157 வாழ்ந்த நிஷாதராஜன் என்ற ஒரு அரசன் திருமயத்தில் இருக்கும் ஒரு கோவிலுக்கு நன்கொடை செய்து உள்ளார் மற்றும் இவரின் இனத்தவர்கள் உள்வரும் வெளியேறும் வணிக பொருளுக்கும் வணிகர்களுக்கும் பாதுகாப்பு கொடுத்து உள்ளார்கள்.
இந்த நிஷாதராஜன் மன்னர் ராஜேந்திர சோழன் கேரளன் என்று அழைக்கப்பட்டார். இவர் வாழ்ந்த மற்றும் ஆட்சி புரிந்த இடம் பொன்னமராவதி. பொன்னமராவதில் வலையர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதி மற்றும் பொன்னமராவதி இன்று வலையர்களின் கோட்டையாக கருதப்படுகிறது. நிஷாதராஜன் பற்றி தகவல் 1988 வெளிவந்த "SOUTH ASIAN STUDIES" என்கிற புத்தகத்தில் குறிப்பிட்டு உள்ளது. மேலும் புத்தகத்தில் நிஷாதராஜன் அரசன் வலையர் என்று குறிப்பிட்டு உள்ளது. நிஷாதராஜன் அரசன் இயற்கையால் நிறைந்த காட்டில் வாழ்ந்த வேட்டைக்காரன். நிஷாதராஜன் என்கிற வார்த்தை சமஸ்க்ரிதம் வார்த்தை. இதுக்கு தமிழில் பொருள் "வேட்டுவராஜன் அல்லது வேட்டுவர் அரசர்". இதிலிருந்து வலையரும் வேட்டுவரும் ஒருவரே என்கிற முடிவுக்கு நாம் வரலாம்.
இது போல பல ஆதாரம் சொல்லலாம். வரும் காலத்தில் இன்றும் நிறைய பார்ப்போம். வலையர் வேட்டுவர் ஒரே மக்கள்.
💥நன்றி : வலைஞர் அரசன்
💥 மறுபதிப்பு : முத்தரையர் வரலாற்று பக்கம்
No comments:
Post a Comment